
அஹ்மதாபாத்தில் நடைபெற்ற உலகக்கோப்பை கிரிக்கெட் தொடரின் இறுதிப்போட்டியில் இந்திய அணி 6 விக்கெட்டுகள் வித்தியாசத்தில் தோல்வியடைந்தது. உலகக்கோப்பை எட்டிப்பிடிக்கும் தூரத்தில் இருந்தும், மீண்டும் உலகக்கோப்பையை இந்திய அணி பறிகொடுத்துள்ளது. இதையடுத்து இந்திய அணி வீரர்கள் பலரும் சோகத்துடன் ஓய்வறை சென்றனர்.
சிராஜ், ரோஹித் சர்மா, விராட் கோலி உள்ளிட்டோர் மைதானத்திலேயே கலங்கி, வேகவேகமாக ஓய்வறை சென்றனர். அதன்பின் ஓய்வறையில் சிறந்த ஃபீல்டருக்கான விருது பயிற்சியாளர் திலீப் வழங்கினார். வழக்கமாக மகிழ்ச்சியுடனும் கொண்டாட்டத்துடனும் இருந்த இந்திய ஓய்வறை, இன்று மயான அமைதியுடன் இருந்தது.
எந்தவொரு வீரரும் ஓய்வறையில் எழுந்து நிற்கவோ, கைகளை தட்டவோ கூட இல்லை. அந்த அளவிற்கு உலகக்கோப்பை தோல்வி இந்திய அணியை பாதித்தது. இந்த நிலையில் இந்திய அணி வீரர்களை பாராட்டும் வகையில் ஃபீல்டிங் பயிற்சியாளர் திலீப், இதற்கு மேல் இந்திய அணி வீரர்களிடம் இருந்து என்னால் எதுவும் கேட்க முடியாது. ஏனென்றால் களத்திற்குள் அனைத்தையும் முயற்சித்துள்ளோம். எனக்கு இது பெருமையளிக்கிறது.