ரவீ சாஸ்திரியின் கருத்துக்கு பதிலடி கொடுத்தார் ரோஹித் சர்மா!
முதல் இரு டெஸ்டுகளிலும் வெற்றி பெற்றதால் அதீத நம்பிக்கையுடன் இருப்பதாகக் கூறுவது தவறு என இந்திய அணியின் கேப்டன் ரோஹித் சர்மா கூறியுள்ளார்.
ஆஸ்திரேலியாவுக்கு எதிரான டெஸ்ட் தொடரில் இந்திய அணி 2-1 என முன்னிலை வகிக்கிறது . இதில் இந்தூரில் நடைபெற்ற 3ஆவது டெஸ்டை ஆஸ்திரேலியா வென்றது. இந்நிலையில் இரு அணிகளுக்கும் இடையேயான 4ஆவது டெஸ்ட் ஆகமதாபாத்தில் நாளை தொடங்குகிறது.
இந்நிலையில் 3-வது டெஸ்டில் இந்திய அணி சிறிது அதீத நம்பிக்கையுடன் விளையாடியதாக இந்திய முன்னாள் பயிற்சியாளர் ரவி சாஸ்திரி கூறியிருந்தார்.
Trending
இந்நிலையில் இந்திய அணி மீதான விமர்சனம் குறித்து கேப்டன் ரோஹித் சர்மா கூறுகையில், “இரண்டு டெஸ்ட் போட்டியை வென்றால் வெளியே இருப்பவர்கள் நாங்கள் அதிக நம்பிக்கையுடன் இருக்கிறோம் என்று நினைத்துக் கொள்வார்கள். இந்த பேச்சு அனைத்தும் குப்பையில் போட வேண்டும். நீங்கள் எப்போதுமே உங்கள் அணிக்காக சிறந்த ஆட்டத்தை வெளிப்படுத்தவே நினைப்பீர்கள்.
வெறும் இரண்டு போட்டியில் வெற்றி பெற்றுவிட்டு அனைத்தையும் நிறுத்திக் கொள்ள யோசிக்க மாட்டீர்கள். எங்கள் அணியில் என்ன நடக்கிறது என்று தெரியாமல் சிலர் நாங்கள் அதிக நம்பிக்கையுடன் இருப்பதாக கூறி வருகிறார்கள். நாங்கள் ஒவ்வொரு போட்டிக்கு முன்பு என்ன பேசிக் கொள்கிறோம் என்று உங்களுக்கு தெரியுமா?
கடுமையாக விளையாட வேண்டும் என்ற ஒரு வார்த்தை மட்டுமே மனதுக்கு வருகிறது. எங்களுடைய எதிரணிக்கு கொஞ்சம் கூட நாங்கள் இடம் கொடுக்க யோசிக்கிறோம். நாங்கள் வெளிநாட்டில் சென்று விளையாடும்போது எதிரணி வீரர்கள் எங்களையும் அப்படி தான் எதிர்கொள்வார்கள். அதை தான் நாங்களும் செய்ய விரும்புகிறோம். நாங்கள் அதிக நம்பிக்கையுடன் அலட்சியமாக இருப்பதாக வெளியே இருக்கும் நபர்கள் நினைக்கிறார்கள் என்றால் எங்களால் ஒன்றும் செய்ய முடியாது.
ரவி சாஸ்திரி ஏற்கனவே இந்திய அணியின் பயிற்சியாளராக இருந்தார். அவருக்கு வீரர்கள் எப்படி தயாராவோம்? என்ன பேசிக் கொள்வோம் என்று அனைத்தும் தெரியும். ஆனால் அப்படியும் அவர் இப்படி பேசியது ஏற்றுக்கொள்ள முடியாது. நாங்கள் அலட்சியமாகவும் அதிக நம்பிக்கையுடனும் இருக்கவில்லை. நாங்கள் இப்போதும் கடுமையாக தான் எதிர் அணியை கையாளுகிறோம்” என்று பதிலடி கொடுத்துள்ளார்.
Win Big, Make Your Cricket Tales Now