%E0%AE%90%E0%AE%AA%E0%AE%8E%E0%AE%B2 2024
T20 WC 2024, Semi Final 1: தென் ஆப்பிரிக்கா வேகத்தில் 56 ரன்களில் சுருண்டது ஆஃப்கானிஸ்தான்!
அமெரிக்கா மற்றும் வெஸ்ட் இண்டீஸில் நடைபெற்றுவரும் ஐசிசி ஆடவர் டி20 உலகக்கோப்பை கிரிக்கெட் தொடரானது இறுதிக்கட்டத்தை எட்டியுள்ளது. மொத்த 20 அணிகள் பங்கேற்றிருந்த இத்தொடரில் இந்தியா - இங்கிலாந்து, தென் ஆப்பிரிக்கா - ஆஃப்கானிஸ்தான் அணிகள் அரையிறுதிச்சுற்றுக்கு முன்னேறின. அந்தவகையில் இன்று நடைபெற்ற முதலாவது அரையிறுதிப்போட்டியில் தென் ஆப்பிரிக்கா மற்றும் ஆஃப்கானிஸ்தான் அணிகள் பலப்பரீட்சை நடத்தின.
டிரினிடாட்டில் உள்ள பிரையன் லாரா கிரிக்கெட் மைதானத்தில் நடைபெற்ற இப்போட்டியில் டாஸ் வென்ற ஆஃப்கானிஸ்தான் அணி கேப்டன் ரஷித் கான் முதலில் பேட்டிங் செய்வதாக அறிவித்து தென் ஆப்பிரிக்க அணியை பந்துவீச அழைத்தார். அதன்படி களமிறங்கிய தென் ஆப்பிரிக்க அணிக்கு முதல் ஆறு ஓவர்களிலேயே பெரும் அதிர்ச்சி காத்திருந்தது. அந்த அணியின் அதிரடி தொடக்க வீரர் ரஹ்மனுல்லா குர்பாஸ் முதல் ஓவரிலேயே ரன்கள் ஏதுமின்றி விக்கெட்டை இழந்தார்.
Related Cricket News on %E0%AE%90%E0%AE%AA%E0%AE%8E%E0%AE%B2 2024
-
அரையிறுதிக்கு முன்னதாக இங்கிலாந்து அணியை எச்சரித்த ஜோஸ் பட்லர்!
நடப்பு டி20 உலகக்கோப்பை தொடரில் ரோஹித் சர்மா தலைமையில் ஆக்ரோஷமான கிரிக்கெட்டை விளையாடி வருவதால், நாங்களும் அதற்கு தயாராக வேண்டும் என இங்கிலாந்து அணி கேப்டன் ஜோஸ் பட்லர் தெரிவித்துள்ளார். ...
-
நடத்தை விதிகளை மீறியதாக ரஷித் கானிற்கு அபராதம் - ஐசிசி நடவடிக்கை!
வங்கதேச அணிக்கு எதிரான சூப்பர் 8 சுற்று ஆட்டத்தில் ஆஃப்கானிஸ்தான் கேப்டன் ரஷித் கான், நடத்தை விதிகளை மீறியதாக ஐசிசி அபராதம் விதித்துள்ளது. ...
-
இங்கு இல்லை என்றால் வேறு எங்கு ரிவர்ஸ் ஸ்விங் ஆகும்? - இன்ஸமாம் குற்றச்சாட்டிற்கு ரோஹித் பதிலடி!
நாங்கள் இங்கிலாந்து அல்லது ஆஸ்திரேலியாவில் விளையாடவில்லை. இங்கே, உள்ள மைதானங்களில் 12-15 ஓவர்களில் பந்து ரிவர்ஸ் ஸ்விங் ஆகிறது என இன்ஸமாம் உல் ஹக்கின் குற்றச்சாட்டிற்கு இந்திய அணி கேப்டன் ரோஹித் சர்மா விளக்கமளித்துள்ளார். ...
-
ஐசிசி டி20 உலகக்கோப்பை 2024, அரையிறுதி 2 - இந்தியா vs இங்கிலாந்து - உத்தேச லெவன் & ஃபேண்டஸி லெவன் டிப்ஸ்!
ஐசிசி டி20 உலகக்கோப்பை தொடரில் நாளை நடைபெறும் இரண்டாவது அரையிறுதிச்சுற்று ஆட்டத்தில் இந்தியா மற்றும் இங்கிலாந்து அணிகள் பலப்பரீட்சை நடத்தவுள்ளன. ...
-
இலங்கை - இந்தியா தொடருக்கான போட்டி அட்டவணை வெளியீடு!
இலங்கையில் சுற்றுப்பயணம் மேற்கொண்டு மூன்று போட்டிகள் கொண்ட ஒருநாள் மற்றும் டி20 தொடரில் இந்திய அணி விளையாடவுள்ளது. ...
-
அஃப்ரிடி, மலிங்காவின் சாதனையை முறிடிக்க காத்திருக்கும் ரஷித் கான்!
தென் ஆப்பிரிக்க அணிக்கு எதிரான அரையிறுதி போட்டியில் ஆஃப்கானிஸ்தானின் ரஷித் கான் 3 விக்கெட்டுகளை கைப்பற்றும் பட்சத்தில் டி20 உலகக்கோப்பை தொடர் வரலாற்றில் அதிக விக்கெட்டுகளை வீழ்த்திய இரண்டாவது வீரர் எனும் சாதனையை படைப்பார். ...
-
நான் கிட்டத்தட்ட சிரித்து சிரித்து அழுது விட்டேன்- குல்பதீன் செயல் குறித்து மார்ஷ்!
வங்கதேச அணிக்கு எதிரான சூப்பர் 8 சுற்று ஆட்டத்தில் ஆஃப்கானிஸ்தான் வீரர் குல்பதீன் நைப் காயம் ஏற்பட்டதுபோல் நடித்தது குறித்து ஆஸ்திரேலிய அணி கேப்டன் மிட்செல் மார்ஷ் தனது கருத்தை தெரிவித்துள்ளார். ...
-
அர்ஷ்தீப் சிங் ரிவர்ஸ் ஸ்விங் செய்தது எப்படி? - இந்தியா மீது இன்ஸாமாம் உல் ஹக் குற்றச்சாட்டு!
ஆஸ்திரேலிய அணிக்கு எதிரான சூப்பர் 8 சுற்று ஆட்டத்தில் இந்திய வீரர்கள் பந்தை சேதப்படுத்தியதாக பாகிஸ்தான் அணியின் முன்னாள் வீரர் இன்ஸாமாம் உல் ஹக் குற்றஞ்சாட்டியுள்ளது கிரிக்கெட் வட்டாரத்தில் பெரும் பரபரப்பை கிளப்பியுள்ளது. ...
-
மகளிர் ஆசிய கோப்பை தொடருக்கான அட்டவணை வெளியீடு; ஜூலை 19-ல் இந்தியா v பாகிஸ்தான் போட்டி!
இலங்கையில் நடைபெறவுள்ள மகளிர் ஆசிய கோப்பை கிரிக்கெட் தொடருக்கான போட்டி அட்டவணையை ஆசிய கிரிக்கெட் கவுன்சில் வெளியிட்டுள்ளது. ...
-
ஐசிசி டி20 உலகக்கோப்பை 2024, முதல் அரையிறுதி - தென் ஆப்பிரிக்கா vs ஆஃப்கானிஸ்தான் - உத்தேச லெவன் & ஃபேண்டஸி லெவன் டிப்ஸ்!
ஐசிசி ஆடவர் டி20 உலகக்கோப்பை கிரிக்கெட் தொடரின் முதலாவது அரையிறுதி போட்டியில் தென் ஆப்பிரிக்கா மற்றும் ஆஃப்கானிஸ்தான் அணிகள் பலப்பரீட்சை நடத்தவுள்ளன. ...
-
எங்கள் மீது நம்பிக்கை வைத்த பிரையன் லாராவை நாங்கள் ஏமாற்றவில்லை - ரஷித் கான்!
நாங்கள் அரையிறுதிக்கு முன்னேறுவோம் என கணித்த ஒரே ஒரு நபர் பிரையன் லாரா மட்டும்தான். அவர் எங்கள் மீது வைத்திருந்த நம்பிக்கையை நாங்கள் ஏமாற்றவில்லை என ஆஃப்கானிஸ்தான் அணி கேப்டன் ரஷித் கான் தெரிவித்துள்ளார். ...
-
சர்வதேச கிரிக்கெட்டிற்கு விடை கொடுத்தார் டேவிட் வார்னர்!
நடைபெற்றுவரும் டி20 உலகக்கோப்பை கிரிக்கெட் தொடரில் ஆஸ்திரேலிய அணி சூப்பர் 8 சுற்றிலிருந்து வெளியேறியதைத் தொடர்ந்து அந்த அணியின் நட்சத்திர வீரர் டேவிட் வார்னர் சர்வதேச கிரிக்கெட்டில் இருந்து ஓய்வை அறிவித்துள்ளார். ...
-
சர்வதேச டி20 கிரிக்கெட்டில் வரலாற்று சாதனை படைத்த ரஷித் கான்!
சர்வதேச டி20 கிரிக்கெட்டில் அதிவேகமாக 150 விக்கெட்டுகளை வீழ்த்திய வீரர் எனும் சாதனையை ஆஃப்கானிஸ்தான் அணி கேப்டன் ரஷித் கான் படைத்துள்ளார். ...
-
பாபர் ஆசாமின் கேப்டன்சி சாதனையை சமன்செய்த ரோஹித் சர்மா!
சர்வதேச டி20 கிரிக்கெட்டில் கேப்டனாக அதிக வெற்றிகளை பதிவுசெய்த வீரர் எனும் பாகிஸ்தானின் பாபர் ஆசமின் சாதனையை இந்திய வீரர் ரோஹித் சர்மா சமன்செய்துள்ளார். ...
Cricket Special Today
-
- 18 Mar 2024 07:47
-
- 16 Mar 2024 07:24