
ஐசிசி டி20 உலகக்கோப்பை தொடரின் மீதான எதிர்பார்ப்புகள் அதிகரித்து வருகின்றன. இதில் ரோஹித் சர்மா தலைமையில் களமிறங்கும் இந்திய அணியானது ஜூன் 1ஆம் தேதி வங்கதேச அணிக்கு எதிரான பயிற்சி போட்டியில் விளையாடுகிறது. அதனைத்தொடர்ந்து ஜூன் 05ஆம் தேதி நடைபெறும் தங்களது முதல் ஆட்டத்தில் அயர்லாந்து அணியை எதிர்த்து விளையாடவுள்ளது. அதன்படி இவ்விரு அணிகளுக்கு இடையேயான இப்போட்டியானது நியூயார்க்கில் உள்ள நசாவ் கிரிக்கெட் மைதானத்தில் நடைபெறுகிறது.
இந்நிலையில் இப்போட்டிக்காக தயாராகி வரும் இந்திய அணியின் பிளேயிங் லெவன் எவ்வாறு இருக்கும் என்ற கணிப்பை இப்பதிவில் பார்க்கலாம். அதன்படி இந்திய அணியின் தொடக்க வீரர்களாக கேப்டன் ரோஹித் சர்மாவுடன் யஷ்ஸ்வி ஜெய்ஸ்வால் களமிறங்குவார் என எதிர்பார்க்கப்படுகிறது. ஏனெனில் வலது - இடது காம்பினேஷன் மூலம் இந்திய அணிக்கு கூடுதல் சாதகம் கிடைக்கும். மேற்கொண்டு மூன்றாம் வரிசையில் விராட் கோலி களமிறக்கப்படுவார்.
அதனைத்தொடர்ந்து மிடில் ஆர்டரில் சூர்யகுமார் யாதவும், விக்கெட் கீப்பராக ரிஷப் பந்த் இருபதற்கு அதிகபடியான வாய்ப்புகள் உள்ளனர். மேற்கொண்டு ஆல் ரவுண்டர்களாக ஹர்திக் பாண்டியா, ரவீந்திர ஜடேஜா அல்லது அக்ஸர் படேல் ஆகியோர் தேர்வு செய்யபட அதிக வாய்ப்புகள் உள்ளன. இதில் கடந்த ஓராண்டுகளக ஜடேஜாவை விட அக்ஸர் படேல் அதிகளவிளான சர்வதேச போட்டிகளில் விளையாடியுள்ளதால் அவர் பிளேயிங் லெவனில் இடம்பிடிப்பதற்கு அதிக வாய்ப்புள்ளது.