Advertisement

விராட் கோலி தொடக்க வீரராக களமிறங்க வேண்டும் - சௌரவ் கங்குலி!

விராட் கோலி வரவுள்ள டி20 உலகக்கோப்பை கிரிக்கெட் தொடரில் தொடக்க வீரராக களமிறங்க வேண்டும் என முன்னாள் வீரர் சௌரவ் கங்குலி தெரிவித்துள்ளார்.

Bharathi Kannan
By Bharathi Kannan May 10, 2024 • 20:25 PM
விராட் கோலி தொடக்க வீரராக களமிறங்க வேண்டும் - சௌரவ் கங்குலி!
விராட் கோலி தொடக்க வீரராக களமிறங்க வேண்டும் - சௌரவ் கங்குலி! (Image Source: Google)
Advertisement

ஐசிசி டி20 உலகக்கோப்பை கிரிக்கெட் தொடரானவது வரவுள்ள ஜூன் மாதம் வெஸ்ட் இண்டீஸ் மற்றும் அமெரிக்காவில் நடைபெறவுள்ளது. மொத்தம் 20 அணிகள் பங்கேற்கும் இத்தொடரில் எந்த அணி கோப்பையை வென்று சாம்பியன் பட்டத்தை கைப்பற்றும் என்ற எதிர்பார்ப்புகள் அதிகரித்துள்ளன. அதேசமயம் இத்தொடரில் பங்கேற்கும் ஒவ்வொரு நட்டு கிரிக்கெட் வாரியங்கும் தங்களது வீரர்களை அறிவித்து வருகின்றனர். 

அந்தவகையில் பிசிசிஐ, சமீபத்தில் ரோஹித் சர்மா தலைமையிலான இந்திய அணியை அறிவித்தது. இதில் பெரிதும் எதிர்பார்க்கப்பட்ட விராட் கோலி, சஞ்சு சாம்சன், ரிஷப் பந்த், யுஸ்வேந்திர சஹால் உள்ளிட்ட நட்சத்திர வீரர்கள் இடம்பிடித்துள்ளனர். அதேசமயம் சூர்யகுமார் யாதவ், ஜஸ்ப்ரித் பும்ரா, யஷஸ்வி ஜெய்ஸ்வால், முகமது சிராஜ், ஹர்திக் பாண்டியா, ரவீந்திர ஜடேஜா உள்ளிட்ட வீரர்களும் அணியில் சேர்க்கப்பட்டுள்ளனர். 

Trending


இந்நிலையில் இத்தொடருக்கு தயாராகும் வகையில் இந்திய வீரர்கள் ஐபிஎல் தொடரில் சிறப்பான ஆட்டத்தை வெளிப்படுத்தி வருகின்றனர். அதிலும் குறிப்பாக விராட் கோலி நடப்பு ஐபிஎல் தொடரில் தொடர்ச்சியாக அபார ஆட்டத்தை வெளிப்படுத்தி ரன்களை குவித்து வருகிறார். அதன்படி இந்த ஐபிஎல் தொடரில் இதுவரை 12 போட்டிகளில் விளையாடியுள்ள விராட் கோலி, ஒரு சதம் 5 அரைசதங்களுடன் 634 ரன்களைச் சேர்த்து ஆரஞ்சு தொப்பியை தன்வசம் வைத்துள்ளார். 

இந்நிலையில், ஐபிஎல் தொடரில் தொடக்க வீரராக களமிறங்கி தொடர்ச்சியாக ரன்களை குவித்து வரும் விராட் கோலி வரவுள்ள டி20 உலகக்கோப்பை கிரிக்கெட் தொடரில் தொடக்க வீரராக களமிறங்க வேண்டும் என முன்னாள் வீரர் சௌரவ் கங்குலி தெரிவித்துள்ளார். இதுகுறித்து பேசிய அவர், “விராட் சிறப்பாக விளையாடி வருகிறார். நேற்றிரவு கோலி பேட்டிங் செய்த விதம் அருமையாக இருந்தது. மேலும் அவர் விரைவாக 90 ரன்களைக் குவித்து அசத்தினார்.

 

நீங்கள் நிச்சயம் அவரை டி20 உலகக் கோப்பையில் தொடக்க ஆட்டக்காரராகப் பயன்படுத்த வேண்டும். அவர் ஒரு சிறந்த தொடக்க வீரர் என்பதற்கு, அவரது கடைசி சில ஐபிஎல் இன்னிங்ஸ்களே சாட்சியாக உள்ளது. இது ஒரு சிறந்த அணி. அவர்கள் சிறந்த அணியைத் தேர்ந்தெடுத்திருக்கிறார்கள் என்று நினைக்கிறேன். பேட்டிங்கின் ஆழம் தவிர, பந்துவீச்சு தேர்வுகள் சிறப்பாக உள்ளது” என்று தெரிவித்துள்ளார்.


Win Big, Make Your Cricket Tales Now

Cricket Scorecard

Advertisement