
எதிர்வரும் ஜூன் மாதம் முதல் இங்கிலாந்து மற்றும் இந்திய அணிகளுக்கு இடையே ஐந்து போட்டிகள் கொண்ட டெஸ்ட் தொடரானது நடைபெற உள்ளது. மேற்கொண்டு இது உலக டெஸ்ட் சாம்பியன்ஷிப் தொடரின் ஒரு அங்கமாக நடைபெறவுள்ள காரணத்தால் இதன் மீதான எதிர்பார்ப்புகளும் ரசிகர்கள் மத்தியில் அதிகரித்துள்ளது.
மேலும் இத்தொடருக்கான இந்திய அணியும் கூடிய விரைவில் அறிவிக்கப்படும் என்ற எதிர்பார்ப்புகளும் அதிகரித்துள்ளன. இந்திய டெஸ்ட் அணியின் கேப்டனாக செயல்பட்டு வாந்த ரோஹித் சர்மா சர்வதேச டெஸ்ட் கிரிக்கெட்டில் இருந்து ஓய்வை அறிவித்துள்ள நிலையில், அணியின் புதிய கேப்டன் யார் என்பது குறித்த விவாதங்கள் அதிகரித்துள்ளன. கேப்டன்சிக்கான தேர்வில் ஷுப்மன் கில், கேஎல் ராகுல் மற்றும் ஜஸ்பிரித் புமரா ஆகியோர் இருப்பதாக கூறப்படுகிறது.
iஇந்நிலையில் இங்கிலாந்துக்கு எதிரான டெஸ்ட் தொடரில் நட்சத்திர வேகப்பந்து வீச்சாளர் ஜஸ்பிரித் பும்ராவுக்கு கேப்டன் அல்லது துணை கேப்டன் பதவி வழங்கப்படாது என்ற தகவல் வெளியாகியுள்ளது. மேற்கொண்டு அனைத்து போட்டிகளுக்கும் தயாராக இருக்கும் வீரருக்கு கேப்டன் பதவியை வழங்கவுள்ளதாகவும் கூறப்படுகிறது. இதில் பும்ரா டெஸ்ட் அணியின் துணைக்கேப்டனாக செயல்பட்டு வருவது குறிப்பிடத்தக்கது.