
இங்கிலாந்து - வெஸ்ட் இண்டீஸ் அணிகளுக்கு இடையேயான மூன்று போட்டிகள் கொண்ட டி20 தொடரின் முதல் போட்டி இன்று செஸ்டர் லீ ஸ்டீரிட்டில் உள்ள ரிவர்ஸ் சைடு மைதானத்தில் நடைபெறவுள்ளது. இதற்காக இரு அணி வீரர்களும் தீவிரமாக தாயாராகி வருகின்றனர்.
இந்த போட்டியில் விளையாடும் வெஸ்ட் இண்டீஸ் அணியின் நட்சத்திர ஆல் ரவுண்டர் ஆண்ட்ரே ரஸல் சிறப்பு சாதனையை படைக்கும் வாய்ப்பை பெற்றுள்ளார். அதன்படி இப்போட்டியில் ஆண்ட்ரே ரஸல் 3 சிக்ஸர்களை அடிக்கும் பட்சத்தில் டி20 கிரிக்கெட்டில் தனது 750 சிக்ஸர்களை பூர்த்தி செய்வத்டன், இந்த மைல் கல்லை எட்டிய உலகின் மூன்றாவது வீரர் மற்றும் வெஸ்ட் இண்டீஸின் மூன்றாவது வீரர் எனும் பெருமையை பெறவுள்ளார்.
அந்தவகையில் ஆண்ட்ரே ரஸல் இதுநாள் வரையிலும் 551 டி20 போஒட்டிகளில் 475 இன்னிங்ஸ்களில் விளையாடு 747 சிக்ஸர்களை அடித்துள்ளார். தற்போது, வெஸ்ட் இண்டீஸ் அணியின் முன்னாள் வீரர்கள் கிறிஸ் கெய்ல் மற்றும் கீரோன் பொல்லார்ட் மட்டுமே டி20 கிரிக்கெட்டில் இந்த சாதனையை படைத்துள்ளனர். இதில் கிறிஸ் கெய்ல் 1056 சிக்ஸர்களுடன் முதலியத்திலும், கீரன் பொல்லார்ட் 908 சிக்சர்களுடன் இரண்டாம் இடத்திலும் உள்ளனர்.