
இங்கிலாந்து - இந்திய அணிக்களுக்கு இடையேயான ஐந்து போட்டிகள் கொண்ட டெஸ்ட் தொடரானது அடுத்த மாதம் நடைபெற இருக்கும் நிலையில், இந்திய அணியின் முக்கிய வீரர்கள் ரோஹித் சர்மா மற்றும் விராட் கோலி ஆகியோர் சர்வாதேச டெஸ்ட் கிரிக்கெட்டில் இருந்து ஓய்வை அறிவித்துள்ளனர்.
அதிலும் குறிப்பாக இந்திய டெஸ்ட் அணியின் ஜாம்பவான் வீரர் விராட் கோலி டெஸ்ட் கிரிக்கெட்டில் இருந்து ஓய்வை அறிவித்துள்ளது இந்திய அணிக்கு பெரும் பின்னடைவாக பார்க்கப்படுகிறது. ஏனெனில் இந்திய அணிக்காக இதுவரை 123 டெஸ்ட் போட்டிகளில் விளையாடிவுள்ள அவர் 30 சதங்களையும், 31 அரைசதங்கள் என 9230 ரன்களை எடுத்துள்ளார். இந்நிலையில் விராட் கோலி ஓய்வை அறிவித்திருப்பது இங்கிலாந்து அணிக்கு பெரும் சாதகமாக இருக்கும் என முன்னாள் வீரர் மொயீன் அலி கூறியுள்ளார்.
இதுகுறித்து பேசிய மொயீன் அலி, “விராட் கோலி டெஸ்ட் கிரிக்கெட்டில் இருந்து ஓய்வை அறிவித்திருப்பது டெஸ்ட் கிரிக்கெட்டுக்கு மிகப்பெரிய அடியாகும். டெஸ்ட் கிரிக்கெட்டில் எப்போதும் ஃபார்மேட்டை முன்னெடுத்துச் சென்ற ஒரே வீரர் வீரர் விராட் கோலி மட்டும் தான். அவர் இந்த விளையாட்டுக்காக, குறிப்பாக இந்தியாவிற்காக, நிறைய செய்துள்ளார். அதிலும் குறிப்பாக சச்சினுக்குப் பிறகு அனைவரும் பார்க்க விரும்பிய வீரர் அவர் தான் என்று நான் நினைக்கிறேன்.