Kv siddharth
டிஎன்பிஎல் 2023: மதுரை பாந்தர்ஸை வீழ்த்தி லைகா கோவை கிங்ஸ் அபார வெற்றி!
தமிழ்நாடு பிரீமியர் லீக் தொடரின் 7ஆவது சீசன் விறுவிறுப்பாக நடைபெற்றுவருகிறது. 24ஆவது போட்டியில் மதுரை பாந்தர்ஸ் மற்றும் லைகா கோவை கிங்ஸ் அணிகள் மோதின. இதில், டாஸ் வென்ற மதுரை பாந்தர்ஸ் அணி முதலில் பவுலிங் தேர்வு செய்தது. அதன்படி களமிறங்கிய, தொடக்க வீரர் சுஜய் 4 ரன்களில் ஆட்டமிழந்தார். மற்றொரு தொடக்க வீரரான சுரேஷ் குமார் அதிரடியாக விளையாடி 29 பந்துகளில் 4 சிக்ஸர்கள், 6 பவுண்டரிகள் உள்பட 64 ரன்கள் குவித்தார்.
இதையடுத்து வந்த சச்சின் மற்றும் கேப்டன் ஜோடி சேர்ந்து அதிரடியாக விளையாடி ரன்கள் குவித்தனர். இதில், சச்சின் 51 பந்துகளில் 67 ரன்கள் சேர்த்து வெளியேறினார். ஷாருக்கான் 23 பந்துகளில் 3 சிக்ஸர்கள், 6 பவுண்டரிகள் உள்பட 53 ரன்கள் சேர்த்த நிலையில் ஆட்டமிழந்தார். இறுதியாக லைகா கோவை கிங்ஸ் அணி 20 ஓவர்களில் 5 விக்கெட் இழப்பிற்கு 208 ரன்கள் குவித்தது. பந்து வீச்சு தரப்பில் குர்ஜாப்னீத் சிங் மற்றும் ஸ்வப்னில் சிங் ஆகியோர் தலா 2 விக்கெட்டுகளை கைப்பற்றினர்.
Related Cricket News on Kv siddharth
-
டிஎன்பிஎல் 2023: சுஜய் அதிரடியில் அடுத்த வெற்றியைப் பதிவுசெய்த கோவை!
திருச்சி அணிக்கெதிரான டிஎன்பிஎல் லீக் ஆட்டத்தில் லைகா கோவை கிங்ஸ் அணி 6 விக்கெட் வித்தியாசத்தில் வெற்றிபெற்று அசத்தியது. ...
-
டிஎன்பிஎல் 2023: திருச்சியை 117 ரன்களில் சுருட்டியது கோவை!
கோவை அணிக்கெதிரான டிஎன்பிஎல் லீக் ஆட்டத்தில் முதலில் பேட்டிங் செய்த திருச்சி அணி 118 ரன்களை மட்டுமே இழக்காக நிர்ணயித்துள்ளது. ...
-
ஐபிஎல் 2022: மலிங்காவின் சாதனையை சமன்செய்த உம்ரான் மாலிக்!
மலிங்காவைத் தொடர்ந்து ஐபிஎல் தொடரில் உம்ரான் மாலிக் தனித்துவமான சாதனை ஒன்றை நிகழ்த்தியுள்ளார். ...
-
விஜய் ஹசாரே கோப்பை: கர்நாடகாவை பந்தாடியது தமிழ்நாடு!
கர்நாடகா அணிக்கெதிரான விஜய் ஹசாரே கோப்பை லீக் ஆட்டத்தில் தமிழ்நாடு அணி 8 விக்கெட் வித்தியாசத்தில் வெற்றிபெற்று அசத்தியது. ...
-
விஜய் ஹசாரே: கர்நாடகாவை 122 ரன்னில் சுருட்டியது தமிழ்நாடு!
தமிழ்நாடு அணிக்கெதிரான விஜய் ஹசாரே கோப்பை லீக் ஆட்டத்தில் முதலில் பேட்டிங் செய்த கர்நாடகா அணி 122 ரன்களில் ஆல் அவுட்டானது. ...
-
ஐபிஎல் 2021: காயம் காரணமாக தமிழக வீரர் விலகல்!
டெல்லி கேப்பிடல்ஸ் அணியில் இடம்பெற்றிருந்த தமிழகத்தைச் சேர்ந்த மணிமாறன் சித்தார்த் காயம் காரணமாக ஐபிஎல் தொடரின் எஞ்சியுள்ள போட்டிகளிலிருந்து விலகியுள்ளார். ...
-
இந்திய அணியில் மீண்டும் வாய்ப்பு கிடைக்காத ஐந்து வீரர்கள்!
சரியான ஃபார்ம் இல்லாததாலும், வயதின் காரணமாகவும் இந்திய அணியில் வாய்ப்பு கிடைக்காமல் தவித்து வரும் ஐந்து வீரர்கள் குறித்த தகவல்களை இப்பதிவில் காண்போம். ...
-
கரோனா தடுப்பூசி: ஆர்வம் காட்டும் இந்திய கிரிக்கெட் வீரர்கள்!
இந்திய கிரிக்கெட் வீரர்கள் தீபக் சஹார், சித்தார்த் கவுல் ஆகியோர் இன்று தங்களது முதல் டோஸ் கரோனா தடுபூசியை செலுத்தி கொண்டனர். ...
Cricket Special Today
-
- 18 Mar 2024 07:47
-
- 16 Mar 2024 07:24