Ipl
பிலிப் சால்ட்டை கட்டி தழுவிய முகமது சிராஜ்!
16ஆவது சீசன் ஐபிஎல் தொடரில் நேற்று தலைநகர் டெல்லியில் நடைபெற்ற 50ஆவது லீக் போட்டியில் ராயல் சேலஞ்சர்ஸ் பெங்களூருவை 7 விக்கெட் வித்தியாசத்தில் தோற்கடித்த டெல்லி தங்களுடைய 4ஆவது வெற்றியை பதிவு செய்து இந்த சீசனில் முதல் முறையாக புள்ளி பட்டியலில் 10ஆவது இடத்தை காலி செய்து 9ஆவது இடத்திற்கு முன்னேறி அசத்தியுள்ளது.
இதில் முதலில் பேட்டிங் செய்த பெங்களூரு 20 ஓவர்களில் 181/4 ரன்கள் சேர்த்தது. அதிகபட்சமாக விராட் கோலி 55 ரன்களும் மஹிபால் லோம்ரர் 54 ரன்களும் எடுக்க டெல்லி சார்பில் அதிகபட்சமாக மிட்சேல் மார்ஷ் 2 விக்கெட்டுகள் எடுத்தார். அதை தொடர்ந்து 182 ரன்களை துரத்திய டெல்லிக்கு வெற்றி பெற்றாக வேண்டும் என்ற வெறியுடன் அடித்து நொறுக்கிய தொடக்க வீரர்கள் கேப்டன் டேவிட் வார்னர் 22 ரன்களில் ஆட்டமிழந்தாலும் மற்றொரு தொடக்க வீரர் பில் சால்ட் அபாரமாக செயல்பட்டு 8 பவுண்டரி 6 சிக்ஸருடன் அரை சதமடித்து 87 ரன்கள் குவித்தார்.
Related Cricket News on Ipl
-
ரோஹித் சர்மா கொஞ்சம் பிரேக் எடுக்க வேண்டும்- சுனில் கவாஸ்கர்!
‘அடுத்தடுத்து இரண்டு டக்அவுட் ஆகிறீர்கள் என்றால் கொஞ்ச நாள் பிரேக் எடுத்துக் கொள்ளுங்கள். அதுதான் உலக டெஸ்ட் சாம்பியன்ஷிப் பைனலில் இந்தியாவிற்கு ஆடுவதற்கு நல்லது’ என்று ரோஹித் சர்மாவிற்கு அறிவுறுத்தியுள்ளார் சுனில் கவாஸ்கர். ...
-
ஐபிஎல் 2023: குஜராத் டைட்டன்ஸ் vs லக்னோ சூப்பர் ஜெயண்ட்ஸ் - போட்டி முன்னோட்டம் & ஃபேண்டஸி லெவன் டிப்ஸ்!
ஐபிஎல் தொடரின் இன்றைய லீக் ஆட்டத்தில் குஜராத் டைட்டன்ஸ் - லக்னோ சூப்பர் ஜெயண்ட்ஸ் அணிகள் பலப்பரீட்சை நடத்துகின்றன. ...
-
ஐபிஎல் 2023: தாண்டவமாடிய சால்ட்; ஆர்சிபியை பந்தாடியது டெல்லி கேப்பிட்டல்!
ராயல் சேலஞ்சர்ஸ் பெங்களூரு அணிக்கெதிரான ஐபிஎல் லீக் ஆட்டத்தில் டெல்லி கேப்பிட்டல்ஸ் அணி 7 விக்கெட் வித்தியாசத்தில் அபார வெற்றியைப் பதிவுசெய்தது. ...
-
சால்ட்டுடன் மோதலில் ஈடுபட்ட முகமது சிராஜ்; வைரல் காணொளி!
ஆர்சிபி - டெல்லி அணிகளுக்கு இடையேயான போட்டியின் போது ஆர்சிபி விரர் முகமது சிராஜ், பிலிப் சால்டிடம் மோதலில் ஈடுபட்ட சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. ...
-
இந்த சீசனில் நான் அதிக போட்டிகளில் விளையாடி மகிழ்ச்சியாக இருக்கிறேன் - மதீஷா பதிரானா!
நான் கிறிஸ்டியானோ ரொனால்டோவின் தீவிரமான ரசிகன். எனவே அவரது கோல் கொண்டாட்டத்தை போல நான் எனது விக்கெட் கொண்டாட்டத்தை அமைத்துக் கொண்டேன் என சிஎஸ்கே வீரர் மதீஷா பதிரானா தெரிவித்துள்ளார். ...
-
ஐபிஎல் 2023: புதிய சாதனையை நிகழ்த்திய விராட் கோலி!
ஐபிஎல் தொடர் வரலாற்றில் 7,000 ரன்களை கடந்த முதல் வீரர் எனும் வரலாற்றுச் சாதனையை ஆர்சிபி வீரர் விராட் கோலி படைத்துள்ளார். ...
-
ஐபிஎல் 2023: விராட், லோமரோர் அரைசதம்; டெல்லிக்கு 182 டார்கெட்!
டெல்லி கேப்பிட்டல்ஸுக்கு எதிரான ஐபிஎல் லீக் ஆட்டத்தில் முதலில் பேட்டிங் செய்த ஆர்சிபி அணி 182 ரன்களை இலக்காக நிர்ணயித்துள்ளது. ...
-
பதிரானா இலங்கைக்கு பெரும் சொத்தாக இருப்பார் - எம் எஸ் தோனி புகழாரம்!
மதிஷா பதிரானா அனைத்து வகையான ஐசிசி போட்டிகளிலும் விளையாடுவதையும் நான் விரும்புகிறேன் என சிஎஸ்கே கேப்டன் எம் எஸ் தோனி கூறியுள்ளார் ...
-
எங்கள் வீரர்கள் போதுமான ரன்களை எடுக்கவில்லை - ரோஹித் சர்மா!
வெளிப்படையாக இந்த ஆண்டு ஹோம் கிரவுண்டுகளில் எந்த அட்வான்டேஜும் இல்லை என்று தெளிவாகத் தெரிகிறது என மும்பை இந்தியன்ஸ் அணியின் கேப்டன் ரோஹித் சர்மா தெரிவித்துள்ளார். ...
-
ஐபிஎல் 2023: மீண்டும் மும்பையை வீழ்த்தி சிஎஸ்கே அபார வெற்றி!
மும்பை இந்தியன்ஸுக்கு எதிரான ஐபிஎல் லீக் ஆட்டத்தில் சென்னை சூப்பர் கிங்ஸ் அணி 6 விக்கெட் வித்தியாசத்தில் வெற்றிபெற்று அச்த்தியது. ...
-
ஐபிஎல் தொடரிலிருந்து விலகிய ஜோஷுவா லிட்டில்; காரணம் இதுதான்!
வங்கதேச அணிக்கு எதிரான தொடரில் விளையாடும் அயர்லாந்து அணியில் இடம்பிடித்துள்ளதால், ஐபிஎல் தொடரிலிருந்து குஜராத் டைட்டன்ஸ் வீரர் ஜோஷுவா லிட்டில் விலகியுள்ளார். ...
-
அபாரமான யார்க்கரை வீசிய பதிரான; இணையத்தில் வைரலாகும் காணொளி!
மும்பை இந்தியன்ஸுக்கு எதிரான ஐபிஎல் லீக் ஆட்டத்தில் சிஎஸ்கேவின் மதீஷா பதிரானா தனது அபாரமான யார்க்கர்கள் மூலம் எதிரணி பேட்டர்களை ஸ்தம்பிக்க வைத்த காணொளி இணையத்தில் வைரலாகி வருகிறது. ...
-
ஐபிஎல் 2023: மும்பையை 139 ரன்களில் சுருட்டியது சிஎஸ்கே!
சென்னை சூப்பர் கிங்ஸிற்கு எதிரான ஐபிஎல் லீக் ஆட்டத்தில் முதலில் பேட்டிங் செய்த மும்பை இந்தியன்ஸ் அணி 140 ரன்களை இலக்காக நிர்ணயித்துள்ளது. ...
-
எங்கள் நாட்டின் 1000க்கும் மேற்பட்ட ஸ்பின்னர்ஸ் உள்ளனர் - ரஷித் கான்!
உண்மையிலேயே எங்களது நாட்டில் (ஆஃப்கானிஸ்தானில்) ஆயிரத்திற்கும் அதிகமான ரிஸ்ட் ஸ்பின்னர்கள் இருக்கிறார்கள் என குஜராத் டைட்டன்ஸ் வீரர் ரஷித் கான் தெரிவித்துள்ளார். ...
Cricket Special Today
-
- 18 Mar 2024 07:47
-
- 16 Mar 2024 07:24