rr vs pbks
இன்றைய போட்டியில் இருந்து கற்றுக்கொள்ள வேண்டியது நிறையவுள்ளது - கேஎல் ராகுல்!
லக்னோ சூப்பர் ஜெயின்ட்ஸ் மற்றும் பஞ்சாப் கிங்ஸ் அணிகள் மோதிய லீக் போட்டியில் முதலில் பேட்டிங் செய்த லக்னோ அணிக்கு கேப்டன் கேஎல் ராகுல் 74 ரன்கள் அடித்தார். அடுத்த அதிகபட்சமாக கைல் மேயர்ஸ் 29 ரன்கள் அடித்திருந்தார். 20 ஓவர்களில் 8 விக்கெட்டுகள் இழப்பிற்கு 159 ரன்கள் அடித்திருந்தது லக்னோ அணி. பந்து வீச்சில் ஷாம் கர்ரன் அசத்தினார். ஷிகர் தவான் காயம் காரணமாக இன்றைய போட்டியில் இல்லாததால், ஷாம் கர்ரன் தற்காலிக கேப்டன் பொறுப்பேற்று விளையாடினார்.
இதையடுத்து 160 ரன்கள் இலக்கை துரத்திய பஞ்சாப் அணிக்கு துவக்க வீரர்கள் சொற்ப ரன்களுக்கு அவுட் ஆனதால், உள்ளே வந்த மேத்தியூ ஷாட் 34 ரன்கள் அடித்து அவுட்டானார். சிக்கந்தர் ராசா மிடில் ஆர்டரில் அபாரமாக விளையாடி 41 பந்துகளில் 57 ரன்கள் அடித்து கிட்டத்தட்ட கடைசி வரை ஆட்டத்தை எடுத்துச்சென்று ஆட்டமிழந்தார். ராசா அவுட்டானாலும், களத்தில் நின்ற ஷாருக் கான், அணிக்காக கடைசிவரை நின்று 10 பந்துகளில் 2 சிக்சர்ஸ் ஒரு பவுண்டரி உட்பட 23 ரன்கள் அடித்து போட்டியை பினிஷிங் செய்தார். இது வெற்றிக்கு மிக முக்கிய பங்காற்றியது. இறுதியில் பஞ்சாப் அணி 2 விக்கெட்டுகள் வித்தியாசத்தில் வென்றது.
Related Cricket News on rr vs pbks
-
ஐபிஎல் 2023: ரஸா, ஷாருக் கான் அதிரடியில் பஞ்சாப் கிங்ஸ் த்ரில் வெற்றி!
லக்னோ சூப்பர் ஜெயண்ட்ஸுக்கு எதிரான ஐபிஎல் லீக் ஆட்டத்தில் பஞ்சாப் கிங்ஸ் அணி 2 விக்கெட் வித்தியாசத்தில் வெற்றிபெற்று அசத்தியது. ...
-
ஐபிஎல் 2023: ஃபார்முக்கு திரும்பிய ராகுல்; லக்னோவை 159 ரன்களில் சுருட்டியது பஞ்சாப்!
பஞ்சாப் கிங்ஸிற்கு எதிரான ஐபிஎல் லீக் ஆட்டத்தில் முதலில் பேட்டிங் செய்த லக்னோ சூப்பர் ஜெயண்ட்ஸ் அணி 160 ரன்களை இலக்காக நிர்ணயித்துள்ளது. ...
-
ஐபிஎல் 2023: லக்னோ சூப்பர் ஜெயண்ட்ஸ் vs பஞ்சாப் கிங்ஸ் - போட்டி முன்னோட்டம் & ஃபேண்டஸி லெவன் டிப்ஸ்!
ஐபிஎல் தொடரில் இன்றைய லீக் ஆட்டத்தில் லக்னோ சூப்பர் ஜெயண்ட்ஸ் - பஞ்சாப் கிங்ஸ் அணிகள் பலப்பரீட்சை நடத்துகின்றன. ...
-
ஐபிஎல் 2023: ஷுப்மன் கில்லை கடுமையாக விமர்சித்த விரேந்திர சேவாக்!
அணியின் நலனை மறந்து சொந்த சாதனைகளுக்காக விளையாடினால் கிரிக்கெட் ஒருநாள் உங்களுடைய கன்னத்தில் அறைந்து விடும் ஷுப்மன் கில்லை என்று முன்னாள் வீரர் விரேந்திர சேவாக் கடுமையாக விமர்சித்துள்ளார். ...
-
ஐபிஎல் 2023: ஹர்திக் பாண்டியாவுக்கு அபராதம்!
பஞ்சாப் கிங்ஸ் அணிக்கு எதிரான போட்டியில் குஜராத் டைட்டன்ஸ் அணி உரிய நேரத்திற்குள் பந்து வீசவில்லை என்கிற காரணத்திற்காக ஹர்திக் பாண்டியாவிற்கு அபராதம் விதிக்கப்பட்டு இருக்கிறது. ...
-
இப்போட்டியில் இருந்து நிறைய கற்றுக்கொள்ள வேண்டியது இருக்கிறது - ஹர்திக் பாண்டியா!
இது போன்ற போட்டிகளில் ஆட்டத்தை கடைசி வரை எடுத்துச் செல்லவேண்டிய அவசியம் இல்லை மிடில் ஓவர்களில் சில ஷாட்டுகள் அடித்து நம் பக்கம் மொத்தமாக திருப்புவதற்கு பார்க்க வேண்டும் என குஜராத் அணியின் கேப்டன் ஹர்திக் பாண்டியா தெரிவித்துள்ளார். ...
-
ஐபிஎல் 2023: தோல்விக்கான காரணத்தை விளக்கிய ஷிகர் தவான்!
குஜராத் டைட்டன்ஸுக்கு எதிரான லீக் ஆட்டத்தில் பஞ்சாப் கிங்ஸ் அணி அதிர்ச்சி தோல்வியடைந்தது குறித்து கேப்டன் ஷிகர் தவான் விளக்கமளித்துள்ளார். ...
-
ஐபிஎல் 2023: ஷுப்மன் கில் அரைசதம்; பஞ்சாப்பை வீழ்த்தி குஜராத் த்ரில் வெற்றி!
பஞ்சாப் கிங்ஸுக்கு எதிரான ஐபிஎல் லீக் ஆட்டத்தில் குஜராத் டைட்டன்ஸ் அணி 6 விக்கெட் வித்தியாசத்தில் அபார வெற்றியைப் பதிவுசெய்து அசத்தியது. ...
-
ஐபிஎல் 2023: வரலாற்று சாதனையை நிகழ்த்திய ரபாடா!
ஐபிஎல் கிரிக்கெட் வரலாற்றில் குறைந்த போட்டியில் விளையாடி 100 விக்கெட்டுகளை கைப்பற்றிய வீரர் எனும் சாதனையை பஞ்சாப் கிங்ஸ் வேகப்பந்து வீச்சாளர் காகிசோ ரபாடா படைத்துள்ளார். ...
-
ஐபிஎல் 2023: பஞ்சாப் கிங்ஸை 153 ரன்களில் சுருட்டியது குஜராத் டைட்டன்ஸ்!
குஜராத் டைட்டன்ஸுக்கு எதிரான ஐபிஎல் லீக் ஆட்டத்தில் முதலில் பேட்டிங் செய்த பஞ்சாப் கிங்ஸ் அணி 154 ரன்களை இலக்காக நிர்ணயித்துள்ளது. ...
-
ஐபிஎல் 2023: பஞ்சாப் கிங்ஸ் vs குஜராத் டைட்டன்ஸ் - போட்டி முன்னோட்டம் & ஃபேண்டஸி லெவன் டிப்ஸ்!
ஐபிஎல் தொடரின் இன்றைய லீக் ஆட்டத்தில் பஞ்சாப் கிங்ஸ் மற்றும் குஜராத் டைட்டன்ஸ் அணிகள் பலப்பரீட்சை நடத்துகின்றன. ...
-
ஐபிஎல் 2023: நாங்கள் இன்னும் கற்றுக்கொள்ள வேண்டியது நிறைய உள்ளது - ஷிகர் தவான்!
பேட்டிங் யூனிட்டாக நாங்கள் அடுத்தடுத்து பல விக்கெட்டுகளை இழந்தோம். எங்களால் இதனால் பெரிய இலக்கை நிர்ணயிக்க முடியவில்லை என பஞ்சாப் கிங்ஸ் கேப்டன் ஷிகர் தவான் தெரிவித்துள்ளார். ...
-
ஐபிஎல் 2023: பஞ்சாப்பை வீழ்த்தி முதல் வெற்றியைப் பெற்றது சன்ரைசர்ஸ் ஹைதராபாத்!
பஞ்சாப் கிங்ஸிற்கு எதிரான ஐபிஎல் லீக் ஆட்டத்தில் சன்ரைசர்ஸ் ஹைதராபாத் அணி 8 விக்கெட் வித்தியாசத்தில் வெற்றிபெற்று அசத்தியது. ...
-
ஐபிஎல் 2023: சீட்டுக்கட்டாய் சரிந்த பேட்டர்ஸ்; தனி ஒருவனாக கெத்து காட்டிய தவான்!
சன்ரைசர்ஸ் ஹைதராபாத் அணிக்கெதிரான ஐபிஎல் லீக் ஆட்டத்தில் முதலில் பேட்டிங் செய்த பஞ்சாப் கிங்ஸ் அணி 144 ரன்களை இலக்காக நிர்ணயித்துள்ளது. ...
Cricket Special Today
-
- 18 Mar 2024 07:47
-
- 16 Mar 2024 07:24