-mdl.jpg)
இந்திய கிரிக்கெட் அணியின் நட்சத்திர வீரர்களான ரோஹித் சர்மா மற்றும் விராட் கோலி ஆகியோர் கடந்த 2022ஆம் ஆண்டு ஆஸ்திரேலியாலில் நடைபெற்ற டி20 உலகக் கோப்பை கிரிக்கெட் தொடரின் அரையிறுதி போட்டியில் இங்கிலாந்து அணிக்கு எதிராக விளையாடி இருந்தனர். அந்த போட்டியில் இந்திய அணி தோல்வியை சந்தித்து வெளியேறிய வேளையில் அதற்கடுத்து ஓராண்டாக இந்திய டி20 அணியில் அவர்கள் இருவரும் விளையாடவில்லை.
மேலும் தொடர்ச்சியாக நடைபெற்ற அனைத்து டி20 தொடர்களிலும் இருந்தும் தற்காலிக ஓய்வை கேட்டு பெற்றுக்கொண்ட இருவரும் டெஸ்ட் மற்றும் ஒருநாள் போட்டிகளில் மட்டுமே கவனம் செலுத்தி விளையாடி வந்தனர். இதன் காரணமாக இந்த ஆண்டு ஜூன் மாதம் வெஸ்ட் இண்டீஸ் மற்றும் அமெரிக்காவில் நடைபெற இருக்கும் டி20 உலககோப்பை தொடரில் அவர்கள் பங்கேற்பார்களா? என்பதில் கேள்வி எழுந்தது.
அதோடு தொடர்ச்சியாக இந்திய டி20 அணியிலும் இளம் வீரர்களுக்கே வாய்ப்பு வழங்கப்பட்டு வந்தது. அதன்காரணமாக மீண்டும் இவர்கள் இருவரும் டி20 போட்டிகளில் விளையாடுவார்களா? என்பதில் சந்தேகமும் எழுந்தது. இந்நிலையில் எதிர்வரும் டி20 உலக கோப்பை தொடரில் விளையாட ரோஹித் சர்மா மற்றும் விராட் கோலி இருவருமே சம்மதம் தெரிவித்துள்ளதால் அவர்களை மீண்டும் அணிக்குள் கொண்டு வருவதில் பெரிய குழப்பம் ஏற்பட்டுள்ளது.