பார்டர் கவாஸ்கர் கோப்பை: இந்திய அணிக்கு 4 நெட் பவுலர்கள் சேர்ப்பு!
பார்டர் கவாஸ்கர் டெஸ்ட் தொடரில் புதிதாக நான்கு பவுலர்கள் சேர்க்கப்பட்டுள்ளனர். அதில் இரண்டு தமிழக வீரர்களும் இடம்பிடித்துள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது.
இந்தியா மற்றும் ஆஸ்திரேலியா அணிகள் இடையே பாரம்பரியமாக நடைபெற்று வரும் பார்டர் கவாஸ்கர் கோப்பை டெஸ்ட் தொடர், இந்த ஆண்டு இந்தியாவில் நடைபெற இருக்கிறது. வருகிற பிப்ரவரி ஒன்பதாம் தேதி தொடங்குகிறது.
மொத்தம் நான்கு டெஸ்ட் போட்டிகள் கொண்ட இந்த தொடர் இம்முறை வழக்கத்தை விட கூடுதல் விறுவிறுப்புடன் இருக்கப்போகிறது. ஏனெனில் ஆஸ்திரேலியா அணி கடைசியாக நடந்த மூன்று பார்டர் கவாஸ்கர் தொடரையும் இழந்திருக்கிறது.
Trending
ஆகையால் இம்முறை கைப்பற்ற வேண்டும் என்கிற முனைப்பில் கடுமையாக பயிற்சி ஈடுபட்டு வருகிறது ஆஸ்திரேலியா அணி. அதேநேரம் இந்திய அணிக்கு இந்த டெஸ்ட் தொடர் இன்னும் முக்கியமானதாக இருக்கிறது. இந்த டெஸ்ட் தொடரை கைப்பற்றினால் மட்டுமே உலக டெஸ்ட் சாம்பியன்ஷிப் இறுதி போட்டிக்கு முன்னேற முடியும்.
இந்த டெஸ்ட் போட்டியில் இருப்பாரா? மாட்டாரா? என்கிற சந்தேகத்தில் இருந்த ரவீந்திர ஜடேஜா, தனது முழு உடல்தகுதியை நிரூபித்து மீண்டும் அணிக்குள் திரும்பி இருக்கிறார். இது இந்திய அணிக்கு பலமாக இருக்கிறது.
அத்துடன் இந்திய அணி பயிற்சிக்காக 4 வலைப்பயிற்சி பந்துவீச்சாளர்களை சேர்த்திருக்கிறது. அதில் வாஷிங்டன் சுந்தர் மற்றும் சாய் கிஷோர் இரண்டு தமிழக வீரர்களும், சவுரப் குமார் மற்றும் ராகுல் சஹர் ஆகிய இரண்டு வீரர்களும் சேர்க்கப்பட்டிருக்கின்றனர்.
Win Big, Make Your Cricket Tales Now