சர்வதேச டி20 கிரிக்கெட்டில் தனித்துவ சாதனை படைத்த சுஃபியான் முகீம்!
சர்வதேச டி20 கிரிக்கெட் வரலாற்றில் மிகவும் சிக்கனமான பந்துவீச்சின் மூலம் ஐந்து விக்கெட்டுகளை கைப்பற்றி வீரர் எனும் சாதனையை சுஃபியான் முகீம்ம் சமன் செய்தார்.
ஜிம்பாப்வே மற்றும் பாகிஸ்தான் அணிகளுக்கு இடையேயான இரண்டவது டி20 போட்டி புலவாயோவில் இன்று நடைபெற்றது. இப்போட்டியில் டாஸ் வென்ற ஜிம்பாப்வே அணி முதலில் பேட்டிங் செய்வதாக அறிவித்தது. அதன்படி முதலில் பேட்டிங் செய்த ஜிம்பாப்வே அணியில் தொடக்க வீரர்களைத் தவிர்த்து வேறெந்த வீரரும் இரட்டை இலக்கை ரன்களை எட்டாமல் விக்கெட்டை இழந்தனர்.
இதனால் அந்த அணி 12.4 ஓவர்களிலேயே அனைத்து விக்கெட்டுகளையும் இழந்து 57 ரன்களுக்கு ஆல் அவுட்டானது. பாகிஸ்தான் தரப்பில் சிறப்பாக பந்துவீசிய சுஃபியான் முகீம் 2.4 ஓவர்களை வீசி வெறும் 3 ரன்கள் விட்டுக்கொடுத்து 5 விக்கெட் வீழ்த்தி அசத்தினார். இதனையடுத்து எளிய இலக்கை நோக்கி விளையாடிய பாகிஸ்தான் அணிக்கு ஒமைர் யூசுஃப் - சைம் அயூப் இணை தொடக்கம் கொடுத்தனர். இருவரும் இணைந்து பொறுப்பான ஆட்டத்தை வெளிப்படுத்தி அணியை வெற்றியை நோக்கி அழைத்துச் சென்றர்.
Trending
இதில் ஒமைர் யூசுஃப் 22 ரன்களையும், சைம் அயூப் 36 ரன்களையும் சேர்க்க, பாகிஸ்தான் அணி 5.3 ஓவர்களிலேயே இலக்கை எட்டியதுடன் 10 விக்கெட் வித்தியாசத்தில் ஜிம்பாப்வே அணியி வீழ்த்தி வெற்றிபெற்றது. இந்த வெற்றியின் மூலம் பாகிஸ்தான் அணி 2-0 என்ற கணக்கில் டி20 தொடரையும் வென்றது. இதில் அபார பந்துவீச்சை வெளிப்படுத்திய சுஃபியான் முகீம் ஆட்டநாயகன் விருதை வென்றார்.
இந்நிலையில், இப்போட்டியில் சுஃபியான் முகீம் 5 விக்கெட்டுகளை கைபற்றியதன் மூலம் சாதனை பட்டியலிலும் இணைந்துள்ளார். அதன்படி சர்வதேச டி20 கிரிக்கெட் வரலாற்றில் மிகவும் சிக்கனமான பந்துவீச்சின் மூலம் ஐந்து விக்கெட்டுகளை கைப்பற்றி வீரர் எனும் ரங்கனா ஹெர்தின் சாதனை சமன் செய்தார். இதற்கு முன் ரங்கனா ஹெர்த் கடந்த 2014ஆம் ஆண்டு நியூசிலாந்துக்கு எதிராக 3.3 ஓவர்களை வீசி 3 ரன்களை மட்டுமே கொடுத்து 5 விக்கெட்டுகளை வீழ்த்தியதே இதுநாள் வரை சாதனையாக உள்ளது.
இந்நிலையில் அதனைத் தற்போது சுஃபியான் முகீம் இன்றைய போட்டியின் மூலம் சமன்செய்துள்ளார். மேற்கொண்டு சர்வதேச டி20 கிரிக்கெட்டில் பாகிஸ்தான் அணிக்காக மிகச்சிறந்த பந்துவீச்சை வெளிப்படுத்திய வீரர் எனும் சாதனையையும் முகீம் படைத்துள்ளார். இதற்கு முன் கடந்த 2009ஆம் அண்டு நியூசிலாந்து அணிகு எதிரான போட்டியில் பாகிஸ்தானின் உமர் குல் 6 ரன்களுக்கு 5 விக்கெட்டுகளை கைப்பற்றியதே சாதனையாக இருந்தது குறிப்பிடத்தக்கது.
சர்வதேச டி20 கிரிக்கெட்டில் 5 ரன்களுக்கு குறைவாக கொடுத்து 5 விக்கெட்டுகளை வீழ்த்திய வீரர்கள்
- ரங்கனா ஹெர்த் (இலங்கை) - 3.3 ஓவர்களில் 3 ரன்கள் 5 விக்கெட்டுகள் - நியூசிலாந்துக்கு எதிராக (2009)
- சுஃபியான் முகீம் (பாகிஸ்தான்) - 2.4 ஓவர்களில் 3 ரன்கள் 5 விக்கெட்டுகள் - ஜிம்பாப்வேவுக்கு எதிராக (2024)
- ரஷித் கான் (ஆஃப்கானிஸ்தான்) - 2 ஓவர்களில் 3 ரன்கள் 5 விக்கெட்டுகள் - அயர்லந்துக்கு எதிராக (2017)
- புவனேஷ்வர் குமார் (இந்தியா) - 4 ஓவர்களில் 4 ரன்கள் 5 விக்கெட்டுகள் - ஆஃப்கானிஸ்தானுக்கு எதிராக (2022)
Also Read: Funding To Save Test Cricket
சர்வதேச டி20 கிரிக்கெட்டில் பாகிஸ்தானுக்காக சிறப்பான பந்துவீச்சை வெளிப்படுத்திய வீரர்கள்
- சுஃபியான் முகீம் - 2.4 ஓவர்களில் 3 ரன்கள் 5 விக்கெட்டுகள் - ஜிம்பாப்வேவுக்கு எதிராக (2024)
- உமர் குல் - 3 ஓவர்களில் 6 ரன்கள் 5 விக்கெட்டுகள் - நியூசிலாந்துக்கு எதிராக (2009)
- உமர் குல் - 2.2 ஓவர்களில் 6 ரன்கள் 5 விக்கெட்டுகள் - தென் ஆப்பிரிக்காவுக்கு எதிராக (2013)
- இமாத் வசீம் - 4 ஓவர்கள் 14 ரன்கள் 5 விக்கெட்டுகள் - வெஸ்ட் இண்டீஸுக்கு எதிராக (2016)
Win Big, Make Your Cricket Tales Now