Advertisement

விராட் கோலி தொடக்க வீரராக களமிறங்க வேண்டும் - அஜய் ஜடேஜா!

டி20 உலகக்கோப்பை தொடருக்கான இந்திய அணியின் யஷஸ்வி ஜெய்ஸ்வாலுடன் விராட் கோலி தொடக்க வீரராக களமிறங்க வேண்டும் என்றும், ரோஹித் சர்மா மூன்றாம் வரிசையில் விளையாட வேண்டும் எனவும் முன்னாள் வீரர் அஜய் ஜடேஜா தெரிவித்துள்ளார்.

Advertisement
விராட் கோலி தொடக்க வீரராக களமிறங்க வேண்டும் - அஜய் ஜடேஜா!
விராட் கோலி தொடக்க வீரராக களமிறங்க வேண்டும் - அஜய் ஜடேஜா! (Image Source: Google)
Bharathi Kannan
By Bharathi Kannan
May 03, 2024 • 03:31 PM

ஐசிசியின் டி20 உலகக்கோப்பை தொடர் அடுத்த மாதம் வெஸ்ட் இண்டீஸ் மற்றும் அமெரிக்காவில் நடைபெற உள்ளது. மொத்தம் 20 அணிகள் கலந்துகொள்ளும் இத்தொடரின் மீதான எதிர்பார்ப்புகளும் நாளூக்கு நாளு ரசிகர்கள் மத்தியில் அதிகரித்த வண்ணமே உள்ளன. இந்நிலையில் இத்தொடருக்காக தற்போது ஒவ்வொரு நாட்டு கிரிக்கெட் வாரியமும் தங்களது அணிகளை அறிவித்து வருகின்றன.

Bharathi Kannan
By Bharathi Kannan
May 03, 2024 • 03:31 PM

அந்தவகையில் ரோஹித் சர்மா தலைமையிலான இந்திய அணியை பிசிசிஐ சமீபத்தில் அறிவித்தது. இதில் சஞ்சு சாம்சன், ஷிவம் தூபே, யுஸ்வேந்திர சஹால் போன்ற வீரர்களுக்கு வாய்ப்பு வழங்கப்பட்டுள்ளது. அதேசமயம் பெரிதும் எதிர்பார்க்கப்பட்ட ரிங்கு சிங், நடராஜன், கேஎல் ராகுல் போன்ற வீரர்களுக்கு இந்த இந்திய அணியின் வாய்ப்பு வழங்கப்படவில்லை.  இந்நிலையில் இந்திய அணியின் பிளேயிங் லெவன் எவ்வாறு அமையும் என முன்னால் வீரர்கள் தங்கள் கருத்துகளை தெரிவித்து வருகின்றனர். 

Trending

அந்தவகையில் நடப்பு டி20 உலகக்கோப்பை தொடருக்கான இந்திய அணியின் யஷஸ்வி ஜெய்ஸ்வாலுடன் விராட் கோலி தொடக்க வீரராக களமிறங்க வேண்டும் என்றும், ரோஹித் சர்மா மூன்றாம் வரிசையில் விளையாட வேண்டும் எனவும் முன்னாள் வீரர் அஜய் ஜடேஜா தெரிவித்துள்ளார். இதுகுறித்து பேசிய அவர், உங்கள் அணியில் விராட் கோலி இருந்தால், அவரது நிலைத்தண்டு என்ன என்பது உங்களுக்கு நன்றாக தெரியும். எனவே நீங்கள் அவரை தொடக்க வீரராக பயன்படுத்தலாம். 

மேலும் அவர் டாப் ஆர்டரில் சிறப்பாக விளையாடுவதுடன், பவர்பிளேவிலும் அதிரடியாக விளையாடுகிறார். அதுமட்டுமின்றி சுழற்பந்து வீச்சாளர்களுக்கு எதிராகவும் அவர் சிறப்பான ஆட்டத்தை வெளிப்படுத்தி வருகிறார். அதனால் அவர் லெவனில் இருக்கும் பட்சத்தில் அவரை தொடக்க வீரராக களமிறக்குவதே என்னுடைய தேர்வு. வேண்டுமானல் நீங்கள் ரோஹித் சர்மாவை மூன்ற வரிசையில் களமிறக்கலாம்” என்று தெரிவித்துள்ளார். 

இந்திய அணி: ரோஹித் சர்மா, யஷஸ்வி ஜெயஸ்வால், விராட் கோலி, சூர்யகுமார் யாதவ், சஞ்சு சாம்சன், ரிஷப் பந்த், ஹர்திக் பாண்டியா, ஷிவம் தூபே, ரவீந்திர ஜடேஜா, அக்ஸர் படேல், யுஸ்வேந்திர சஹால், குல்தீப் யாதவ், ஜஸ்ப்ரித் பும்ரா, முகமது சிராஜ், அர்ஷ்தீப் சிங். 

ரிஸர்வ் வீரர்கள் - ஷுப்மன் கில், ரிங்கு சிங், கலீல் அஹ்மத், ஆவேஷ் கான்

Advertisement

Win Big, Make Your Cricket Tales Now

Advertisement