ரஞ்சி கோப்பை 2024-25: சொற்ப ரன்களுக்கு ஆட்டமிழந்த ரோஹித், கில், ஜெய்ஸ்வால், பந்த்!
மோசமான ஃபார்மில் தொடர்ந்து போராடி வரும் இந்திய கேப்டன் ரோஹித் சர்மா மற்றும் ஷுப்மான் கில் ஆகியோர், ரஞ்சி கோப்பை போட்டிகளில் சொற்ப ரன்களுக்கு ஆட்டமிழந்து ரசிகர்களுக்கு அதிர்ச்சி கொடுத்துள்ளனர்.
ரஞ்சி கோப்பை கிரிக்கெட் தொடரின் 2024-25 சீசனின் முதல் கட்ட போட்டிகள் நிறைவடைந்துள்ள நிலையில், இரண்டாம் கட்டம் எதிர்வரும் இன்று (ஜனவரி 23)முதல் நடைபெறவுள்ளது. இத்தொடரின் முதல் கட்டத்தை விட இரண்டாம் கட்ட போட்டிகளுக்கான எதிர்பார்ப்புகள் அதிகரிக்க தொடங்கியுள்ளன. ஏனெனில் இத்தொடரில் இந்திய அணியின் முன்னணி வீரர்கள் பலரும் விளையாடவுள்ளனர்.
இதற்கு காரணம் இந்திய அணி சமீபத்தில் ஆஸ்திரேலியாவில் சுற்றுப்பயணம் மேற்கொண்டு 5 போட்டிகள் கொண்ட பார்டர் கவாஸ்கர் கோப்பை டெஸ்ட் தொடரில் 3-1 என்ற கணக்கில் இந்திய அணி இத்தொடரை இழந்துள்ளதுடன், உலக டெஸ்ட் சாம்பியன்ஷிப் தொடரின் இறுதிப்போட்டிக்கான வாய்ப்பையும் தவறவிட்டது. இந்த படுமோசமான தோல்வியின் காரணமாக இந்திய அணி மீது கடுமையான விமர்சனங்கள் எழுந்தன.
Trending
அதுமட்டுமில்லாமல் இந்த தொடரில் பேட்டர்கள் சொதப்பியதற்கு காரணம் அவர்கள் உள்ளூர் போட்டிகளை தவிர்த்து வருவது தான் என்றும் குற்றச்சாட்டுகள் எழுந்தன. இதையடுத்து சமீபத்தில் நடைபெற்று முடிந்த பிசிசிஐ பொதுக்குழு கூட்டத்தில் வீரர்களுக்கு பல்வேறு கட்டுப்பாடுகளும் விதிக்கப்பட்டிருந்தன. அதில் மிக முக்கியானது அனைத்து வீரர்களும் இந்தியாவில் நடைபெறும் உள்ளூர் போட்டிகளில் பங்கேற்க வேண்டும் என்பது கட்டாயமாக்கப்பட்டுள்ளது.
இந்நிலையில் மோசமான ஃபார்மில் தொடர்ந்து போராடி வரும் இந்திய கேப்டன் ரோஹித் சர்மா மற்றும் இளம் நட்சத்திர பேட்ஸ்மேன் ஷுப்மான் கில் ஆகியோர், ரஞ்சி கோப்பை போட்டிகளில் சொற்ப ரன்களுக்கு ஆட்டமிழந்துள்ளது ரசிகர்களை அதிர்ச்சியில் ஆழ்த்தியுள்ளது. அதன்படி, ஜம்மு காஷ்மீர் அணிக்கு எதிரான ரஞ்சி கோப்பை போட்டியில் மும்பை அணிக்காக விளையாடிவரும் இந்திய கேப்டன் ரோஹித் சர்மாவும் 3 ரன்களை மட்டுமே எடுத்த நிலையில் ஆட்டமிழந்தார்.
அதேசமயம் மற்றொரு தொடக்க வீரர் யஷஸ்வி ஜெய்ஸ்வால் 4 ரன்களைச் சேர்த்த நிலையில் விக்கெட்டை இழக்க, ஸ்ரேயாஸ் ஐயர் 11 ரன்களுக்கும், மும்பை அணி கேப்டன் அஜிங்கியா ரஹானே 12 ரன்களுக்கும் என விக்கெட்டுகளை இழந்துள்ளனர். அதேசமயம் கர்நாடகா - பஞ்சாப் அணிகளுக்கு இடையேயான போட்டியில் இந்திய வீரர் ஷுப்மன் கில் 8 பந்துகளில் 4 ரன்களை மட்டுமே எடுத்த கையோடு ஆட்டமிழந்து ஏமாற்றமளித்தார்.
Star Indian Batters in Ranji Trophy Today!#RohitSharma #ShubmanGill #YashasviJaiswal #RishabhPant #India #ShreyasIyer #AjinkyaRahane pic.twitter.com/Ptlewsqa9D
— CRICKETNMORE (@cricketnmore) January 23, 2025
Also Read: Funding To Save Test Cricket
இவர்களைத் தவிர்த்து நடப்பு ரஞ்சி கோப்பை போட்டியில் டெல்லி அணிக்காக விளையாடி வரும் ரிஷ்ப் பந்த் ஒரு ரன் மட்டுமே எடுத்த நிலையில் ஆட்டமிழந்துள்ளார். இப்படி இந்திய அணியின் முன்னணி பேட்ஸ்மேன்கள் அடுத்தடுத்து சொற்ப ரன்களுக்கு ஆட்டமிழந்திருப்பது ரசிகர்கள் மத்தியில் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது. இதனால் இனி வரும் போட்டிகளில் இவர்களது செயல்பாடுகள் எவ்வாறு இருக்கும் என சந்தேகமும் ரசிகர்கள் மத்தியில் அதிகரித்துள்ளது குறிப்பிடத்தக்கது.
Win Big, Make Your Cricket Tales Now