Hm shah
ஆசிய கோப்பை 2025: சஞ்சு சாம்சன் அரைசதம்; ஓமனுக்கு 189 டார்கெட்!
ஆசிய கோப்பை கிரிக்கெட் தொடரானது ஐக்கிய அரபு அமீரகத்தில் தொடங்கி நடைபெற்று வருகிறது. இதில் இன்று நடைபெற்ற 12ஆவது லீக் போட்டியில் குரூப் ஏ பிரிவில் இடம் பெற்றுள்ள இந்தியா மற்றும் ஓமன் அணிகள் பலப்பரீட்சை நடத்தின. அபுதாபியில் உள்ள ஷேக் சயீத் கிரிக்கெட் மைதானத்தில் நடைபெற்ற இந்த போட்டியில் டாஸ் வென்ற இந்திய அணி முதலில் பேட்டிங் செய்தவாக அறிவித்தது. இன்றைய போட்டிக்கான இந்திய அணியில் ஜஸ்பிரித் பும்ரா, வருண் சக்ரவர்த்தி ஆகியோருக்கு ஓய்வளிக்கப்பட்டு, அர்ஷ்தீப் சிங், ஹர்ஷித் ரானாவுக்கு வாய்ப்பு வழங்கப்பட்டது.
அதன்பின் களமிறங்கிய இந்திய அணிக்கு அபிஷேக் சர்மா - சுப்மன் கில் இணை தொடக்கம் கொடுத்தனர். இதில் சுப்மன் கில் 5 ரன்களை மட்டுமே எடுத்து விக்கெட்டை இழந்தார். பின்னர் களமிறங்கிய சஞ்சு சாம்சன் ஒருபக்கம் பொறுப்பான ஆட்டத்தை வெளிப்படுத்த, மறுபக்கம் அதிரடியாக விளையாடிய அபிஷேக் சர்மா பவுண்டரிகளை விளாசி அணியின் ஸ்கோரை உயர்த்தினார். இதில் 5 பவுண்டரிகள், 2 சிக்ஸர்கள் என 38 ரன்களைச் சேர்த்த கையோடு அபிஷேக் சர்மா நடையைக் கட்ட, அடுத்து வந்த ஹர்திக் பாண்டியாவும் ஒரு ரன்னில் விக்கெட்டை இழந்தார்.
Related Cricket News on Hm shah
-
ஐசிசி மகளிர் ஒருநாள் உலகக்கோப்பை 2025: புதிய உச்சத்தை எட்டிய பரிசுத்தொகை!
எதிர்வரும் மகளிர் ஒருநாள் உலகக்கோப்பை தொடருக்கான பரிசுத்தொகையாக $13.88 மில்லியன், அதாவது இந்திய மதிப்பில் சுமார் ரூ.122 கோடி வழங்கப்படும் என ஐசிசி அறிவித்துள்ளது. ...
-
வெஸ்ட் இண்டீஸ் தொடருக்கான பாகிஸ்தான் ஒருநாள், டி20 அணிகள் அறிவிப்பு!
வெஸ்ட் இண்டீஸ் தொடருக்கான பாகிஸ்தான் டி20 அணியின் கேப்டனாக சலமான் ஆகாவும், ஒருநாள் அணியின் கேப்டனாக முகமது ரிஸ்வானும் நியமிக்கப்பட்டுள்ளனர். ...
-
ரன் அவுட்டாகி அரைசதத்தை தவறவிட்ட ஃபகர் ஸமான் - காணொளி
வங்கதேசத்திற்கு எதிரான போட்டியில் பாகிஸ்தானின் ஃபகர் ஸமான் விக்கெட்டை இழந்த காணொளி இணையத்தில் வைரலாகி வருகிறது. ...
-
விக்கெட் வீழ்த்திய மகிழ்ச்சியில் சக வீரரை தாக்கிய உபைத் ஷா - வைரலாகும் காணொளி!
முல்தான் சுல்தான்ஸ் அணியின் வேகப்பந்து வீச்சாளர் உபைத் ஷா விக்கெட் வீழ்த்தியதை கொண்டாடிய தருணத்தில் சக அணி வீரரை எதிர்பாராத விதமாக தாக்கிய சம்பவம் ரசிகர்கள் மத்தியில் சிரிப்பலையை ஏற்படுத்தியுள்ளது. ...
-
பிஎஸ்எல் 2025: யசிர் கான், உபைத் ஷா அபாரம்; முதல் வெற்றியைப் பெற்றது முல்தான் சுல்தான்ஸ்!
லாகூர் கலந்தர்ஸுக்கு எதிரான பிஎஸ்எல் லீக் போட்டியில் முல்தான் சுல்தான்ஸ் அணி 33 ரன்கள் வித்தியாசத்தில் வெற்றிபெற்று அசத்தியது. ...
-
பிஎஸ்எல் 2025: பெஷாவர் ஸால்மியை வீழ்த்தி கராச்சி கிங்ஸ் த்ரில் வெற்றி!
பெஷாவர் ஸால்மி அணிக்கு எதிரான பிஎஸ்எல் லீக் போட்டியில் கராச்சி கிங்ஸ் அணி 2 விக்கெட் வித்தியாசத்தில் த்ரில் வெற்றியைப் பதிவுசெய்தது. ...
-
டேவிட் வார்னரைக் க்ளீன் போல்டாக்கிய நசீம் ஷா - காணொளி!
இஸ்லாமாபாத் யுனைடெட் அணியின் வேகப்பந்து வீச்சாளர் நசீம் ஷா தனது அபாரமான பந்துவீச்சின் மூலம் கராச்சி கிங்ஸின் கேப்டன் டேவிட் வார்னரை க்ளீன் போல்டாக்கிய காணொளி வைரலாகியுள்ளது. ...
-
ரசிகருடன் மோதலில் ஈடுபட்ட குஷ்தீல் ஷா - விளக்கமளித்த பிசிபி!
பாகிஸ்தான் அணி நிர்வாகம் தேசிய வீரர்களை நோக்கி இழிவான வார்த்தைகளால் பேசப்பட்டதை வன்மையாகக் கண்டிக்கிறது என்று பாகிஸ்தான் கிரிக்கெட் வாரியம் தெரிவித்துள்ளது. ...
-
ரசிகருடன் மோதலில் ஈடுபட்ட குஷ்தீல் ஷா - வைரலாகும் காணொளி!
பாகிஸ்தான் வீரர் குஷ்தீல் ஷா ரசிகருடன் மோதலில் ஈடுபட்ட சம்பவம் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. ...
-
ஐசிசி விதிகளை மீறியதாக பாகிஸ்தான் வீரருக்கு அபராதம் விதிப்பு!
நியூசிலாந்து அணிக்கு எதிரான முதல் டி20 போட்டியின் போது ஐசிசி விதிகளை மீறியதாக பாகிஸ்தான் வீரர் குஷ்தில் ஷாவுக்கு அபராதம் விதிக்கப்பட்டுள்ளது. ...
-
NZ vs PAK, 1st T20I: நியூசிலாந்து பவுலர்கள் அபாரம்; பாகிஸ்தான் 91 ரன்களில் ஆல் அவுட்!
நியூசிலாந்து அணிக்கு எதிரான முதல் டி20 போட்டியில் டாஸை இழந்து முதலில் பேட்டிங் செய்த பாகிஸ்தான் அணி 91 ரன்களில் ஆல் அவுட்டானது. ...
-
பாகிஸ்தானுக்கு எதிரான வெற்றி; இந்திய அணி, விராட் கோலிக்கு குவியும் வாழ்த்துகள்!
பாகிஸ்தானுக்கு எதிரான சாம்பியன்ஸ் கோப்பை லீக் போட்டியில் வெற்றிபெற்ற இந்திய அணிக்கும், இப்போட்டியில் சதமடித்த விராட் கோலிக்கும் பல்வேறு தரப்பில் இருந்தும் வாழ்த்துகள் குவிந்து வருகின்றன. ...
-
சாம்பியன்ஸ் கோப்பை 2025: பாகிஸ்தானை 241 ரன்களில் சுருட்டியது இந்தியா!
இந்திய அணிக்கு எதிரான சாம்பியன்ஸ் கோப்பை லீக் போட்டியில் முதலில் பேட்டிங் செய்த பாகிஸ்தான் அணி 241 ரன்களில் ஆல் அவுட்டானது. ...
-
தரமான கிரிக்கெட்டை விளையாட இன்னும் எங்களுக்கு வாய்ப்பு உள்ளது - ஷாஹிதி!
எங்களுக்கு சில முக்கியமான ஆட்டங்கள் மீதமுள்ளன, இன்றைய ஆட்டத்தை மறந்துவிட்டு முன்னேற முயற்சிப்போம் என ஆஃப்கானிஸ்தான் கேப்டன் ஹஸ்மத்துல்லா ஷாஹிதி தெரிவித்துள்ளார். ...
Cricket Special Today
-
- 12 Jun 2025 01:27
-
- 18 Mar 2024 07:47