If surrey
கவுண்டி கிரிக்கெட் தொடரில் முதல் சதம்; சாய் சுதர்ஷனுக்கு குவியும் வாழ்த்துகள்!
இங்கிலாந்தின் புகழ்பெற்ற கிரிக்கெட் தொடர்களில் ஒன்று கவுண்டி கிரிக்கெட் தொடரும் ஒன்று. அதன்படி நடப்பாண்டிற்கான கவுண்டி கிரிக்கெட் தொடரானது விறுவிறுப்பாக நடைபெற்று வருகிறது. இதில் நடைபெற்று வரும் 53ஆவது போட்டியில் சர்ரே மற்றும் நாட்டிங்ஹாம்ஷைர் அணிகள் பலப்பரீட்சை நடத்தின. இதில் டாஸ் வென்று முதலில் பேட்டிங் செய்த சர்ரே அணியானது ரோரி பர்ன்ஸ், சாய் சுதர்ஷன் ஆகியோரது சதத்தின் மூலம் முதல் இன்னிக்ஸில் 525 ரன்களைக் குவித்தது.
இதில் அதிகபட்சமகா ரோரி பர்ன்ஸ் 161 ரன்களையும், சாய் சுதர்ஷன் 105 ரன்களையும் சேர்த்தனர். நாட்டிங்ஹாம்ஷைர் தரப்பில் ஃபர்ஹான் அஹ்மத் 7 விக்கெட்டுகளை கைப்பற்றி அசத்தியுள்ளார். இதனையடுத்து இன்னிங்ஸைத் தொடங்கியுள்ள நாட்டிங்ஹாம்ஷைர் அணியானது இரண்டாம் நாள் ஆட்டநேர முடிவில் 3 விக்கெட்டுகளை இழந்து 144 ரன்களைச் சேர்த்துள்ளது. இதில் ஃபிரெட்டி மெக்கன் 69 ரன்களைச் சேர்த்து களத்தில் உள்ளார்.
Related Cricket News on If surrey
-
கவுண்டி கிரிக்கெட்டிலும் தனது சிறப்பான ஆட்டத்தை வெளிப்படுத்திய சாய் சுதர்சன்!
இங்கிலாந்தில் நடைபெற்று வரும் கவுண்டி சாம்பியன்ஷிப் தொடரில் சர்ரே அணிக்காக தமிழக வீரர் சாய் சுதர்சன் 73 ரன்கள் சேர்த்து அசத்தி இருக்கிறார். ...
-
இங்கிலாந்து கவுண்டி அணியில் தமிழக வீரர் சாய் சுதர்சனுக்கு வாய்ப்பு!
இங்கிலாந்தின் பிரபல கவுண்டி அணிகளில் ஒன்றான சர்ரே அணி, தமிழக வீரர் சாய் சுதர்சனை தங்கள் அணியில் இணைத்துக்கொண்டுள்ளது. ...
-
சட்டேஷ்வர் புஜராவின் மற்றொரு மேஜிக் - ஹைலைட்ஸ் காணொளி!
சர்ரே அணிக்கெதிரான லீக் ஆட்டத்தில் சசெக்ஸ் அணியின் கேப்டன் சட்டேஷ்வர் புஜாரா 131 பந்துகளில் 174 ரன்களை விளாசி அசத்தியது குறித்தான காணொளி இணையத்தில் வைரலாகி வருகிறது. ...
-
ராயல் லண்டன் ஒருநாள் : மீண்டும் மிரட்டிய புஜாரா; ஆச்சரியப்படும் ரசிகர்கள்!
சர்ரே அணிக்கெதிரான ராயல் லண்டன் ஒருநாள் கிரிக்கெட் தொடரில் சசெக்ஸ் அணியின் கேப்டன் சட்டேஷ்வர் புஜாரா மீண்டும் தனது மிரட்டலான ஆட்டத்தை வெளிப்படுத்தியுள்ளார். ...
-
டி20 பிளாஸ்ட்: சாம் கரண் அதிரடியில் சர்ரே அபார வெற்றி!
ஹாம்ஷையர் அணிக்கெதிரான லீக் ஆட்டத்தில் சர்ரே அணி 72 ரனகள் வித்தியாசத்தில் அபார வெற்றியைப் பெற்றது. ...
-
டி20 பிளாஸ்ட்: சாம் கரண் பந்துவீச்சில் சர்ரே அணி வெற்றி!
இங்கிலாந்தில் நடக்கும் மிகப்பெரிய டி20 போட்டியான டி20 பிளாஸ்ட் போட்டியில் சாம் கரண் சிறப்பாக விளையாடி வருகிறார். ...
-
கவுண்டி தொடரிலிருந்தும் விலகிய ஜேசன் ராய்!
கட்டுப்பாடுகளுடன் கூடிய பளோ பபுளில் நீண்ட நாட்கள் இருப்பது சோர்வை ஏற்படுத்தும் என்பதால் இந்த முடிவுக்கு வந்திருப்பதாக ஜேசன் ராய் தெரிவித்துள்ளார். ...
-
முதல் இன்னிங்ஸில் சொதப்பிய அஸ்வின்; 2ஆவது இன்னிங்ஸில் மரண மாஸ்!
இங்கிலாந்து தொடருக்கான பயிற்சியாக சர்ரே அணியில் இடம்பெற்று விளையாடி வரும் இந்திய சுழற்பந்து வீச்சாளர் அஸ்வின், இரண்டாவது இன்னிங்ஸில் 6 விக்கெட்டுகளை கைப்பற்றி மீண்டும் தனது திறனை நிரூபித்துள்ளார். ...
-
43 ஓவர்களை வீசியும் ஒரு விக்கெட்டை மட்டுமே எடுத்த அஸ்வின்!
இங்கிலாந்து தொடருக்கான பயிற்சியாக சர்ரே அணியில் இடம்பெற்று விளையாடி வரும் இந்திய சுழற்பந்து வீச்சாளர் அஸ்வின் 40 ஓவர்களை வீசி ஒரு விக்கெட்டை மட்டுமே கைப்பற்றினார். ...
-
காவுண்டி கிரிக்கெட்டிலும் சாதனை படைத்த அஸ்வின்!
கவுண்டி சாம்பியன்ஷிப் போட்டியின் முதல் ஓவரை வீசி இந்திய அணி சுழற்பந்து வீச்சாளர் ரவிச்சந்திரன் அஸ்வின் வரலாறு படைத்துள்ளார். ...
-
பந்துவீச்சாளர்களை பதம் பார்த்த ஹசிம் அம்லா!
தென் ஆப்பிரிக்க அணியின் முன்னாள் அதிரடி வீரர் ஹசிம் அம்லா 100 பந்தில் 3 ரன்கள் மட்டுமே எடுத்த நிலையில், 6 மணி நேரத்திற்கு மேலாக களத்தில் நின்று அணியை டிரா செய்ய வைத்துள்ளார். ...
Cricket Special Today
-
- 12 Jun 2025 01:27
-
- 18 Mar 2024 07:47