Rcb vs
WPL 2025: எல்லிஸ் பெர்ரி அரைசதம்; மும்பை இந்தியன்ஸுக்கு 168 ரன்கள் இலக்கு!
மகளிர் பிரீமியர் லீக் கிரிக்கெட் தொடரின் 3ஆவது சீசன் விறுவிறுப்பான கட்டத்தை எட்டியுள்ளது. இதில் இன்று நடைபெற்ற 7ஆவது லீக் போட்டியில் ராயல் சேலஞ்சர்ஸ் பெங்களூரு மற்றும் மும்பை இந்தியன்ஸ் அணிகள் பலப்பரீட்சை நடத்தின.
பெங்களூருவில் உள்ள எம் சின்னசாமி மைதானத்தில் நடைபெற்ற இப்போட்டியில் டாஸ் வென்ற மும்பை இந்தியன்ஸ் அணி முதலில் பந்துவீசுவதாக அறிவித்தது. இதையடுத்து களமிறங்கிய ஆர்சிபி அணிக்கு கேப்டன் ஸ்மிருதி மந்தனா - டேனியல் வையட் இணை தொடக்கம் கொடுத்தனர். இதில் அதிரடியான தொடக்கத்தைக் கொடுத்த ஸ்மிருதி மந்தனா 4 பவுண்டரி, ஒரு சிக்ஸர் என 26 ரன்களைச் சேர்த்த நிலையில் விக்கெட்டை இழந்தார். அவரைத்தொடர்ந்து மற்றொரு தொடக்க வீராங்கனையான டேனியல் வையட்டும் 9 ரன்களுடன் நடையைக் கட்டினார்.
Related Cricket News on Rcb vs
-
எங்கள் உறவை நாடு அறியத் தேவையில்லை - கௌதம் கம்பீர்!
விராட் கோலிக்கும் எனக்கும் உள்ள உறவை நாடு அறியத் தேவையில்லை என இந்திய அணியின் முன்னாள் வீரர் கௌதம் கம்பீர் தெரிவித்துள்ளார். ...
-
ஐபிஎல் 2024 எலிமினேட்டர் : ராஜஸ்தான் ராயல்ஸ் vs ராயல் சேலஞ்சர்ஸ் பெங்களூரு - உத்தேச லெவன்!
ஐபிஎல் தொடரில் இன்று நடைபெறும் எலிமினேட்டர் சுற்று ஆட்டத்தில் ராஜஸ்தான் ராயல்ஸ் - ராயல் சேலஞ்சர்ஸ் பெங்களூரு அணிகள் பலப்பரீட்சை நடத்தும் நிலையில், இரு அணிகளின் கணிக்கப்பட்ட பிளேயிங் லெவன் குறித்து இப்பதிவில் பார்ப்போம். ...
-
ஐபிஎல் 2024 எலிமினேட்டர் : ராஜஸ்தான் ராயல்ஸ் vs ராயல் சேலஞ்சர்ஸ் பெங்களூரு - உத்தேச லெவன் & ஃபேண்டஸி லெவன் டிப்ஸ்!
ஐபிஎல் தொடரில் நாளை நடைபெறும் எலிமினேட்டர் சுற்று போட்டியில் ராஜஸ்தான் ராயல்ஸ் மற்றும் ராயல் சேலஞ்சர்ஸ் பெங்களூரு அணிகள் பலப்பரீட்சை நடத்தவுள்ளன. ...
-
எலிமினேட்டரில் ஆர்சிபி அணிதான் வெற்றிபெறும் - அம்பத்தி ராயுடு கணிப்பு!
ராஜஸ்தான் ராயல்ஸ் அணிக்கு எதிரான எலிமினேட்டர் சுற்று போட்டியில் ஆர்சிபி அணி வெற்றிபெறுவதற்கு அதிக வாய்ப்பு உள்ளதாக முன்னாள் வீரர் அம்பத்தி ராயுடு கணித்துள்ளார். ...
-
தோனியின் அந்த சிக்ஸர் தான் எங்கள் வெற்றிக்கு காரணம் - தினேஷ் கார்த்திக்!
சிஎஸ்கே அணிக்கு எதிரான போட்டியில் நாங்கள் வெற்றிபெற தோனி அடித்த அந்த ஒரு சிக்ஸர் தான் காரணம் என ஆர்சிபி வீரர் தினேஷ் கார்த்திக் தெரிவித்துள்ளார். ...
-
110 மீட்டர் சிக்ஸரை விளாசி மிரளவைத்த தோனி - வைரலாகும் காணொளி!
ஆர்சிபி அணிக்கு எதிரான போட்டியில் சிஎஸ்கே வீரர் எம் எஸ் தோனி 110 மீட்டர் தூர சிக்ஸரை விளாசிய காணொளி இணையத்தில் வைரலாகி வருகிறது. ...
-
மழைக்கு பின் ஆடுகளம் ராஞ்சி மைதானத்தின் ஐந்தாம் நாள் ஆடுகளம் போல இருந்தது - ஃபாஃப் டூ பிளெசிஸ்!
இப்போட்டியில் நாங்கள் எதிரணியை 175 ரன்களில் சுருட்ட வேண்டும் என்று எண்ணினோம். அதனை ஒரு கட்டத்தில் எங்களால் செய்ய முடியும் என்றே தோன்றியது என்று ஆர்சிபி அணி கேப்டன் ஃபாஃப் டூ பிளெசிஸ் தெரிவித்துள்ளார். ...
-
அந்த மூன்று வீரர்கள் இல்லாததே எங்கள் தோல்விக்கு காரணம் - ருதுராஜ் கெய்க்வாட்!
நாங்கள் சீரான இடைவேளையில் விக்கெட்டுகளை இழந்து கொண்டே இருந்ததின் காரணமாக எங்களால் இந்த இலக்கை எட்டமுடியவில்லை என்று சிஎஸ்கே அணி கேப்டன் ருதுராஜ் கெய்க்வட் தெரிவித்துள்ளார். ...
-
ஐபிஎல் 2024: சிஎஸ்கேவை வீழ்த்தி பிளே ஆஃப் சுற்றுக்குள் நுழைந்தது ஆர்சிபி!
ஐபிஎல் 2024: சென்னை சூப்பர் கிங்ஸ் அணிக்கு எதிரான லீக் போட்டியில் ராயல் சேலஞ்சர்ஸ் பெங்களூரு அணி 27 ரன்கள் வித்தியாசத்தில் வெற்றிபெற்றதுடன், ஐபிஎல் தொடரின் பிளே ஆஃப் சுற்றுக்கும் முன்னேறி அசத்தியுள்ளது. ...
-
மீண்டும் சர்ச்சையான மூன்றாம் நடுவரின் தீர்ப்பு; டூ பிளெசிஸிற்கு கொடுத்த தீர்ப்பு சரியா? - காணொளி!
சென்னை சூப்பர் கிங்ஸ் அணிக்கு எதிரான லீக் போட்டியின் போது ஆர்சிபி அணி கேப்டன் ஃபாஃப் டூ பிளெசிஸ் சர்ச்சைக்குரிய முறையில் விக்கெட்டை இழந்த காணொளி வைரலாகி வருகிறது. ...
-
ஐபிஎல் 2024: வான வேடிக்கை காட்டிய ஆர்சிபி பேட்டர்ஸ்; சிஎஸ்கே அணிக்கு 219 ரன்கள் டார்கெட்!
ஐபிஎல் 2024: சென்னை சூப்பர் கிங்ஸ் அணிக்கு எதிரான லீக் போட்டியில் முதலில் பேட்டிங் செய்த ராயல் சேலஞ்சர்ஸ் பெங்களூரு அணி 218 ரன்களை இலக்காக நிர்ணயித்துள்ளது. ...
-
மைதானத்தின் மேற்கூரைக்கு சிக்ஸரை பறக்கவிட்ட விராட் கோலி - வைரல் காணொளி!
சென்னை சூப்பர் கிங்ஸிற்கு எதிரான போட்டியில் விராட் கோலி அடித்த இமாலய சிக்ஸர் குறித்த காணொளி இணையத்தில் வைரலாகி வருகிறது. ...
-
ஐபிஎல் 2024: ராயல் சேலஞ்சர்ஸ் பெங்களூரு vs சென்னை சூப்பர் கிங்ஸ் - உத்தேச லெவன்!
ராயல் சேலஞ்சர்ஸ் பெங்களூரு - சென்னை சூப்பர் கிங்ஸ் அணிகள் பலப்பரீட்சை நடத்தவுள்ள நிலையில், இரு அணிகளின் கணிக்கப்பட்ட பிளேயிங் லெவன் குறித்து இப்பதிவில் பார்ப்போம். ...
-
ஆர்சிபி - சிஎஸ்கே போட்டி மழையால் பாதிக்கும் அபாயம்; போட்டி ரத்தானால் என்ன ஆகும்?
ராயல் சேலஞ்சர்ஸ் பெங்களூரு - சென்னை சூப்பர் கிங்ஸ் அணிகள் நாளை பலப்பரீட்சை நடத்தவுள்ள நிலையில், இப்போட்டி மழையால் பாதிக்கப்படலாம் என தகவல் வெளியாகியுள்ளது. ...
Cricket Special Today
-
- 12 Jun 2025 01:27
-
- 18 Mar 2024 07:47