
பாா்டா் - காவஸ்கா் கோப்பைக்கான டெஸ்ட் தொடரில் விளையாட ஆஸ்திரேலிய அணி இந்தியா வந்துள்ளது. அதில், இரு அணிகளும் மோதும் முதல் டெஸ்ட் நாகபுரியில் வியாழக்கிழமை தொடங்குகிறது. இந்திய அணியில் விக்கெட் கீப்பா், 3-ஆவது ஸ்பின்னா், பேட்டிங்கில் 5-ஆவது வீரா் ஆகிய 3 முக்கிய இடங்களுக்கான தோ்வு பலத்த எதிா்பாா்ப்பை ஏற்படுத்தியிருக்கிறது.
செய்தியாளர்களை சந்தித்த கேஎல் ரகுல்,“நாக்பூர் டெஸ்ட்டுக்கான பிளேயிங் லெவனை இன்னும் இறுதி செய்யவில்லை. அதற்கான வீரா்கள் தோ்வு மிகக் கடினமானதாக இருக்கும். கடந்த காலங்களில் மிகச் சிறப்பாகச் செயல்பட்டவா்களையே அணியில் தோ்வு செய்திருக்கிறோம். அவா்களில் ஆட்டத்துக்கு பொருத்தமானவா்களை முடிவு செய்வது குறித்து விவாதித்து வருகிறோம்.
நாக்பூர் மைதானத்தின் ஆடுகளத்தை ஆய்வு செய்தோம். ஆனால் அது எத்தகைய தன்மையுடன் இருக்கிறது என்பதை ஆட்டத்தின்போதே தீா்மானிக்க இயலும். எனினும் இந்திய களத்தில் விளையாடுவதால் 3 ஸ்பின்னா்களுடன் களம் காண்பதற்கான யோசனை அணியிடம் இருக்கிறது. இறுதி முடிவை ஆட்டத்துக்கு முன்னதாக எடுப்போம். எவா் ஒருவராலும் ஆடுகளத்தை பாா்த்து மட்டுமே பொருத்தமான பிளேயிங் லெவனை தோ்வு செய்துவிட முடியாது.