-mdl.jpg)
இலங்கையில் சுற்றுப்பயணம் செய்துவரும் ஆஃப்கானிஸ்தான் அணி 3 போட்டிகள் கொண்ட டி20 தொடரில் விளையாடியது. இத்தொடரின் முதலிரண்டு போட்டிகளிலும் இலங்கை அணி வெற்றிபெற்று 2-0 என்ற கணக்கில் டி20 தொடரைக் கைப்பற்றியது. இதையடுத்து இரு அணிகளுக்கும் இடையேயான மூன்றாவது டி20 போட்டி இன்று நடைபெற்றது. தம்புளாவில் நடைபெற்ற இப்போட்டியில் டாஸ் வென்ற ஆஃப்கானிஸ்தான் அணி முதலில் பேட்டிங் செய்வதாக அறிவித்தது.
அதன்படி களமிறங்கிய ஆஃப்கானிஸ்தான் அணிக்கு ஹஸ்ரதுல்லா ஸஸாய் - ரஹ்மனுல்லா குர்பாஸ் இணை தொடக்கம் கொடுத்தனர். ஆரம்பம் முதலே அதிரடியான ஆட்டத்தை வெளிப்படுத்திய இருவரும் முதல் 6 ஓவர்களில் 72 ரன்களைச் சேர்த்து அசத்தினர். அதன்பின் இருவரும் இணைந்து 88 ரன்கள் பார்ட்னர்ஷிப் அமைத்த நிலையில் 6 பவுண்டரி, 2 சிக்சர்கள் என 45 ரன்களைச் சேர்த்திருந்த ஹஸ்ரதுல்லா ஸஸாய் தனது விக்கெட்டை இழந்தார்.
அவரைத்தொடர்ந்து களமிறங்கிய கேப்டன் இப்ராஹிம் ஸத்ரானும் 10 ரன்களில் தனது விக்கெட்டை இழந்தார். பின்னர் ஜோடி சேர்ந்த ரஹ்மனுல்லா குர்பாஸ் - அஸ்ரதுல்லா ஒமர்ஸாய் இணையும் அதிரடியான ஆட்டத்தை வெளிப்படுத்தி ஸ்கோரை உயர்த்தினர். இதில் ரஹ்மனுல்லா குர்பாஸ் தனது அரைசதத்தைப் பதிவுசெய்தார். பின் 70 ரன்கள் எடுத்திருந்த குர்பாஸ் தனது விக்கெட்டை இழக்க, அவரைத்தொடர்ந்து 31 ரன்களில் அஸ்மதுல்லா ஒமர்ஸாயும் ஆட்டமிழந்தார்.