saw vs slw
ஐசிசி மகளிர் ஒருநாள் தரவரிசை: முதலிடத்தைப் பிடித்து சாதித்தார் சமாரி அத்தப்பத்து!
இலங்கை மகளிர் அணி தென் ஆப்பிரிக்காவில் சுற்றுப்பயணம் மேற்கொண்டு 3 போட்டிகள் கொண்ட ஒருநாள் மற்றும் டி20 தொடர்களில் விளையாடியது. இதில் டி20 தொடரை 3-0 என்ற கணக்கில் கைப்பற்றிய இலங்கை மகளிர் அணி, ஒருநாள் தொடரை 1-1 என்ற கணக்கில் சமன்செய்து அசத்தியது. அதிலும் குறிப்பாக மூன்றாவது ஒருநாள் போட்டியில் 302 ரன்கள் என்ற கனடின இலக்கை நோக்கி விளையாடிய இலங்கை அணியில் கேப்டன் சமாரி அத்தப்பத்து 195 ரன்களைச் சேர்த்து வெற்றியைத் தேடிக்கொடுத்தார்.
இந்நிலையில் சர்வதேச கிரிக்கெட் கவுன்சிலான ஐசிசி இன்று மகளிர் ஒருநாள் கிரிக்கெட் வீராங்கனைகளுக்கான தரவரிசைப் பட்டியலை வெளியிட்டுள்ளது. இதில் தென் ஆப்பிரிக்க அணிக்கெதிராக அபார ஆட்டத்தை வெளிப்படுத்தி 195 ரன்களைக் குவித்த சமாரி அத்தப்பத்து முதலிடத்திற்கு முன்னேறி சாதனை படைத்துள்ளார். அதேசமயம் முதலிடத்தில் இருந்த இங்கிலாந்தின் நாட் ஸ்கைவர் பிரண்ட் இரண்டாம் இடத்திற்கு தள்ளப்பட்டுள்ளார்.
Related Cricket News on saw vs slw
-
SAW vs SLW, 3rd ODI: சமாரி அத்தபத்து அதிரடியில் தொடரை சமன்செய்தது இலங்கை!
தென் ஆப்பிரிக்க மகளிர் அணிக்கு எதிரான கடைசி ஒருநாள் போட்டியில் இலங்கை மகளிர் அணி 6 விக்கெட் வித்தியாசத்தில் வெற்றிபெற்று 1-1 என்ற கணக்கில் தொடரை சமன்செய்து அசத்தியுள்ளது. ...
-
SAW vs SLW, 3rd ODI: அதிரடியாக விளையாடி சதமடித்த லாரா வோல்வார்ட்; இலங்கைக்கு 302 டார்கெட்!
இலங்கை மகளிர் அணிக்கு எதிரான மூன்றாவது ஒருநாள் போட்டியில் முதலில் பேட்டிங் செய்த தென் ஆப்பிரிக்க மகளிர் அணி கேப்டன் லாரா வோல்வார்ட்டின் அபாரமான சதத்தின் மூலம் 302 ரன்களை இலக்காக நிர்ணயித்துள்ளது. ...
-
SAW vs SLW, 1st ODI: சதமடித்து அசத்திய லாரா வோல்வார்ட்; தொடரை வென்றவது தென் ஆப்பிரிக்கா!
இலங்கை மகளிர் அணிக்கு எதிரான இரண்டாவது ஒருநாள் போட்டியில் தென் ஆப்பிரிக்க மகளிர் அணி 7 விக்கெட் வித்தியாசத்தில் வெற்றிபெற்று, 2-0 என்ற கணக்கில் தொடரையும் கைப்பற்றி அசத்தியது. ...
-
SAW vs SLW, 1st ODI: மழையால் கைவிடப்பட்ட முதல் ஒருநாள் போட்டி!
தென் ஆப்பிரிக்கா - இலங்கை மகளிர் அணிகளுக்கு இடையேயான முதலாவது ஒருநாள் போட்டி மழை காரணமாக பாதியிலேயே கைவிடப்பட்டது. ...
-
SAW vs SLW, 1st ODI: சதமடித்து அசத்திய தஸ்மின் பிரிட்ஸ்; இலங்கை அணிக்கு 271 டார்கெட்!
இலங்கை மகளிர் அணிக்கு எதிரான முதலாவது ஒருநாள் போட்டியில் முதலில் பேட்டிங் செய்த தென் ஆப்பிரிக்க மகளிர் அணி 271 ரன்களை இலக்காக நிர்ணயித்துள்ளது. ...
-
மகளிர் டி20 உலகக்கோப்பை: தென் ஆப்பிரிக்கா - இலங்கை இன்று மோதல்!
மகளிர் டி20 உலகக்கோப்பை கிரிக்கெட் தொடரில் இன்று நடைபெறும் முதல் போட்டியில் தென் ஆப்பிரிக்க மகளிர் அணியும், இலங்கை மகளிர் அணியும் பலப்பரீட்சை நடத்துகிறது. ...
Cricket Special Today
-
- 18 Mar 2024 07:47
-
- 16 Mar 2024 07:24