
நடப்பு ஐசிசி ஒருநாள் கிரிக்கெட் உலகக்கோப்பை தொடர் தற்பொழுது இந்தியாவில் மிகவும் பரபரப்பாக நடைபெற்று வருகிறது. இந்த நிலையில் ஐசிசி தன்னுடைய ஒருநாள் கிரிக்கெட் தரவரிசை பட்டியலை வெளியிட்டு இருக்கிறது. இதில் பல மிக முக்கிய மாற்றங்கள் ஏற்பட்டு இருக்கிறது என்பது குறிப்பிடத்தக்கது.
ஐசிசி ஒருநாள் கிரிக்கெட் தரவரிசை பட்டியலில் 950 நாட்களுக்குப் பிறகு பாபர் ஆசாமை முதலிடத்தில் இருந்து கீழே இறக்கி இந்தியாவின் இளம் வீரர் ஷுப்மன் கில் முதலிடத்திற்கு முன்னேறி இருக்கிறார். தற்பொழுது ஐசிசி ஒருநாள் கிரிக்கெட் தரவரிசை பட்டியலில் 830 புள்ளிகளுடன் ஷுப்மன் கில் முதல் இடத்தில் இருக்கிறார். பாபர் அசாம் 824 புள்ளிகள் உடன் இரண்டாம் இடத்திற்கு தள்ளப்பட்டு இருக்கிறார்.
இப்பட்டியளில் தென் ஆப்பிரிக்காவின் குயின்டன் டிகாக் 771 புள்ளிகள் உடன் மூன்றாம் இடத்திலும், இந்திய வீரர் விராட் கோலி 770 புள்ளிகள் உடன் நான்காம் இடத்திலும், ஆஸ்திரேலியாவின் டேவிட் வார்னர் 743 புள்ளிகள் உடன் ஐந்தாம் இடத்திலும், இந்திய அணி கேப்டன் ரோஹித் சர்மா 739 புள்ளிகள் உடன் 6ஆம் இடத்திலும் இருக்கிறார்கள்.