Advertisement

ஷுப்மன் கில், ரிஷப் பந்த் ஆகியோரிடம் கேப்டனுக்கான திறன் உள்ளது - ரவி சாஸ்திரி!

நீங்கள் யாரையேனும் கேப்டன் பதவிக்காக தயார்படுத்த விரும்பினால், நிச்சயம் அது ஷுப்மன் கில் என்று தான் நான் கூறுவேன் என முன்னாள் பயிற்சியாளர் ரவி சாஸ்திரி தெரிவித்துள்ளார்.

Advertisement
ஷுப்மன் கில், ரிஷப் பந்த் ஆகியோரிடம் கேப்டனுக்கான திறன் உள்ளது - ரவி சாஸ்திரி!
ஷுப்மன் கில், ரிஷப் பந்த் ஆகியோரிடம் கேப்டனுக்கான திறன் உள்ளது - ரவி சாஸ்திரி! (Image Source: Google)
Bharathi Kannan
By Bharathi Kannan
May 16, 2025 • 11:15 PM

ஜூன் மாதம் முதல் இங்கிலாந்து மற்றும் இந்திய அணிகளுக்கு இடையே ஐந்து போட்டிகள் கொண்ட டெஸ்ட் தொடரானது நடைபெற உள்ளது. மேற்கொண்டு இது உலக டெஸ்ட் சாம்பியன்ஷிப் தொடரின் ஒரு அங்கமாக நடைபெறவுள்ள காரணத்தால் இதன் மீதான எதிர்பார்ப்புகளும் ரசிகர்கள் மத்தியில் அதிகரித்துள்ளது.

Bharathi Kannan
By Bharathi Kannan
May 16, 2025 • 11:15 PM

இந்நிலையில் இத்தொடருக்கு முன்னதாக இந்திய டெஸ்ட் அணியின் கேப்டனாக செயல்பட்டு வாந்த ரோஹித் சர்மா மற்றும் இந்திய அணியின் நட்சத்திர வீரர் விராட் கோலியும் சர்வதேச டெஸ்ட் கிரிக்கெட்டில் இருந்து ஓய்வை அறிவித்துள்ளதால், அவர்களின் இடத்தை யார் நிரப்புவார்கள் என்ற கேள்விகள் அதிகரித்துள்ளன. அதேசமயம் இத்தொடரில் இந்திய அணியின் கேப்டனாக யார் நியமிக்கப்படுவார் என்ற சந்தேகங்களும் அதிகரித்து வருகின்றன.

முன்னதாக இந்திய அணியின் அடுத்த கேப்டனாக ஜஸ்பிரித் பும்ரா நிய்மிக்கப்படுவார் என்ற எதிர்பார்ப்புகள் அதிகரித்திருந்தன. ஆனால் காயம் மற்றும் பணிச்சுமை காரணமாக பும்ராவை கேப்டனாக நியமிக்க பிசிசிஐ விரும்பவில்லை என்று கூறப்பட்டது. இதனால் யார் அடுத்த கேப்டன் என்ற கேள்விகள் அதிகரித்துள்ளது. இந்நிலையில் இந்திய அணியின் முன்னாள் தலைமை பயிற்சியாளர் ரவி சாஸ்திரி தனது கருத்தை தெரிவித்துள்ளார். 

இதுகுறித்து பேசிய அவர், “நீங்கள் யாரையேனும் கேப்டன் பதவிக்காக தயார்படுத்த விரும்பினால், நிச்சயம் அது ஷுப்மன் கில் என்று தான் நான் கூறுவேன். அவருக்கு ஒரு வாய்ப்பு கொடுங்க. அவர் தற்போது 25, 26 வயது தான் ஆகிரது அதனால் அவருக்கு தேவையான நேரம் உள்ளது. மேலும் அவருடன் ரிஷப் பந்தும் உள்ளார். இவர்களுடைய வயது, ஒரு தசாப்தம் முன்னால் இருப்பது போன்ற காரணங்களால், நான் இவர்களைப் பார்ப்பது வெளிப்படையானது என்று நினைக்கிறேன்.

அவர்களுக்கு கேப்டன்களாக அனுபவம் உள்ளது. இப்போது ​​அவர்களின் ஐபிஎல் அணிக்கு கேப்டனாக இருப்பது ஒரு வித்தியாசத்தை ஏற்படுத்துகிறது. ஷுப்மானின் சிறிய அனுபவம் மிகவும் சுவாரஸ்யமாகத் தெரிகிறது. மேலும் அவர் மிகவும் அமைதியானவர், அவருக்கு எல்லா குணங்களும் உள்ளன. ஆனால் அனைவரும் அவர் வெளிநாடுகளில் ரன்களைச் சேர்க்கவில்லை என்று கூறுவது எனக்கு தெரியும். மேலும் ஒவ்வொரு முறையும் இந்த விமர்சனம் எழுந்து வருகிறது.

Also Read: LIVE Cricket Score

சில நேரங்களில் நான் அவர்களிடம், உங்கள் சொந்த பதிவைப் பாருங்கள், நீங்கள் வெளிநாட்டில் எவ்வளவு செய்திருக்கிறீர்கள்? என்ற கேள்வியை கேட்பேன். அதனால் வெளிநாடு, வெளிநாடு என்று கூறாமல் அவரை விளையாட அனுமதிக்க வேண்டும். அவர் ஒரு தரமான வீரர். இந்திய அணிக்கக அவருக்கு இன்னும் ஒரு தசாப்த கால கிரிக்கெட் அனுபவம் காத்திருக்கிறது. மேலும், இந்த சுற்றுப்பயணங்களில் ஒன்றில் அவர் சிறப்பாக செயல்படுவார் என்று நான் உறுதியாக நம்புகிறேன்” என்று கூறிவுள்ளார்.

Advertisement

Win Big, Make Your Cricket Tales Now

Advertisement