Australia
அந்த சமயம் 10 நிமிடங்கள் தாமதமானது போல் இருந்தது - கிளென் மேக்ஸ்வெல்!
இந்தியாவில் நடைபெற்ற ஐசிசி ஒருநாள் உலகக் கோப்பை கிரிக்கெட் தொடரில் ஆஸ்திரேலியா 6ஆவது முறையாக கோப்பை வென்றது. இதன் இறுதிப்போட்டியில் இந்திய அணியை 240 ரன்களுக்கு மடக்கி பிடித்த ஆஸ்திரேலியா உலகின் புதிய சாம்பியனாக வெற்றி வாகை சூடியது. அஹ்மதாபாத் நகரில் நடைபெற்ற அந்த போட்டியில் மிகச் சிறப்பாக விளையாடி இந்திய அணிக்கு ஆதரவாக உள்ள ஒரு லட்சம் ரசிகர்களை அமைதியாக வைத்திருப்போம் என்று ஆரம்பத்திலேயே ஆஸ்திரேலிய கேப்டன் பட் கமின்ஸ் தெரிவித்திருந்தார்.
இறுதியில் சொன்னதை செய்து காட்டிய அவர் உலகக் கோப்பையை வென்ற 5வது ஆஸ்திரேலியா கேப்டன் என்ற மாபெரும் சாதனையும் படைத்தார். அதை விட இறுதிப் போட்டியை பார்ப்பதற்காக வந்த பிரதமர் நரேந்திர மோடி இந்தியாவின் தோல்வியை பார்த்து விட்டு கடைசியில் விருது வழங்கும் விழாவில் வெற்றிக் கோப்பையை ஆஸ்திரேலிய கேப்டன் பட் கம்மின்ஸிடம் கொடுத்தார். அத்துடன் கோப்பையை கொடுத்த பின் அங்கிருந்து வெளியேறிய அவர் மேடையின் கீழே நின்ற ஆஸ்திரேலிய வீரர்கள் அனைவரிடமும் கை கொடுத்து வாழ்த்து தெரிவித்தார்.
Related Cricket News on Australia
-
மிக்ஜாம் புயல்: இணையத்தில் வைரலாகும் டேவிட் வார்னரின் பதிவு!
வெள்ளத்தால் பாதிக்கப்பட்டுள்ள சென்னை மக்கள் இந்த சமயத்தில் அனைவரும் சேர்ந்து பாதிக்கப்பட்ட மக்களுக்கு உதவி செய்ய வேண்டும் என்று ஆஸ்திரேலிய வீரர் டேவிட் வார்னர் தனது இன்ஸ்டாகிராம் பக்கத்தில் உருக்கமான கோரிக்கை வைத்துள்ளார். ...
-
டேவிட் வார்னர் தேர்வு : பெய்லி - ஜான்சன் இடையே வார்த்தை மோதல்!
ஆஸ்திரேலியா-பாகிஸ்தான் இடையேயான டெஸ்ட் தொடர் தொடங்கும் முன் டேவிட் வார்னரை தேர்வு செய்தது குறித்து பலத்த சர்ச்சை கிளம்பியுள்ளது. ...
-
லெக் ஸ்பின்னர்களில் ரவி பிஷ்னாய் தனித்துவமாக இருக்கிறார் - முத்தையா முரளிதரன்!
சர்வதேச கிரிக்கெட்டில் இந்திய அணியின் லெக் ஸ்பின்னர் ரவி பிஷ்னாய் தனித்துவம் மிக்கவராக இருப்பதாக சுழல் ஜாம்பவான் முத்தையா முரளிதரன் பாராட்டு தெரிவித்துள்ளார். ...
-
வைடு தரமறுத்த நடுவர்; கொந்தளித்த மேத்யூ வேட் - வைரல் காணொளி!
இந்தியா - ஆஸ்திரேலியா அணிகள் மோதிய ஐந்தாவது டி20 போட்டியில் அம்பயர் இந்திய அணிக்கு சாதகமாக கடைசி ஓவரில் வைடு தராமல் போனதாக சர்ச்சையை கிளப்பியுள்ள நிலையில், அக்காணொளி இணையத்தில் வைரலாகி வருகிறது. ...
-
சூர்யகுமார் யாதவ் கொடுத்த நம்பிக்கை எனக்கு உதவியது - அர்ஷ்தீப் சிங்!
அந்த முக்கியமான 20ஆவது ஓவரை சூரியகுமார் யாதவ் என்னிடம், நடந்ததெல்லாம் நடந்துவிட்டது.. நீ எதைப் பற்றியும் கவலைப்பட வேண்டாம் என கூறியதாக அர்ஷ்தீப் சிங் தெரிவித்துள்ளார். ...
-
மோசமான பேட்டிங்கே எங்கள் தோல்விக்கு காரணம் - மேத்யூ வேட்!
கடைசி ஐந்து ஓவர்களில் நாங்கள் மிகவும் மோசமான வகையில் பேட்டிங் செய்தோம். அது ஏமாற்றத்தை கொடுக்கிறது என ஆஸ்திரேலிய அணி கேப்டன் மேத்யூ வேட் கூறியுள்ளார். ...
-
இந்திய அணிக்கு மிகச் சிறப்பான தொடராக அமைந்தது - சூர்யகுமார் யாதவ்!
இந்த தொடரில் நாங்கள் பயமற்ற மகிழ்ச்சியான ஒரு ஆட்டத்தை விளையாட வேண்டும் என்று நினைத்து விளையாடினோம் என இந்திய அணி கேப்டன் சூர்யகுமார் யாதவ் தெரிவித்துள்ளார். ...
-
IND vs AUS, 5th T20I: பரபரப்பான ஆட்டத்தில் ஆஸ்திரேலியாவை வீழ்த்தி இந்தியா த்ரில் வெற்றி!
ஆஸ்திரேலியாவுக்கு எதிரான 5ஆவது டி20 போட்டியில் இந்திய அணி 6 ரன்கள் வித்தியாசத்தில் த்ரில் வெற்றியைப் பதிவுசெய்து அசத்தியது. ...
-
IND vs AUS, 5th T20I: ஸ்ரேயாஸ் அரைசதம்; ஆஸ்திரேலியாவுக்கு 161 இலக்கு!
ஆஸ்திரேலிய அணிக்கெதிரான ஐந்தாவது டி20 போட்டியில் முதலில் பேட்டிங் செய்த இந்திய அணி 161 ரன்களை இலக்காக நிர்ணயித்துள்ளது. ...
-
தனிப்பட்ட காரணத்தினால் வீடு திரும்பிய தீபக் சஹார்!
ஆஸ்திரேலியா அணிக்கு எதிரான 5வது டி20 போட்டியில் இந்திய அணியின் தீபக் சஹார் நீக்கப்பட்டதற்கான காரணம் குறித்து தெரிய வந்துள்ளது. ...
-
டேவிட் வார்னருக்கு வாழ்த்துகள், ஆனால் அவருக்கு நல்ல முடிவை கொடுக்க மாட்டோம் - ஷாஹின் அஃப்ரிடி!
டேவிட் வார்னரின் கடைசி டெஸ்ட் தொடரில் அவருக்கு நல்ல முடிவை நாங்கள் கொடுக்க மாட்டோம் என பாகிஸ்தான் அணியின் வேகப்பந்துவீச்சாளர் ஷாஹின் அஃப்ரிடி கூறியுள்ளார். ...
-
விராட் கோலியின் சாதனையை முறியடிக்க ருதுராஜுக்கு வாய்ப்பு!
ஆஸ்திரேலியாவுக்கு எதிரான கடைசி டி20 போட்டியில் இந்திய வீரர் ருதுராஜ் கெய்க்வாட் 19 ரன்கள் எடுக்கும் பட்சத்தில் விராட் கோலியின் சாதனையை முறியடித்து புதிய சாதனையைப் படைப்பார் என்பது குறிப்பிடத்தக்கது. ...
-
பாட் கம்மின்ஸ் உத்வேகமிக்க வீரர் - இயன் சேப்பல் பாராட்டு!
ஆஸ்திரேலிய அணியின் கேப்டன் பாட் கம்மின்ஸை பார்த்து கிரிக்கெட் வீரர் ஒருவர் உத்வேகம் பெறவில்லையென்றால், அவர் போட்டியை தவறாக விளையாடுகிறார் என ஆஸ்திரேலிய அணியின் முன்னாள் வீரர் இயான் சேப்பல் தெரிவித்துள்ளார். ...
-
ஃபேர்வெல் போட்டிக்கு டேவிட் வார்னர் தகுதியற்றவர் - மிட்செல் ஜான்சன்!
வார்னர் விளையாட்டையும் ஆஸ்திரேலிய கிரிக்கெட்டையும் விட பெரியவர் என்று நினைக்கிறார் என ஆஸ்திரேலிய அணியின் முன்னாள் வீரர் மிட்செல் ஜான்சன் கடுமையாக விமர்சித்துள்ளார். ...
Cricket Special Today
-
- 12 Jun 2025 01:27
-
- 18 Mar 2024 07:47