
இந்திய ஏ அணி தற்சமயம் இங்கிலாந்தில் சுற்றுப்பயணம் செய்து இங்கிலாந்து லையன்ஸ் அணிக்கு எதிரான இரண்டு அதிகாரப்பூர்வமற்ற டெஸ்ட் போட்டியில் விளையாடி வருகிறது. இதில் நடந்து முடிந்த முதல் போட்டியானது டிராவில் முடிவடைந்தது.
இதனையடுத்து இரு அணிகளுக்கும் இடையேயான இரண்டாவது அதிகாரப்பூர்வ டெஸ்ட் போட்டியானது நார்தாம்டனில் எதிர்வரும் ஜூன் 6ஆம் தேதில் நடைபெறவுள்ளது. இந்நிலையில் இப்போட்டிக்கான இந்திய ஏ அணில் இந்திய அணியின் புதிய டெஸ்ட் கேப்டன் ஷுப்மன் கில் மற்றும் அறிமுக வீரர் சாய் சுதர்ஷன் ஆகியோர் இடம்பிடிக்க மாட்டார்கள் என்ற தகவல் வெளியாகிவுள்ளது. முன்னதாக இவர்கள் இருவரும் இரண்டாவது போட்டியில் இந்திய ஏ அணியுடன் இணைவார்கள் என்று அறிவிக்கப்பட்டது.
அதனைத்தொடர்ந்து அவர்கள் இருவரும் இங்கிலாந்துக்கு எதிரான ஐந்து போட்டிகள் கொண்ட டெஸ்ட் தொடரில் விளையாடுவார்கள் என்று கூறப்பட்டது. ஆனால் தற்போது ஷுப்மன் கில் மற்றும் சாய் சுதர்ஷன் ஆகியோர் ஜூன் 6ஆம் தேதி செல்லும் இந்திய அணியுடன் இணைந்து இங்கிலாந்து செல்லவுள்ளதாகவும், இதன் காரணமாக அவர்கள் இருவரும் இந்திய ஏ அணியில் இடம்பிடிக்க வாய்ப்பில்லை என்று கூறப்படுகிறது.