
ஐபிஎல் தொடரின் 18ஆவது சீசன் இன்னும் சில தினங்களில் தொடங்கவுள்ளன. இதற்காக ஒவ்வொரு அணியும் தீவிரமாக தயாராகி வருகின்றனர். அதிலும் குறிப்பாக இம்முறை ஸ்ரேயாஸ் ஐயர் தலைமையில் களமிறங்கும் பஞ்சாப் கிங்ஸ் அணி மீதான எதிர்பார்ப்புகளும் அதிகரித்துள்ளன.
இந்நிலையில், பஞ்சாப் கிங்ஸ் அணியின் நட்சத்திர வீரர் ஷஷாங்க் சிங் சமீபத்திய பாட்காஸ்ட் நிகழ்ச்சி ஒன்றில் தன்னுடைய ஆல் டைம் ஐபிஎல் லெவனைத் தேர்ந்தெடுத்துள்ளார். அவர் தேர்வு செய்துள்ள இந்த அணியில் அவர் 9 இந்திய வீரர்களையும் இரண்டு வெளிநாட்டு வீரர்களையும் மட்டுமே சேர்த்துள்ளார். அதன்படி அணியின் தொடக்க விரர்களாக சச்சின் டெண்டுல்கர் மற்றும் ரோஹித் சர்மாவின் பெயரை அவர் குறிப்பிட்டார்.
அவர்களைத் தொடர்ந்து மூன்றாம் இடத்தில் விராட் கோலியையும், நான்காம் இடத்தில் சுரேஷ் ரெய்னாவையும், 5ஆம் இடத்தில் ஏபி டி வில்லியர்ஸையும் தேர்வு செய்துள்ள அவர் 6ஆம் இடத்தில் மகேந்திர சிங் தோனியின் பெயரை சேர்த்துள்ளார். மேற்கொண்டு அணியின் ஆல் ரவுண்டராக ஹர்திக் பாண்டியாவையும், சுழற்பந்து வீச்சாளராக யுஸ்வேந்திரா சஹாலையும் அவர் தனது அணியில் தேர்ந்தெடுத்துள்ளார்.