Hundred mens competition
தி ஹண்ட்ரட் 2024: சதர்ன் பிரேவை வீழ்த்தி மீண்டும் கோப்பையை வென்றது ஓவல் இன்விசிபில்!
இங்கிலாந்தில் நடைபெற்று வந்த தி ஹண்ட்ரட் ஆடவர் தொடரானது நேற்றுடன் நிறைவடைந்தது. இத்தொடரில் நேற்று நடைபெற்ற இறுதிப்போட்டியியில் சதர்ன் பிரேவ் மற்றும் ஓவல் இன்விசிபில் அணிகள் பலப்பரீட்சை நடத்தின. லண்டனில் உள்ள புகழ்பெற்ற லார்ட்ஸ் கிரிக்கெட் மைதானத்தில் நடைபெற்ற இப்போட்டியில் டாஸ் வென்ற சதர்ன் பிரேவ் அணியானது முதலில் பந்துவீசுவதாக அறிவித்தது. இதையடுத்து களமிறங்கிய ஓவல் அணியில் டேவிட் மாலன் 7 ரன்களில் விக்கெட்டை இழந்து ஏமாற்றமளித்தார். பின்னர் இணைந்த வில் ஜேக்ஸ் - சாம் கரண் இணை அதிரடியாக விளையாடி ஸ்கோரை உயர்த்தினர்.
இதில் அதிரடியான ஆட்டத்தை வெளிப்படுத்தி வந்த வில் ஜேக்ஸ் 2 பவுண்டரி, 3 சிக்ஸர்கள் என 37 ரன்களைச் சேர்த்த நிலையில் விக்கெட்டை இழக்க, அவரைத்தொடர்ந்து சாம் கரணும் 25 ரன்களுடன் பெவிலியன் திரும்பினார். அதன்பின் களமிறங்கிய கேப்டன் சாம் பில்லிங்ஸ் ரன்கள் ஏதுமின்றியும், டோனவன் ஃபெரீரா 5 ரன்களிலும் என விக்கெட்டை இழக்க, ஜோர்டன் காக்ஸ் 25 ரன்களிலும், டாம் கரண் 24 ரன்களையும் சேர்க்க ஓவல்ல் இன்விசிபில் அணியானது இன்னிங்ஸ் முடிவில் 9 விக்கெட்டுகள் இழப்பிற்கு 147 ரன்களைச் சேர்த்தது. சதர்ன் பிரேவ் அணி தரப்பில் அகீல் ஹோசைன் மற்றும் தைமல் மில்ஸ் ஆகியோர் தலா 3 விக்கெட்டுகளை கைப்பற்றினர்.
Related Cricket News on Hundred mens competition
-
தி ஹண்ட்ரட் 2024: பர்மிங்ஹாம் ஃபீனிக்ஸை வீழ்த்தி இறுதிப்போட்டிக்கு முன்னேறியது சதர்ன் பிரேவ்!
பர்மிங்ஹாம் ஃபீனிக்ஸ் அணிக்கு எதிரான எலிமினேட்டர் சுற்று ஆட்டத்தில் சதர்ன் பிரேவ் அணியானது சூப்பர் ஓவரில் வெற்றிபெற்றதுடன், இறுதிப்போட்டிக்கும் முன்னேறி அசத்தியுள்ளது. ...
-
தி ஹண்ட்ரட் 2024: ஒரிஜினல்ஸை வீழ்த்திய எலிமினேட்டர் சுற்றில் நுழைந்தது ஃபீனிக்ஸ்!
மான்செஸ்டர் ஒரிஜினல்ஸ் அணிக்கு எதிரான லீக் போட்டியில் பர்மிங்ஹாம் ஃபீனிக்ஸ் அணி 9 விக்கெட் வித்தியாசத்தில் அபார வெற்றியைப் பதிவுசெய்து அசத்தியது. ...
-
அடுத்தடுத்து சிக்சர்களை விளாசிய டோனவன் ஃபெரீரா; வைரலாகும் காணொளி!
தி ஹண்ட்ரட் கிரிக்கெட் தொடரில் ஓவல் இன்விசிபில் அணிக்காக விளையாடி வரும் டோனவன் ஃபெரீரா அடுத்தடுத்து சிக்ஸர்களை விளாசிய காணொளி வைரலாகி வருகிறது. ...
-
வித்தியாசமாக ஸ்கூப் ஷாட்டை விளையாடிய பென் டக்கெட் - வைரல் காணொளி!
டிரெண்ட் ராக்கெட்ஸ் அணிக்கு எதிரான தி ஹண்ட்ரட் லீக் போட்டியில் பர்மிங்ஹாம் ஃபீனிக்ஸ் அணி வீரர் பென் டக்கெட் அடித்த ஸ்கூப் ஷாட் குறித்த காணொளி இணையத்தில் வைரலாகி வருகிறது. ...
-
தி ஹண்ட்ரட் 2024: ஸாம்பா, ஜோர்டன் அசத்தல்; ஓவல் இன்விசிபில் அபார வெற்றி!
லண்டன் ஸ்பிரிட் அணிக்கு எதிரான டி ஹண்ட்ரட் லீக் போட்டியில் ஓவல் இன்விசிபில் அணி 9 விக்கெட் வித்தியாசத்தில் அபார வெற்றியைப் பதிவுசெய்து அசத்தியுள்ளது. ...
Cricket Special Today
-
- 18 Mar 2024 07:47
-
- 16 Mar 2024 07:24