
இந்திய அணி தற்போது ஆஸ்திரேலியா அணியுடனான பார்டர் கவாஸ்கர் கோப்பையில் கலக்கி வருகிறது. இதுவரை நடந்துள்ள 2 டெஸ்ட் போட்டிகளிலும் வெற்றி பெற்று வலுவான நிலைக்கு சென்றுள்ளது. இதற்கு முன்னர் தொடர்ச்சியாக 3 முறை இந்த கோப்பையை வென்றுள்ள இந்திய அணி, இந்த முறையும் அந்த கோப்பையை ஆஸ்திரேலியாவுக்கு விட்டு தரவில்லை. இதனால் ரோஹித் சர்மாவின் கேப்டன்சிக்கு பாராட்டுக்கள் குவிந்து வருகிறது.
இந்த வெற்றிகள் மூலம் இந்தியாவின் ஐசிசி கோப்பை கனவு அதிகரித்துள்ளது. 2013ஆம் ஆண்டுக்கு பிறகு ஒரு ஐசிசி கோப்பையை கூட வெல்லாமல் உள்ள இந்திய அணிக்கு இந்த முறை 2 வாய்ப்புகள் உள்ளன. அதாவது இன்னும் ஒரு டெஸ்டில் வெற்றி பெற்றால் கூட டெஸ்ட் சாம்பியன்ஷிப் இறுதிப்போட்டிக்கு இந்தியா முன்னேறிவிடும். இதே போல ஒருநாள் உலகக்கோப்பையும் இந்தியாவில் தான் நடைபெறவுள்ளது.
இந்நிலையில் இந்த இரண்டையும் வென்றுக்கொடுக்க வேண்டும் என சுனில் கவாஸ்கர் கோரிக்கை வைத்துள்ளார். இதுகுறித்து பேசிய அவர், “ஒரு அணி சாம்பியன் பட்டத்தை வென்று மகிழ்ச்சியில் இருந்தால் அதில் நாமும் இருக்க வேண்டும் என்ற எண்ணம் வரும். ஒரு கேப்டனாக ரோஹித் சர்மா சிறப்பான ஃபார்மில் விளையாடி வரும் போது தான் அனைத்துமே சரியான பாதையில் செல்கிறது என்பது தெரியவரும்.