
இந்தியா - ஆஸ்திரேலிய அணிகளுக்கு இடையேயான பார்டர் கவாஸ்கர் கோப்பை தொடர் விறுவிறுப்பாக நடைபெற்று வருகிறது. முதல் போட்டியில் இந்திய அணி அபார வெற்றி பெற்ற நிலையில், தற்போது 2ஆவது போட்டிக்கான ஏற்பாடுகள் நடந்து வருகின்றன. இந்த போட்டி வரும் பிப்ரவரி 17ஆ ம் தேதி முதல் 21ஆம் தேதி வரை டெல்லியில் உள்ள அருண் ஜெய்ட்லி மைதானத்தில் நடைபெறவுள்ளது. இதற்கான பிளேயிங் 11 குழப்பம் தற்போது இருந்தே சூடுபிடித்துள்ளது.
இந்திய அணியை பொறுத்தவரையில் கடந்த போட்டியில் மிடில் ஆர்டரில் மோசமாக சொதப்பியது. லோயர் ஆர்டரில் மட்டும் ஜடேஜா - அக்ஷர் ஆகியோர் காப்பாற்றவில்லை என்றால் சிரமம் ஏற்பட்டிருக்கும். இந்த சிக்கலுக்கு காரணம் ஸ்ரேயாஸ் ஐயர் இல்லாதது தான். முதுகில் ஏற்பட்ட பிரச்சினை காரணமாக முதல் டெஸ்டில் இருந்து விலகிய அவர், அடுத்த போட்டியில் வந்துவிடுவார் எனக்கூறப்பட்டது.
அதன்படி பெங்களூரு தேசிய கிரிக்கெட் அகாடமியில் ஸ்ரேயாஸ் ஐயர், முழுமையாக குணமடைந்துவிட்டார் எனக்கூறப்பட்டுள்ளது. உடற்தகுதி தேர்விலும் தேர்ச்சியடைந்துவிட்டதாகவும் தகவல்கள் வெளியாகின. எனினும் அவரை 2வது டெஸ்ட் போட்டிக்கு அவரை சேர்க்க இந்திய அணி தயாராக இல்லை என தெரிகிறது. இதற்கு காரணம் புதிய விதிமுறை தான்.