Advertisement

ZIM vs IND, 4th T20I: தொடரை வென்றதுடன் சாதனைகளையும் குவித்த இந்திய அணி!

ஜிம்பாப்வே அணிக்கு எதிரான நான்காவது டி20 போட்டியில் இந்திய அணி 10 விக்கெட் வித்தியாசத்தில் வெற்றிபெற்று அசத்திய நிலையில், இப்போட்டியின் மூலம் சில சாதனைகளையும் பதிவுசெய்து அசத்தியுள்ளது.

Advertisement
ZIM vs IND, 4th T20I: தொடரை வென்றதுடன் சாதனைகளையும் குவித்த இந்திய அணி!
ZIM vs IND, 4th T20I: தொடரை வென்றதுடன் சாதனைகளையும் குவித்த இந்திய அணி! (Image Source: Google)
Bharathi Kannan
By Bharathi Kannan
Jul 13, 2024 • 11:00 PM

ஜிம்பாப்வே - இந்திய அணிகளுக்கு இடையேயான 4ஆவது டி20 போட்டியானது இன்று ஹராரேவில் நடைபெற்று முடிந்தது. இப்போட்டியில் டாஸை இழந்து முதலில் பேட்டிங் செய்த ஜிம்பாப்வே அணியானது 20 ஓவர்கள் முடிவில் 7 விக்கெட்டுகளை இழந்து 152 ரன்களை மட்டுமே சேர்த்தது. அந்த அணியில் அதிகபட்சமாக கேப்டன் சிக்கந்தர் ரஸா 46 ரன்களைச் சேர்த்தார். இந்திய அணி தரப்பில் கலீல் அஹ்மத் 2 விக்கெட்டுகளை கைப்பற்றினார். 

Bharathi Kannan
By Bharathi Kannan
July 13, 2024 • 11:00 PM

இதனையடுத்து இலக்கை நோக்கி விளையாடிய இந்திய அணியில் தொடக்க வீரர்களாக களமிறங்கிய யஷஸ்வி ஜெய்ஸ்வல் 13 பவுண்டரி, 2 சிக்ஸர்கள் என 93 ரன்களையும், கேப்டன் ஷுப்மன் கில் 6 பவுண்டரி, 2 சிக்ஸர்கள் என 58 ரன்களையும் சேர்த்து அணிக்கு வெற்றியைத் தேடிக்கொடுத்தனர். இதன்மூலம் இந்திய அணி 15.2 ஓவர்களில் இலக்கை எட்டியதுடன் 10 விக்கெட் வித்தியாசத்தில் வெற்றிபெற்று அசத்தியது. இப்போட்டியில் யஷஸ்வி ஜெய்ஸ்வால் ஆட்டநாயகன் விருதை வென்றார். 

Trending

இந்நிலையில் இப்போட்டியில் 10 விக்கெட் வித்தியாசத்தில் வெற்றிபெற்றதன் மூலம் இந்திய அணி சில சாதனைகளையும் பதிவுசெய்து அசத்தியுள்ளது. அந்தவகையில் சர்வதேச டி20 கிரிக்கெட்டில் 150 ரன்களுக்கு அதிகமாக இலக்கை விக்கெட் இழப்பின்றி எட்டிய நான்காவது அணி எனும் சாதனையை இந்தியா படைத்துள்ளது. இந்த பட்டியலில் பாகிஸ்தான் அணியானது கடந்த 2022ஆம் ஆண்டு இங்கிலாந்துக்கு எதிராக 200 ரன்கள் என்ற இலக்கை விக்கெட் இழப்பின்றி எட்டி முதலிடத்தில் தொடர்கிறது. 

Successful 150-plus run-chases without losing a wicket

  • 200 ரன்கள் - பாகிஸ்தான் vs இங்கிலாந்து, கராச்சி - 2022
  • 169 ரன்கள் - நியூசிலாந்து vs பாகிஸ்தான், ஹாமில்டன் - 2016
  • 169 ரன்கள் - இங்கிலாந்து vs இந்தியா, அடிலெய்ட், 2022
  • 153 ரன்கள் - இந்தியா vs ஜிம்பாப்வே, ஹராரே, 2024
  • 152 ரன்கள் - பாகிஸ்தான் vs இந்தியா, துபாய் - 2021

மேற்கொண்டு சர்வதேச டி20 கிரிக்கெட்டில் இந்திய அணி 150க்கு மேற்பட்ட இலக்கை எட்ட குறைந்தபட்ச பந்துகளை எடுத்துக்கொண்ட போட்டிகளின் பட்டியலில் இன்றைய போட்டி முதலிடம் பிடித்துள்ளது. அதன்படி இன்றைய ஆட்டத்தில் இந்திய அணி 153 ரன்கள் இலக்கை 28 பந்துகள் மீதமிருந்த நிலையில் எட்டி இச்சாதனையை படைத்துள்ளது. முன்னதாக கடந்த 2019ஆம் ஆண்டு வங்கதேச அணிக்கு எதிராக 154 ரன்கள் என்ற இலக்கை இந்திய அணி 26 பந்துகள் மீதமிருந்த நிலையில் எட்டியது குறிப்பிடத்தக்கது. 

அதேபோல் சர்வதேச டி20 கிரிக்கெட் வரலாற்றில் இந்திய அணி சார்பில் அதிகபட்ச பார்ட்னஷிப்பை குவித்த வீரர்கள் வரிசையில் யஷஸ்வி ஜெய்ஸ்வால் - ஷுப்மன் கில் இணை இரண்டாம் இடம் பிடித்து சாதனை படைத்துள்ளனர். இன்றைய ஆட்டத்தில் இருவரும் இணைந்து 156 ரன்கள் பார்ட்னர்ஷிப் அமைத்துள்ளனர். முன்னதாக கடந்த 2023ஆம் ஆண்டு வெஸ்ட் இண்டீஸுக்கு எதிராக இவர்கள் இருவரும் இணைந்து 165 ரன்கள் பார்ட்னர்ஷிப் அமைத்ததே இதுநாள் வரை சாதனையாக இருப்பது குறிப்பிடத்தக்கது.

மேற்கொண்டு இந்திய அணிக்காக தொடக்க வீரர்கள் இணைந்து அதிகபட்ச பார்ட்னர்ஷிப் அமைத்த வீரர்கள் வரிசையில் யஷஸ்வி மற்றும் ஷுப்மன் கில் இருவரும் ஐந்தாம் இடத்தைப் பிடித்து அசத்தியுள்ளனர். முன்னதாக ரோஹித் சர்மா மற்றும் கேஎல் ராகுல் இருவரும் இணைந்து கடந்த 2017ஆம் ஆண்டு இலங்கை அணிக்கு எதிராக தொடக்க விக்கெட் பார்ட்னர்ஷிப்பாக 165 ரன்களை குவித்ததே சாதனையாக இருந்து வருவது குறிப்பிடத்தக்கது. 

Also Read: Akram ‘hopes’ Indian Team Will Travel To Pakistan For 2025 Champions Trophy

150-plus opening stands for India in T20Is

  • 165 - ரோஹித் சர்மா & கேஎல் ராகுல் vs இலங்கை, இந்தூர், 2017
  • 165 - யஷஸ்வி ஜெய்ஸ்வால் & ஷுப்மான் கில் vs வெஸ்ட் இண்டீஸ், லாடர்ஹில், 2023
  • 160 - ரோஹித் சர்மா & ஷிகர் தவான் vs அயர்லாந்து, டப்ளின், 2018
  • 158 - ரோஹித் சர்மா & ஷிகர் தவான் vs நியூசிலாந்து, டெல்லி, 2017
  • 156* - யஷஸ்வி ஜெய்ஸ்வால் & ஷுப்மான் கில் vs ஜிம்பாப்வே, ஹராரே, 2024

Advertisement

Win Big, Make Your Cricket Tales Now

Advertisement