விராட், ரோஹித்தின் அனுபவம் 2024 உலகக் கோப்பையில் தேவை - சுனில் கவாஸ்கர்!
இந்திய அணியின் ஃபீல்டிங் துறையிலும் விராட் கோலி மற்றும் ரோஹித் சர்மா ஆகியோர் நெருப்பாக செயல்படக்கூடிய தன்மையைக் கொண்டிருப்பதாக சுனில் கவாஸ்கர் தெரிவித்துள்ளார்.
தென் ஆப்பிரிக்காவுக்கு எதிராக நிறைவு பெற்ற டெஸ்ட் கிரிக்கெட் தொடரை 1 – 1 (2) என்ற கணக்கில் அந்நாட்டில் 13 வருடங்கள் இந்தியா சமன் செய்து சாதனை படைத்தது. இதைத் தொடர்ந்து நாடு திரும்புயுள்ள இந்திய அணியினர் 2024 டி20 உலகக் கோப்பைக்கு தயாராக அடுத்ததாக ஆப்கானிஸ்தானுக்கு எதிராக 3 போட்டிகள் கொண்ட டி20 கிரிக்கெட் தொடரில் விளையாட உள்ளனர்.
இருப்பினும் இந்தத் தொடரில் கேப்டனாக இருக்கப் போவது யார், ரோஹித் சர்மா மற்றும் விராட் கோலி ஆகியோர் விளையாடுவார்களா என்ற கேள்வி ரசிகர்களிடம் காணப்படுகிறது. ஏனெனில் கடந்த டி20 உலகக் கோப்பையில் தோல்வியை சந்திப்பதற்கு முக்கிய காரணமாக இருந்த சீனியர்களை கழற்றி விட்டு ஹர்திக் பாண்டியா தலைமையில் இளம் அணியை 2024 டி20 உலகக் கோப்பையில் களமிறக்க பிசிசிஐ முடிவெடுத்துள்ளதாக செய்திகள் வெளிவந்தன.
Trending
மேலும் டி20 கிரிக்கெட்டில் சாதிப்பதற்கு மிகவும் வேகமாக ஓடி துடிதுடிப்பாக ஃபீல்டிங் செய்வது அவசியமாக பார்க்கப்படுகிறது. அதனால் 2007க்குப்பின் டி20 உலகக் கோப்பையை வெல்ல முடியாமல் திண்டாடி வரும் கதையை நிறுத்த இம்முறை இளம் வீரர்களை பிசிசிஐ களமிறக்கும் என்ற எதிர்பார்ப்பும் இருக்கிறது. ஆனால் இளம் வீரர்களால் மட்டும் சாதித்து விட முடியாது என்பதால் விராட் கோலி மற்றும் ரோஹித் சர்மா ஆகியோர் டி20 உலகக் கோப்பையில் விளையாடுவது அவசியம் என்று நிறைய முன்னாள் வீரர்கள் ஆதரவு தெரிவித்து வருகின்றனர்.
இந்நிலையில் 35 – 36 கடந்தாலும் ஃபீல்டிங் துறையிலும் விராட் கோலி மற்றும் ரோஹித் சர்மா ஆகியோர் நெருப்பாக செயல்படக்கூடிய தன்மையைக் கொண்டிருப்பதாக சுனில் கவாஸ்கர் தெரிவித்துள்ளார். இதுகுறித்து பேசியது அவர், “கடந்த ஒன்றரை வருடங்களாக சிறப்பாக செயல்பட்டு வரும் விராட் கோலி 2023 உலகக் கோப்பையில் அபாரமாக விளையாடினார். எனவே வெள்ளைப் பந்து கிரிக்கெட்டில் அவருடைய பேட்டிங் பற்றி எந்த கேள்வியும் இல்லை. அதே சமயம் ரோஹித் சர்மா மற்றும் விராட் கோலி ஆகியோர் சிறப்பான ஃபீல்டர்களாக உள்ளனர்.
சில நேரங்களில் நீங்கள் 35 – 36 வயதை கடந்தால் மெதுவாக செயல்படுவது இயற்கையாகும். அதனால் ஃபீல்டிங் செட்டிங் செய்யும் போது வயதான வீரர்களை பற்றிய விவாதங்கள் இருக்கும். இருப்பினும் இந்த இருவருமே நல்ல ஃபீல்டர்கள் என்பதால் அவர்களுக்கு அந்த பிரச்சினை கிடையாது. மேலும் அவர்கள் உடைமாற்றும் அறையிலும் காலத்திலும் தங்களுடைய அனுபவத்தை இந்தியாவுக்கு சேர்ப்பார்கள். ரோஹித் சர்மா கேப்டனாக இருப்பாரா என்பது தெரியாது. யார் கேப்டனாக வந்தாலும் அவருடைய அனுபவத்தால் நன்மை பெறுவார்கள்” என்று கூறியுள்ளார்.
Win Big, Make Your Cricket Tales Now