Nz cricket
பஞ்சாப் - ஹைதராபாத் போட்டிக்கு பின் ஐபிஎல் புள்ளி பட்டியலின் நிலை!
ஐபிஎல் தொடரில் நேற்று நடைபெற்ற லீக் போட்டியில் பஞ்சாப் கிங்ஸ் - சன்ரைசர்ஸ் ஹைதராபாத் அணிகள் பலப்பரீட்சை நடத்தின. இப்போட்டியில் டாஸ் வென்ற பஞ்சாப் கிங்ஸ் அணி முதலில் பந்துவீசுவதாக அறிவித்தது. அதன்படி களமிறங்கிய சன்ரைசர்ஸ் ஹைதராபாத் அணியின் தொடக்க வீரர்கள் டிராவிஸ் ஹெட் 22 ரன்களுக்கும், ஐடன் மார்க்ரம் ரன்கள் ஏதுமின்றியும், அபிஷேக் சர்மா 16 ரன்களுக்கும், ராகுல் திரிபாதி, ஹென்ரிச் கிளாசென் போன்ற வீரர்கள் அடுத்தடுத்து சொற்ப ரன்களுக்கு ஆட்டமிழந்து ஏமாற்றமளித்தனர்.
பின்னர் இணைந்த நிதீஷ் ரெட்டி - அப்துல் சமத் ஆகியோர் அதிரடியாக விளையாடி அணியின் ஸ்கோரை உயர்த்தினர். இதில் சிறப்பான ஆட்டத்தை வெளிப்படுத்திய நிதீஷ் ரெட்டி தனது முதல் அரைசதத்தைப் பதிவுசெய்ததுடன், 4 பவுண்டரி, 5 சிக்சர்கள் என 64 ரன்களைச் சேர்த்தார். பஞ்சாப் கிங்ஸ் அணி தரப்பில் அபாரமாக பந்துவீசிய அர்ஷ்தீப் சிங் 4 ஓவர்களில் 29 ரன்களை மட்டுமே கொடுத்து 4 விக்கெட்டுகளைக் கைப்பற்றி அசத்தினார். அதேசமயம் சாம் கரண் மற்றும் ஹர்ஷல் படேல் ஆகியோரும் தங்கள் பங்கிற்கு 2 விக்கெட்டுகளை வீழ்த்தினர்.
Related Cricket News on Nz cricket
-
பேட்டிங்கில் சிறப்பாக செயல்படாததே தோல்விக்கு காரணம் - ஷிகர் தவான்!
ஷஷாங்க் மற்றும் அஷுதோஷ் இருவரும் தொடர்ச்சியாக சிறப்பாக விளையாடி வருவது மகிழ்ச்சியளிக்கிறது என பஞ்சாப் கிங்ஸ் அணியின் கேப்டன் ஷிகர் தவான் பாராட்டியுள்ளார். ...
-
SAW vs SLW, 1st ODI: மழையால் கைவிடப்பட்ட முதல் ஒருநாள் போட்டி!
தென் ஆப்பிரிக்கா - இலங்கை மகளிர் அணிகளுக்கு இடையேயான முதலாவது ஒருநாள் போட்டி மழை காரணமாக பாதியிலேயே கைவிடப்பட்டது. ...
-
கிரிக்கெட்டின் மிகச்சிறந்த ஆட்டமாக இது இருக்கும் - பாட் கம்மின்ஸ்!
இம்பேக் பிளேயர் விதிமுறை இருப்பதினால் இனி 150 முதல் 160 ரன்கள் வரை அடிக்கும் பட்சத்தில் பத்தில் ஒன்பது போட்டிகள் தோல்வியை தான் கொடுக்கும் என்று சன்ரைசர்ஸ் ஹைதராபாத் அணி கேப்டன் பாட் கம்மின்ஸ் தெரிவித்துள்ளார். ...
-
ஐபிஎல் 2024: ஷஷாங்க் சிங், அஷுதோஷ் சர்மா போராட்டம் வீண்; சன்ரைசர்ஸ் ஹைதராபாத் த்ரில் வெற்றி!
ஐபிஎல் 2024: பஞ்சாப் கிங்ஸ் அணிக்கு எதிரான லீக் போட்டியில் சன்ரைசர்ஸ் ஹைதராபாத் அணி 2 ரன்கள் வித்தியாசத்தில் த்ரில் வெற்றியைப் பதிவுசெய்துள்ளது. ...
-
அபாரமான ஸ்டம்பிங் செய்து மிரட்டிய ஹென்ரிச் கிளாசென் - வைரல் காணொளி!
பஞ்சாப் கிங்ஸ் அணிக்கு எதிரான ஐபிஎல் லீக் போட்டியில் சன்ரைசர்ஸ் ஹைதராபாத் அணியின் ஹென்ரிச் கிளாசென் செய்த அபாரமான ஸ்டம்பிங் குறித்த காணொளி இணையத்தில் வைரலாகி வருகிறது. ...
-
சன்ரைசர்ஸ் ஹைதராபாத் அணியில் புதிய வரலாற்று சாதனை படைத்த அபிஷேக் சர்மா!
சன்ரைசர்ஸ் ஹைதராபாத் அணிக்காக விளையாடிவரும் இளம் வீரர் அபிஷேக் சர்மா 1000 ரன்களை கடந்து புதிய மைல் கல்லை எட்டியுள்ளார். ...
-
SAW vs SLW, 1st ODI: சதமடித்து அசத்திய தஸ்மின் பிரிட்ஸ்; இலங்கை அணிக்கு 271 டார்கெட்!
இலங்கை மகளிர் அணிக்கு எதிரான முதலாவது ஒருநாள் போட்டியில் முதலில் பேட்டிங் செய்த தென் ஆப்பிரிக்க மகளிர் அணி 271 ரன்களை இலக்காக நிர்ணயித்துள்ளது. ...
-
ஐபிஎல் 2024: நிதீஷ் ரெட்டி அரைசதத்தால் தப்பிய சன்ரைசர்ஸ்; பஞ்சாப் கிங்ஸிற்கு 183 ரன்கள் இலக்கு!
ஐபிஎல் 2024: பஞ்சாப் கிங்ஸ் அணிக்கு எதிரான லீக் போட்டியில் முதலில் பேட்டிங் செய்த சன்ரைசர்ஸ் ஹைதராபாத் அணி 183 ரன்களை இலக்காக நிர்ணயித்துள்ளது. ...
-
ஐசிசி மகளிர் ஒருநாள் தரவரிசை: முன்னேற்ற கண்ட சோஃபி டிவைன், எமி ஜோன்ஸ்!
நியூசிலாந்து - இங்கிலாந்து மகளிர் அணிகளுக்கு இடையேயா ஒருநாள் தொடரில் சிறப்பாக செயல்பட்ட இரு நாட்டு வீராங்கனைகளும் ஐசிசி தரவரிசையில் முன்னேற்றம் கண்டுள்ளனர். ...
-
ஒரே ஓவரில் சன்ரைசர்ஸ் அஸ்திவாரத்தை சரித்த அர்ஷ்தீப் சிங் - காணொளி!
சன்ரைசர்ஸ் ஹைதராபாத் அணிக்கு எதிரான லீக் போட்டியில் பஞ்சாப் கிங்ஸ் வேகப்பந்து வீச்சாளர் அர்ஷ்தீப் சிங் தனது ஒரே ஓவரில் ஆட்டத்தை திருப்பிய காணொளி இணையத்தில் வைரலாகி வருகிறது. ...
-
PAK vs NZ: பாகிஸ்தான் டி20 அணியில் முகமது அமீர், இமாத் வசிம், உஸ்மான் கானுக்கு இடம்!
நியூசிலாந்து டி20 தொடருக்கான பாகிஸ்தான் டி20 அணியில் ஐக்கிய அரபு அமீரக கிரிக்கெட் வாரியத்தால் தடைசெய்யப்பட்ட உஸ்மான் கானுக்கு வாய்ப்பு வழங்கப்பட்டுள்ளது சர்ச்சையை ஏற்படுத்தியுள்ளது. ...
-
ஐபிஎல் 2024: ஹசரங்காவிற்கு மாற்றாக விஜயகாந்தை ஒப்பந்தம் செய்தது சன்ரைசர்ஸ்!
காயம் காரணமாக ஐபிஎல் தொடரிலிருந்து விலகிய வநிந்து ஹசரங்காவிற்கு மாற்றாக விஜயகாந்த வியாஸ்காந்தை ஒப்பந்தம் செய்த சன்ரைசர்ஸ் ஹைதராபாத் அணி. ...
-
டி20 உலகக்கோப்பை தொடரில் விராட் - ரோஹித் தொடக்கம் தர வேண்டும் - பிரையன் லாரா!
டி20 உலகக்கோப்பை தொட்ருக்கான இந்திய அணியின் தொடக்க வீரர்களாக விராட் கோலி - ரோஹித் சர்மா ஆகியோர் களமிறங்க வேண்டும் என முன்னாள் ஜாம்பவான் பிரையன் லாரா தெரிவித்துள்ளார். ...
-
தோனிக்கு முன்னதாக களமிறங்க வந்த ரவீந்திர ஜடேஜா; அடுத்த நடந்த சுவாரஸ்யம்!
நேற்றைய போட்டியில் மகேந்திர சிங் தோனி இறங்குவார் என்று எல்லோரும் எதிர்பார்க்க, ஜடேஜா மைதானத்தில் களமிறங்குவதுபோல நடித்து, பின்னர் தோனிக்கு வழிவிட்ட காணொளி இணையத்தில் வைரலாகி வருகிறது. ...
Cricket Special Today
-
- 12 Jun 2025 01:27
-
- 18 Mar 2024 07:47