
இந்தியா - ஆஸ்திரேலியா அணிகளுக்கு இடையேயான கடைசி டெஸ்ட் போட்டி அகமதாபாத்தில் தொடங்கி நடைபெற்று வருகிறது. இந்த போட்டியில் டாஸ் வென்ற ஆஸ்திரேலிய அணி பேட்டிங்கை தேர்வு செய்தது.
இதனையடுத்து களமிறங்கிய அந்த அணி சிறப்பான பேட்டிங்கை வெளிப்படுத்தியது. இதனால் முதல் இன்னிங்ஸில் 480 ரன்களுக்கு அனைத்து விக்கெட்களையும் இழந்தது. ஏற்கனவே இரண்டு நாட்கள் முடிந்துவிட்ட சூழலில் இந்திய அணி விக்கெட் இழப்பின்றி 36 ரன்களை சேர்த்து விளையாடி வருகிறது. பேட்டிங்கிற்கு சாதகமான களம் என்பதால் இந்திய அணி சிறப்பாக செயல்பட வேண்டும். குறிப்பாக விராட் கோலி இந்த வாய்ப்பை பயன்படுத்தி தனது சதத்தை பூர்த்தி செய்ய வேண்டும்.
இந்நிலையில் பேட்டிங் செய்வதற்கு முன்னதாகவே விராட் கோலி பிரமாண்ட சாதனை படைத்துள்ளார். ரவிச்சந்திரன் அஸ்வின் வீசிய பந்தில் ஆஸ்திரேலியாவின் நாதன் லையன் விக்கெட்டை பறிகொடுத்தார். பவுண்டரிக்கு விரட்ட முயன்ற போது விராட் கோலியின் கைக்கு பந்து சென்றது. இந்த கேட்ச்-ன் மூலம் சர்வதேச கிரிக்கெட்டில் அதிக கேட்ச்-களை பிடித்த 2ஆவது இந்திய வீரர் என்ற பெருமையை பெற்றார். அவர் 300 கேட்ச்-களை பிடித்திருக்கிறார்.