
இந்தியா வந்துள்ள ஆஸ்திரேலிய அணி நான்கு போட்டிகள் கொண்ட டெஸ்ட் தொடரில் பங்கேற்று விளையாடி வருகிறது. இதில் முதல் இரண்டு போட்டிகளில் பேட்டிங், பந்துவீச்சு இரண்டிலும் அபாரமாக செயல்பட்ட இந்திய அணி, நம்பர் 1 அணியான ஆஸ்திரேலிய அணியை மூன்று நாட்களுக்குள் காலிசெய்து அபார வெற்றியைப் பெற்று 2-0 என்ற கணக்கில் முன்னிலை வகித்தது.
இதனைத் தொடர்ந்து மூன்றாவது டெஸ்ட் போட்டி இந்தூரில் தொடங்கி நடைபெற்றது. இப்போட்டியில் முதலில் களமிறங்கிய இந்திய அணியில் வழக்கம்போல, டாப் ஆர்டர் பேட்டர்கள் படுமோசமாக சொதப்பினார்கள். சரி, ரெகுலராக கை கொடுக்கும் லோயர் மிடில் வரிசை பேட்டர்களாவது அணியை தூக்கி நிறுத்துவார்களா என எதிர்பார்த்த நேரத்தில், அவர்களும் அடுத்தடுத்து விக்கெட்களை பறிகொடுத்து சொதப்பினார்கள். இதனால், இந்திய அணி முதல் இன்னிங்ஸில் 109/10 ரன்ளுக்கு சுருண்டது.
இப்படி முதல் இன்னிங்ஸில் 109 என்ற மட்டமான ஸ்கோரை அடித்ததால்தான், இந்திய அணிக்கு பின்னடைவு ஏற்பட்டது. இதனைத் தொடர்ந்து இரண்டாவது இன்னிங்ஸில் புஜாரா 59 (142) மட்டும்தான் பெரிய ஸ்கோர் அடித்தார். மற்றவர்கள் சொதப்பியதால், 163/10 ரன்களை மட்டும்தான் அடிக்க முடிந்தது. இறுதியில் 9 விக்கெட்கள் வித்தியாசத்தில் தோல்வி.