India tour
Unofficial Test: டிராவில் முடிந்த இங்கிலாந்து லையன்ஸ் - இந்தியா ஏ போட்டி!
இந்திய ஏ அணி இங்கிலாந்தில் சுற்றுப்பயணம் மேற்கொண்டு இங்கிலாந்து லையன்ஸ் அணிக்கு எதிராக இரண்டு 4 நாள் போட்டிகளில் விளையாடி வருகிறது. இதில் இரு அணிகளுக்கும் இடையேயான முதல் நான்கு நாள் போட்டியானது கேன்டர்பரியில் நடைபெற்றது. இப்போட்டியில் டாஸ் வென்ற இங்கிலாந்து அணி பந்துவீச்சை தேர்வுசெய்தது.
இதையடுத்து களமிறங்கிய இந்திய ஏ அணியில் அதிகபட்சமாக கருண் நாயர் இரட்டை சதமடித்ததுடன் 26 பவுண்டரிகள், ஒரு சிக்ஸர் என 204 ரன்களையும், துருவ் ஜூரெல் 11 பவுண்டரி, ஒரு சிக்ஸர் என 94 ரன்களையும், சர்ஃப்ராஸ் கான் 13 பவுண்டரிகளுடன் 92 ரன்களயும் சேர்க்க மற்ற வீரர்கள் பெரிதளவில் ரன்களைச் சேர்க்க தவறினர். இதனால் இந்திய ஏ அணி முதல் இன்னிங்ஸில் அனைத்து விக்கெட்டுகளையும் இழந்து 557 ரன்களுக்கு ஆல் அவுட்டானது. இங்கிலாந்து தரப்பில் ஜோஷ் ஹல், ஸமான் அக்தர் ஆகியோர் தலா 2 விக்கெட்டுகளை வீழ்த்தினர்.
Related Cricket News on India tour
-
இங்கிலாந்து சுற்றுப்பயணத்தைத் தவிர்க்கவே விராட் கோலி ஓய்வு பெற்றார் - மாண்டி பனேசர்!
வரவிருக்கும் இங்கிலாந்து சுற்றுப்பயணத்தைத் தவிர்க்கவே விராட் கோலி சர்வதேச டெஸ்ட் கிரிக்கெட்டில் இருந்து ஓய்வு பெற்றுள்ளதாக முன்னாள் வீரர் மாண்டி பனேசர் கருத்து தெரிவித்துள்ளார். ...
-
ENGL vs INDA, Day 1: இரட்டை சதத்தை நெருங்கும் கருண் நாயர்; ரன் குவிப்பில் இந்திய அணி!
இங்கிலாந்து லையனுஸுக்கு எதிரான போட்டியின் முதல் நாள் ஆட்டநேர முடிவில் இந்திய அணி 3 விக்கெட்டுகள் இழப்பிற்கு 409 ரன்களைச் சேர்த்துள்ளது. ...
-
ஸ்ரேயாஸ் ஐயருக்கு தற்போது அணியில் இடமில்லை - அஜித் அகர்கர்!
இங்கிலாந்து டெஸ்ட் தொடருக்கான இந்திய அணியில் ஸ்ரேயாஸ் அயருக்கு வாய்ப்பு வழங்கப்படாதது குறித்து இந்திய தேர்வுகுழு தலைவர் அஜித் அகர்கர் விளக்கமளித்துள்ளார். ...
-
ENG vs IND: இந்திய டெஸ்ட் அணி அறிவிப்பு; கேப்டனாக ஷுப்மன் கில் நியமனம்!
இங்கிலாந்து டெஸ்ட் தொடருக்கான இந்திய டெஸ்ட் அணி இன்று அறிவிக்கப்பட்டுள்ள நிலையில், கேப்டனாக ஷுப்மன் கில்லும், துணைக்கேப்டனாக ரிஷப் பந்தும் நியமிக்கப்பட்டுள்ளனர். ...
-
இங்கிலாந்து தொடருக்கான இந்திய யு19 அணி அறிவிப்பு; ஆயூஷ் மாத்ரே கேப்டனாக நியமனம்!
இங்கிலாந்து தொடருக்கான ஆயூஷ் மாத்ரே தலைமையிலான இந்திய அண்டர் 19 அணியில் வைபவ் சூர்யவன்ஷிக்கும் வாய்ப்பு வழங்கப்பட்டுள்ளது. ...
-
இங்கிலாந்து லையன்ஸ் அணி அறிவிப்பு; கேப்டனாக ஜேம்ஸ் ரீவ் நியமனம்!
இந்திய ஏ அணிக்கு எதிராக விளையாடும் ஜேம்ஸ் ரீவ் தலைமையிலான இங்கிலாந்து லையன்ஸ் அணி இன்று அறிவித்துள்ளது. ...
-
இந்திய அணியின் லெவனை கணித்த ஆகாஷ் சோப்ரா!
இங்கிலாந்து டெஸ்ட் தொடருக்கான இந்திய அணியின் பிளேயிங் லெவனை முன்னாள் வீரர் ஆகாஷ் சோப்ரா கணித்துள்ளார். ...
-
ஷுப்மன் கில், ரிஷப் பந்த் ஆகியோரிடம் கேப்டனுக்கான திறன் உள்ளது - ரவி சாஸ்திரி!
நீங்கள் யாரையேனும் கேப்டன் பதவிக்காக தயார்படுத்த விரும்பினால், நிச்சயம் அது ஷுப்மன் கில் என்று தான் நான் கூறுவேன் என முன்னாள் பயிற்சியாளர் ரவி சாஸ்திரி தெரிவித்துள்ளார். ...
-
பும்ராவுக்கு ஓய்வு தேவைப்படும் நேரங்களில் கில் கேப்டனாக செயல்படலாம் - வாசிம் ஜாஃபர்!
இங்கிலாந்து டெஸ்ட் தொடரில் ஜஸ்பிரித் பும்ராவுக்கு ஓய்வு தேவைப்படும் போது அவருக்கு பதிலாக ஷுப்மான் கில் டெஸ்ட் அணியை வழிநடத்த வேண்டும் என்றும் வாசிம் ஜாஃபர் தெரிவித்துள்ளார். ...
-
டெஸ்ட் அணியின் கேப்டன் பதவிக்கு ஜடேஜா சிறந்த தேர்வாக இருப்பார் - அஸ்வின்!
இந்திய அணியின் அடுத்த டெஸ்ட் கேப்டனாக அனுபவம் வாய்ந்த ஆல் ரவுண்டர் ரவீந்திர ஜடேஜாவை நியாமிக்கலாம் என்றும் முன்னாள் வீரர் ரவிச்சந்திரன் அஸ்வின் பரிந்துரைத்துள்ளார். ...
-
இந்திய டெஸ்ட் அணிக்கு கருண் நாயர் சரியான தேர்வாக இருப்பார் - அனில் கும்ப்ளே!
தற்போது தேர்ந்தெடுக்கப்படவுள்ள இந்திய அணியில் நம்பர் 4ஆம் இடத்தில் விளையாட கருண் நாயர் தான் சரியானா தேர்வாக இருப்பார் என்று முன்னாள் கேப்டன் அனில் கும்ப்ளே கூறிவுள்ளார். ...
-
டெஸ்ட் கிரிக்கெட்டின் மிகச்சிறந்த வீரர் விராட் கோலி - ஜேம்ஸ் ஆண்டர்சன்!
டெஸ்ட் கிரிக்கெட்டில் இதுவரை விளையாடிய மிகச்சிறந்த பேட்ஸ்மேன்களில் ஒருவர் விராட் கோலியும் ஒருவர் என்று இங்கிலாந்து அணியின் முன்னாள் வேகப்பந்து வீச்சாளர் ஜேம்ஸ் ஆண்டர்சன் பாராட்டிவுள்ளார். ...
-
இந்திய டெஸ்ட் அணியில் இடம்பிடிக்கும் அர்ஷ்தீப் சிங்!
இங்கிலாந்து டெஸ்ட் தொடருக்கான இந்திய அணியில் வேகப்பந்து வீச்சாளர் அர்ஷ்தீப் சிங் இடம்பெறவுள்ளதாக தகவல்கள் வெளியாகியுள்ளன. ...
-
விராட் கோலி இல்லாதது இங்கிலாந்துக்கு பெரிய ஊக்கமாக இருக்கும் - மொயீன் அலி!
விராட் கோலி சர்வதேச டெஸ்ட் கிரிக்கெட்டில் இருந்து ஓய்வை அறிவித்திருப்பது இங்கிலாந்து அணிக்கு பெரும் சாதகமாக இருக்கும் என முன்னாள் வீரர் மொயீன் அலி கூறியுள்ளார். ...
Cricket Special Today
-
- 12 Jun 2025 01:27
-
- 18 Mar 2024 07:47