
ஐபிஎல் தொடரின் 18ஆவது சீசன் இன்னும் சில தினங்களில் தொடங்கவுள்ளன. இதற்காக ஒவ்வொரு அணியும் தீவிரமாக தயாராகி வருகின்றனர். அதிலும் குறிப்பாக இம்முறை ஸ்ரேயாஸ் ஐயர் தலைமையில் களமிறங்கும் பஞ்சாப் கிங்ஸ் அணி மீதான எதிர்பார்ப்புகளும் அதிகரித்துள்ளன.
இந்நிலையில், எதிர்வரும் ஐபிஎல் தொடரில் பஞ்சாப் கிங்ஸ் அணியின் பிளேயிங் லெவன் என்னவாக இருக்கும் என்பது குறித்து அந்த அணியின் நட்சத்திர வீரர் ஷஷாங்க் சிங் தேர்வு செய்துளார். இதுகுறித்து பேசிய அவர், ஐபிஎல் 2025 தொடரில் ஜோஷ் இங்கிலிஸ் மற்றும் பிரப்ஷிம்ரன் சிங் ஜோடி பஞ்சாப் அணியின் தொடக்க வீரர்களாக இடம்பெறுவார்கள் என்றும், மூன்றாவது வரிசையில் ஸ்ரேயாஸ் ஐயர் விளையாடுவார் என்றும் தெரிவித்துள்ளார்.
அதன்பின் 4ஆம் வரிசையில் மார்கஸ் ஸ்டொய்னிஸும், ஐந்தாவது இடத்தில் கிளென் மேக்ஸ்வெல்லும், 6ஆம் இடத்தில் தானும் 7ஆம் இடத்தில் நெஹால் வதேராவும் விளையாடுவோம் என்றும் கூறியுள்ளார். இதுதவிர்த்து லெவனில் மேலும் ஒரு ஆல் ரவுண்டராக மார்கோ ஜான்சனை தேர்வு செய்துள்ள அவர் யுஸ்வேந்திர சஹால், ஹர்பிரீத் பிரார் மற்றும் அர்ஷ்தீப் சிங் அகியோரும் லெவனில் இடம்பெறுவார்கள் என்று தனது கணிப்பை வெளிப்பாடுத்தியுள்ளார்.