
ஜிம்பாப்வே அணியின் நட்சத்திர ஆல் ரவுண்டர் மற்றும் அணியின் கேப்டனாக அறியபடுபவர் சிக்கந்தர் ரஸா. இவர் சர்வதேச கிரிக்கெட் மட்டுமின்றி பல்வேறு நாடுகள் நடத்தும் ஃபிரான்சைஸ் லீக் போட்டிகளிலும் பங்கேற்று விளையாடியுள்ளார். இதனால் ஒவ்வொரு பேட்ஸ்மேன் மற்றும் பந்துவீச்சாளரின் பலம் மற்றும் பலவீனங்களை அவர் நன்கு அறிந்திருக்கிறார். இதற்கிடையில், ஜிம்பாப்வே கேப்டன் சமீபத்தில் சமூக ஊடகங்களில் உலகம் முழுவதும் உள்ள தனது ரசிகர்களுக்காக கேள்வி-பதில் அமர்வை நடத்தினார்.
தனது ரசிகர்களுடனான சமூக வலைதள அமர்வின் போது சிக்கந்தர் ரஸா ரசிகர்கஈன் பல கேள்விகளுக்கு பதிலளித்தார். அப்போது ரசிகர் ஒருவர் சிக்கந்தர் ரஸாவிடம் பாகிஸ்தானுக்காக விளையாட நினைத்தீர்களா என்ற கேள்வியை எழுப்பினார். அதற்கு பதிலளித்த அவர், தான் பாகிஸ்தானில் பிறந்தாலும், ஜிம்பாப்வே கிரிக்கெட்டின் தயாரிப்பு என்றும், ஜிம்பாப்வேக்காக மட்டுமே விளையாட விரும்புவதாகவும் தெரிவித்திருந்தார்.
இதுகுறித்து ரஸா தனது பதிவில்,"நான் ஒரு பாகிஸ்தானியாக பிறந்தாலும், ஜிம்பாப்வே கிரிக்கெட்டின் தயாரிப்பு. நான் எப்போதும் ஜிம்பாப்வேயை பிரதிநிதித்துவப்படுத்துவேன். அவர்கள் எனக்காக நேரத்தையும் பணத்தையும் செலவழித்துள்ளனர், நான் அவர்களின் நம்பிக்கையை திருப்பித் தர முயற்சிக்கிறேன், நான் அடையும் எதுவும் அந்த நம்பிக்கையைத் திருப்பித் தராது. ஜிம்பாப்வே என்னுடையது. மேலும் நான் அவர்களுக்கு முற்றிலும் சொந்தமானவன்" என்று தெரிவித்துள்ளார்.