
ஐசிசி டி20 உலகக் கோப்பை இந்த ஆண்டு ஜூனில் அமெரிக்கா மற்றும் வெஸ்ட் இண்டிஸில் நடைபெறவுள்ளது. இந்த டி20 உலகக் கோப்பைத் தொடருக்கான அட்டவணையை அண்மையில் ஐசிசி வெளியிட்டது. இந்திய அணி தனது முதல் போட்டியில் அயர்லாந்துடன் விளையாடுகிறது. அதன்பின் தனது இரண்டாவது போட்டியில் பாகிஸ்தானை எதிர்கொள்கிறது.
இந்திய அணியின் மூத்த வீரர்களான ரோஹித் சர்மா மற்றும் விராட் கோலி கடைசியாக சர்வதேச டி20 போட்டியில் விளையாடி 14 மாதங்கள் ஆகின்றன. ஆஃப்கானிஸ்தானுக்கு எதிரான 3 போட்டிகள் கொண்ட டி20 தொடருக்கான இந்திய அணியில் இவர்கள் இருவரும் இடம்பெற்றுள்ளதால் இவர்கள் மீதான எதிர்பார்ப்புகளும் ரசிகர்கள் மத்தியில் அதிகரித்துள்ளது.
இந்த நிலையில், டி20 உலகக் கோப்பைக்கான இந்திய அணியில் மூத்த வீரர்களான ரோஹித் சர்மா மற்றும் விராட் கோலி இடம்பெற வேண்டுமென இந்திய அணியின் முன்னாள் கேப்டன் சௌரவ் கங்குலி தெரிவித்துள்ளார்.