
Zimbabwe T20I Tri Series: நியூசிலாந்து, தென் ஆப்பிரிக்க அணிகளுக்கு எதிரான முத்தரப்பு டி20 தொடரில் விளையாடும் ஜிம்பாப்வே அணி இன்று அறிவிக்கப்பட்டுள்ள நிலையில், அணியின் கேப்டனாக சிக்கந்தர் ரஸா தொடர்கிறார்.
ஜிம்பாப்வே கிரிக்கெட் அணி தென் ஆப்பிரிக்கா மற்றும் நியூசிலாந்து அணிகளுடன் இணைந்து முத்தரப்பு டி20 தொடரில் விளையாடவுள்ளது. இந்த முத்தரப்பு டி20 தொடரானது ஜூலை 14ஆம் தேதி முதல் நடைபெறவுள்ளது. மேலும் இந்த முத்தரப்பு டி20 தொடரில் விளையாடும் தென் ஆப்பிரிக்கா மற்றும் நியூசிலாந்து அணிகள் சமீபத்தில் அறிவிக்கப்பட்டது. இதில் தென் ஆப்பிரிக்க அணியின் கேப்டனாக ரஸ்ஸி வேண்டர் டுசென் நியமிக்கப்பட்டுள்ளார்.
மேலும் இந்த அணியில் கார்பின் போஷ், லுவான்-ட்ரே பிரிட்டோரியஸ், ரூபின் ஹெர்மன் மற்றும் செனுரான் முத்துசாமி உள்ளிட்ட அறிமுக வீரர்களுடன் ஐபிஎல் தொடரில் சிறப்பாக செயல்பட்ட டெவால்ட் பிரீவிஸுக்கு வாய்ப்பு வழங்கப்பட்டுள்ளது. மறுபக்கம் மிட்செல் சான்ட்னர் தலைமையிலான நியூசிலனது அணியில் பென் சீயர்ஸ், லோக்கி ஃபெர்குசன், கைல் ஜேமிசன், கேன் வில்லியம்சன் உள்ளிட்ட வீரர்கள் இடம்பிடிக்கவில்லை என்பது குறிப்பிடத்தக்கது.