
இந்திய அணி தற்சமயம் ஆஸ்திரேலியாவில் சுற்றுப்பயணம் மேற்கொண்டு 5 போட்டிகள் கொண்ட பார்டர் கவாஸ்கர் கோப்பை டெஸ்ட் தொடரில் விளையாடி வருகிறது. இதில் நடைபெற்று முடிந்த முதலிரண்டு டெஸ்ட் போட்டிகளின் முடிவில் இரு அணிகளும் தலா ஒரு வெற்றியைப் பதிவுசெய்து 1-1 என்ற கணக்கில் தொடரை சமன்செய்திருந்தன. இதையடுத்து இரு அணிகளுக்கும் இடையேயான மூன்றாவது டெஸ்ட் போட்டி பிரிஸ்பேனில் நடைபெற்றது.
மழைக்கு மத்தியில் நடைபெற்ற இப்போட்டியானது முடிவு எட்டபடாமல் டிராவில் முடிந்ததாக அறிவிக்கப்பட்டது. இதனால் இரு அணிகளும் இத்தொடரில் 1-1 என்ற கணக்கில் சமனிலையில் நீடித்து வருகின்றனர். இதையடுத்து இரு அணிகளுக்கும் இடையேயான பாக்ஸிங் டே டெஸ்ட் போட்டியானது எதிர்வரும் டிசம்பர் 26அம் தேதில் மெல்போர்னில் நடைபெறவுள்ளது. இப்போட்டியில் வெற்றி பெறும் அணி தொடரில் முன்னிலைப் பெறும் என்பதால் கூடுதல் எதிர்பார்ப்புகளும் உள்ளது.
இதற்காக இரு அணி வீரர்களும் தீவிரமாக தயாராகி வருகின்றனர். இந்நிலையில் இந்திய கேப்டன் ரோஹித் சர்மா தற்போது மோசமான ஃபார்மில் உள்ளார். அதன்படி நடப்பு பார்டர் கவாஸ்கர் கோப்பை தொடரில் இரண்டு டெஸ்டில் மூன்று இன்னிங்ஸ்களில் விளையாடிய அவர் 19 ரன்கள் மட்டுமே எடுத்துள்ளார். இந்நிலையில் பாக்ஸிங் டே டெஸ்ட் போட்டியில் விளையாடுவதற்காக இந்திய அணி தயாராகி வரும் நிலையில் ரோஹித் சர்மா வலை பயிற்சியில் தடுமாறும் கணொளி வைரலாகி வருகிறது.
Rohit Sharma got beaten by Part-time Bowler Devdutt Padikkal in the nets pic.twitter.com/6iGlPXO6Nl
— Jyotirmay Das (@dasjy0tirmay) December 22, 2024