
ஐபிஎல் தொடரில் நேற்று நடைபெற்ற லீக் போட்டியில் சன்ரைசர்ஸ் ஹைத்ராபாத் அணி 8 விக்கெட் வித்தியாசத்தில் பஞ்சாப் கிங்ஸ் அணியை வீழ்த்தி அபார வெற்றியைப் பதிவுசெய்து அசத்தியது. இதன் மூலம் தொடர் தோல்விகளைச் சந்தித்து வந்த ஹைதராபாத் அணி மீண்டும் தங்களுடைய வெற்றி பாதைக்கும் திரும்பியுள்ளது.
இந்நிலையில் இப்போட்டியின் தோல்வி குறித்து பேசிய பஞ்சாப் அணி கேப்டன் ஸ்ரேயாஸ் ஐயர், “உண்மையைச் சொன்னால் இது ஒரு அற்புதமான ஸ்கோர் என்று நினைக்கிறேன். இன்னும் 2 ஓவர்கள் மீதமுள்ள நிலையில் அவர்கள் எதிரணி இந்த இலக்கை எட்டியுள்ளது ஆச்சரியமாக உள்ளது. இந்த ஆட்டத்தில் நாங்கள் சில கேட்சுகளை தவறவிட்டோம். மேலும் இப்போட்டியில் அபிஷேக் சர்மா மிகவும் அதிர்ஷ்டசாலியாக இருந்தார்.
அவருக்கு பந்துவீச மிகவும் கடினமாக இருந்தது. சுருக்கமாகச் சொன்னால், நாங்கள் எங்கள் எதிர்பார்ப்புகளுக்கு ஏற்ப பந்து வீசவில்லை, அதனால் நாங்கள் அதில் நிச்சயாம் கற்றுக்கொள்ள வேண்டும். அபிஷேக் மற்றும் ஹெட் இடையேயான பார்ட்னர்ஷிப் அற்புதமானது, அவர்கள் எங்களுக்கு எந்தவொரு வாய்ப்பையும் தரவில்லை. அதேசமயம் எனது தரப்பில் இருந்து பந்துவீச்சாளர்களை இன்னும் சரியாக கையாண்டிருக்கலாம்.