
இந்தியாவில் சுற்றூப்பயணம் மேற்கொண்டுள்ள வங்கதேச அணியானது 2 போட்டிகள் கொண்ட டெஸ்ட் தொடர் மற்றும் 3 போட்டிகள் கொண்ட டி20 தொடர்களில் விளையாடவுள்ளது. இவ்விரு அணிகளுக்கும் இடையேயான டெஸ்ட் இத்தொடரானது செப்டம்பர் 19ஆம் தேதி முதல் தொடங்கவுள்ளது. அதன்படி, செப்டம்பர் 19ஆம் தேதி தொடங்கும் முதல் டெஸ்ட் போட்டியானது சென்னை சேப்பாக்கத்தில் உள்ள எம் ஏ சிதம்பரம் கிரிக்கெட் மைதானத்தில் நடைபெறவுள்ளது.
இந்நிலையில் வங்கதேச அணிக்கு எதிரான முதல் டெஸ்ட் போட்டியில் விளையாடும் இந்திய அணி சமீபத்தில் அறிவிக்கப்பட்டுள்ளது. ரோஹித் சர்மா தலைமையிலான இந்த அணியில் இந்திய அணிக்கு மீண்டும் கம்பேக் கொடுத்துள்ள ரிஷப் பந்திற்கு வாய்ப்பு கிடைத்துள்ளது. அதேசமயம் அறிமுக வேகப்பந்து வீச்சாளரான யாஷ் தயாளிற்கும் இப்போட்டியில் விளையாடும் வாய்ப்பானது வழங்கப்பட்டுள்ளது.
அதேசமயம், நேற்றைய தினம் இந்த டெஸ்ட் தொடருக்கான வங்கதேச அணியை அந்நாட்டு கிரிக்கெட் வாரியம் அறிவித்துள்ளது. அதன்படி நஜ்முல் ஹொசைன் சாண்டோ தலைமையிலான இந்த அணியில், காயம் காரணமாக வேகப் பந்துவீச்சாளர் ஷோரிஃபுல் இஸ்லாம் சேர்க்கப்படாத நிலையில், அவருக்குப் பதிலாக அறிமுக வீரரான ஜேக்கர் அலி அனிக் இந்த அணியில் சேர்க்கப்பட்டுள்ளார். மேற்கொண்டு பாகிஸ்தான் தொடரில் விளையடிய வீரர்களே இத்தொடரிலும் இடம்பிடித்துள்ளனர்.