Advertisement
Advertisement
Advertisement

Icc womens t20 world cup 2024

இந்தியாவில் மகளிர் டி20 உலகக் கோப்பை தொடரை நடத்தும் எண்ணம் இல்லை - ஜெய் ஷா!
Image Source: Google
Advertisement

இந்தியாவில் மகளிர் டி20 உலகக் கோப்பை தொடரை நடத்தும் எண்ணம் இல்லை - ஜெய் ஷா!

By Bharathi Kannan August 15, 2024 • 11:59 AM View: 88

ஐசிசி மகளிர் டி20 உலகக்கோப்பை கிரிக்கெட் தொடரானது வரும் அக்டோபர் மாதம் வங்கதேசத்தில் நடைபெறவுள்ளது. இத்தொடரில் இந்தியா, இங்கிலாந்து, ஆஸ்திரேலியா, தென் ஆப்பிரிக்க உள்ளிட்ட 8 அணிகள் நேரடியாக தகுதிப்பெற்றுள்ள நிலையில், மீதமுள்ள இரு அணிகளைத் தேர்வு செய்ய குவாலிஃபையர் தொடர் ஐக்கிய அரபு அமீரகத்தில் நடபெற்றது. இத்தொடரின் இறுதிப்போட்டிக்கு இலங்கை மற்று ஸ்காட்லாந்து அணிகள் முன்னேறியதன் மூலம், நடப்பு டி20 உலகக்கோப்பை தொடரில் விளையாடும் வாய்ப்பையும் உறுதிசெய்துள்ளன. 

இந்நிலையில் வங்கதேசத்தில் உள்நாட்டு கலவரம் வெடித்துள்ள நிலையில், திட்டமிட்டபடி ஐசிசி மகளிர் டி20 உலாகக்கோப்பை கிரிக்கெட் தொடர் அக்டோபரில் அங்கு நடைபெறுமா என்ற சந்தேகம் எழுந்துள்ளது. ஏனெனில் அரசுக்கு எதிரான போராட்டம் தீவிரம் அடைந்ததை தொடர்ந்து அந்நாட்டில் ஆட்சிமாற்றமும் செய்யப்பட்டுள்ளது. அதேசமயம் ஐசிசி மகளிர் டி20 உலகக்கோப்பை கிரிக்கெட் தொடர் தொடங்க இன்னும் ஒருமாதம் மட்டுமே இடைவெளி உள்ள நிலையில் அதற்குள் நிலைமை கட்டுக்குள் வருமா என்பதும் கேள்விகுறியாகவே உள்ளது.

Advertisement

Related Cricket News on Icc womens t20 world cup 2024