
நடைபெற்று முடிந்த ஐசிசி ஆடவர் டி20 உலகக்கோப்பை கிரிக்கெட் தொடரில் ரோஹித் சர்மா தலைமையிலான இந்திய அணியானது சாம்பியன் பட்டத்தை வென்று சாதனை படைத்தது. இந்நிலையில் இத்தொடரின் முடிவுக்கு பிறகு இந்திய அணியின் நட்சத்திர வீரர்கள் விராட் கோலி, ரவீந்திர ஜடேஜா மற்றும் அணியின் கெபெடன் ரோஹித் சர்மா உள்ளிட்டோர் சர்தேச டி20 கிரிக்கெட் போட்டிகளில் இருந்து ஓய்வு பெறுவதாக அறிவித்து ரசிகர்களுக்கு அதிர்ச்சியை கொடுத்தனர்.
அதேசமயம் இந்திய அணியின் தலைமை பயிற்சியாளராக செயல்பட்டு வந்த ராகுல் டிராவிட்டின் பதவிக்காலமும் நடப்பு டி20 உலகக்கோப்பை கிரிக்கெட் தொடருடன் முடிவடைந்துள்ளது. இதனையடுத்து இந்திய அணி வீரர்களுடன் ஓய்வரையில் தனது பிரிவு உபசரிப்பு விழாவில் தன்னுடைய பயிற்சியாளர் பயணம் குறித்து, இந்திய அணி கேப்டன் ரோஹித் சர்மா குறித்து சில கருத்துகளை தெரிவித்துள்ளார்.
இதுகுறித்து பேசிய அவர், “எனக்கு பேசுவதற்கு வார்த்தைகள் குறைவாக உள்ளது, ஆனால் நான் சொல்ல விரும்புவது நம்பமுடியாத நினைவகத்தின் ஒரு பகுதியாக என்னை உருவாக்கிய அனைவருக்கும் நன்றி. இந்த தருணங்களை நீங்கள் அனைவரும் நினைவில் வைத்திருப்பீர்கள். இது ரன்கள் மற்றும் விக்கெட் பற்றியது அல்ல; ஏனெனில் அதனை உங்கள் வாழ்க்கையில் நீங்கள் ஒருபோதும் நினைவில் கொள்ள மாட்டீர்கள், ஆனால் இது போன்ற தருணங்களை நீங்கள் நினைவில் கொள்வீர்கள்.