
இந்தியாவில் பாரம்பரியமிக்க உள்ளூர் கிரிக்கெட் தொடர்களில் ஒன்றான துலீப் கோப்பை கிரிக்கெட் தொடரானது வரும் செப்டம்பர் 5ஆம் தேதி முதல் தொடங்கவுள்ளது. மேலும் அடுத்த மாதம் வங்கதேச அணிக்கு எதிராக இந்திய அணி இரண்டு போட்டிகள் கொண்ட டெஸ்ட் தொடரில் விளையாடவுள்ளதால், அதற்கு தயாராகும் வகையில் இந்த தொடரில் இந்தியாவின் பல மூத்த வீரர்கள் விளையாடுகிறார்கள்
இத்தொடரில் சிறப்பாக செயல்படுவதன் மூலம், வங்கதேசத்திற்கு எதிரான டெஸ்ட் தொடரில் வீரர்கள் தங்கள் இடத்தைப் பிடிக்க வாய்ப்புள்ளது. அந்தவகையில் இஷான் கிஷான், ஸ்ரேயாஸ் ஐயர், கேஎல் ராகுல், ரிஷப் பந்த் என பல நட்சத்திர வீரர்கள் இத்தொடரில் பங்கேற்கின்றனர். ஆனால், இந்த துலீப் கோப்பை தொடரில் இந்திய அணியின் மூத்த வீரர்களான கேப்டன் ரோஹித் சர்மா, விராட் கோலி, ஜஸ்பிரித் பும்ரா, ரவிச்சந்திரன் அஸ்வின் ஆகியோருக்கு ஓய்வு கொடுக்கப்பட்டுள்ளது.
இந்நிலையில் துலீப் கோப்பை தொடரில் ரோஹித் சர்மா, விராட் கோலி ஆகியோர் பங்கேற்காதது குறித்து இந்திய அணியின் முன்னாள் வீரர் சுனில் கவாஸ்கர் தனது அதிருப்தியை வெளிப்படுத்தியுள்ளார். இதுகுறித்து பேசிய அவர், "துலீப் கோப்பை தொடரில் கேப்டன் ரோஹித் சர்மா மற்றும் விராட் கோலியை தேர்வுக்குழு தேர்வு செய்யவில்லை, எனவே அவர்கள் அதிக போட்டி பயிற்சி இல்லாமல் வங்கதேச டெஸ்ட் தொடருக்கு செல்வார்கள்.