
இன்று தரம்சாலா மைதானத்தில் இந்தியா - நியூசிலாந்து அணிகள் மோதிய போட்டி மிகவும் பரபரப்பான முறையில் நடைபெற்று முடிந்தது. இரண்டு அணிகளுமே இந்த உலகக் கோப்பையில் இதுவரை நான்கு போட்டிகளில் விளையாடி நான்கிலும் வெற்றி பெற்று இருந்தன.
இந்த நிலையில் இப்போட்டியில் டாசை இழந்து முதலில் பேட்டிங் செய்த நியூசிலாந்து அணி 50 ஓவர்களில் அனைத்து விக்கெட்டுகளையும் இழந்து 273 ரன்கள் எடுத்திருக்கிறது. இதற்கடுத்து இலக்கை நோக்கி களம் இறங்கிய இந்திய அணிக்கு தொடக்க ஆட்டக்காரர்கள் நல்ல துவக்கம் தந்தார்கள். அதற்குப் பிறகு கணிசமான ரன்களில் நான்கு விக்கெட்டுகள் விழ, சூரியகுமார் யாதவ் வந்து தேவையில்லாமல் ரன் அவுட் ஆகி வெளியேறினார்.
இருப்பினும் வழக்கம்போல் விராட் கோலி தனியாளாக நின்று போராடி 8 பவுண்டரி 2 சிக்சர்கள் என 95 ரன்களில் விக்கெட்டை இழந்து 5 ரன்களில் தனது 49ஆவது சர்வதேச ஒருநாள் சதத்தை தவறவிட்டர். இருப்பினும் இந்திய அணி 48 ஓவர்களில் இலக்கை எட்டியதுடன் 4 விக்கெட் வித்தியாத்தில் வெற்றி பெற்று அசத்தியுள்ளது.