Royal challengers
விராட் கோலிக்கு பாதுகாப்பு அச்சுறுத்தல்; பயிற்சியை ரத்து செய்த ஆர்சிபி - தகவல்!
இந்தியாவின் பல்வேறு நகரங்களில் நடைபெற்று வந்த ஐபிஎல் தொடரின் 17ஆவது சீசனுக்கான பிளே ஆஃப் சுற்று போட்டிகள் நேற்று முதல் தொடங்கியது. இதில் நேற்று நடைபெற்ற முதலாவது குவாலிஃபையர் சுற்று ஆட்டத்தில் கொல்கத்தா நைட் ரைட்ர்ஸ் அணியானது 8 விக்கெட் வித்தியாசத்தில் சன்ரைசர்ஸ் ஹைதராபாத் அணியை வீழ்த்தியதுடன், நான்காவது முறையாக இறுதிப்போட்டிக்கு முன்னேறி அசத்தியுள்ளது.
இதையடுத்து இன்று நடைபெறும் எலிமினேட்டர் சுற்று ஆட்டத்தில் புள்ளிப்பட்டியலின் மூன்று மற்றும் நான்காம் இடங்களைப் பிடித்துள்ள ராஜஸ்தான் ராயல்ஸ் மற்றும் ராயல் சேலஞ்சர்ஸ் பெங்களூரு அணிகள் பலப்பரீட்சை நடத்தவுள்ளன. இரு அணிகளிலும் அதிரடி வீரர்கள் நிறைந்துள்ளதால் இப்போட்டியில் எந்த அணி வெற்றிபெற்று, இரண்டாவது குவாலிஃபையர் சுற்றுக்கு முன்னேறும் என்ற எதிர்பார்ப்புகள் அதிகரித்துள்ளன.
Related Cricket News on Royal challengers
-
நடப்பு ஐபிஎல் தொடரில் விராட் கோலி தனது சொந்த சாதனையை முறியடிப்பார் - மேத்யூ ஹைடன்!
ஐபிஎல் தொடர் வரலாற்றில் ஒரு சீசனில் அதிக ரன்கள் அடித்த வீரர் எனும் தனது சொந்த சாதனையை விராட் கோலி நடப்பாண்டு ஐபிஎல் தொடரில் முறியடிப்பார் என்று முன்னாள் வீரர் மேத்யூ ஹைடன் தெரிவித்துள்ளார். ...
-
நீங்கள் விராட் கோலியாக இல்லாத வரை இது நடக்காது - ரைலீ ரூஸோவ்!
அனைத்து டி20 போட்டிகளிலும் சிறப்பாக செயல்பட்டு ஸ்கோர் குவிக்க வேண்டும் எனில் அதற்கு நீங்கள் விராட் கோலியாக இருக்க வேண்டும் என்று ரைலீ ரூஸோவ் தெரிவித்துள்ளார். ...
-
விருப்பு, வெறுப்பின் காரணமாக எதையும் பேசுவதில்லை - கோலி கருத்துக்கு கவாஸ்கரின் பதில்!
நாங்கள் உங்கள் அளவிற்கு கிரிக்கெட்டை விளையாடாவில்லாலும், ஏதோ கொஞ்சம் கிரிக்கெட்டை விளையாடியுள்ளோம் என விராட் கோலியின் கருத்துக்கு சுனில் கவாஸ்கர் தனது பதிலடியை கொடுத்துள்ளார். ...
-
தனக்கு பதில் வேறு வீரருக்கு வாய்ப்பு கொடுங்கள் - உண்மையை உடைத்த கிளென் மேக்ஸ்வெல்!
தனது மோசமான ஃபார்ம் காரணமாக கேப்டன் ஃபாஃப் டு பிளெசிஸுடம் தனக்கு ஓய்வு கொடுத்து, தனக்கு பதில் வேறு வீரரை அணிக்குள் கொண்டு வர வேண்டும் என கூறியதாக கிளென் மேக்ஸ்வெல் தெரிவித்துள்ளார். ...
-
முகமது சிராஜிற்கு ஓய்வளிக்க வேண்டும் - ஹர்பஜன் சிங்!
தொடர்ந்து சொதப்பி வரும் முகமது சிராஜிற்கு ஒரு சில போட்டிகளில் ஓய்வளிக்க வேண்டும் என முன்னாள் வீரர் ஹர்பஜன் சிங் தெரிவித்துள்ளார். ...
-
ஐபிஎல் 2024: காயத்தை சந்தித்த கிளென் மேக்ஸ்வெல்; ஆர்சிபி அணிக்கு பின்னடைவு!
மும்பை இந்தியன்ஸ் அணிக்கு எதிரான லீக் போட்டியின் போது ஆர்சிபி அணியின் நட்சத்திர வீரர் கிளென் மேக்ஸ்வெல் விரலில் காயமடைந்துள்ளார். ...
-
16 வருடமாக ஆர்சிபியின் கதை இதுதான் - அம்பத்தி ராயுடு விமர்சனம்!
பிரபல வீரர்கள் அனைவரும் கேக்கில் உள்ள க்ரீமை மட்டும் சாப்பிட்டுவிட்டு செல்வது போல் ஆட்டமிழந்து வெளியேறுகிறார்கள். அதனால்தான் ஆர்சிபி இன்று வரை ஐபிஎல் தொடரை வெல்லவில்லை என முன்னாள் வீரர் அம்பத்தி ராயுடு விமர்சித்துள்ளார். ...
-
கிறிஸ் கெயில், எம் எஸ் தோனி சாதனையை உடைத்த விராட் கோலி!
ஐபிஎல் தொடர் வரலாற்றில் ஆர்சிபி அணிக்காக அதிக சிக்சர்களை விளாசிய வீரர்கள் பட்டியலில் விராட் கோலி முதலிடம் பிடித்து சாதனை படைத்துள்ளார். ...
-
விராட் கோலியை இமிடேட் செய்த கிளென் மேக்ஸ்வெல்; வைரலாகும் காணொளி!
ஆர்சிபி அணியின் நட்சத்திர வீரர் விராட் கோலி பேட்டிங் செய்வதை போன்றே அவருக்கு பின்னால் நின்று இமிடேட் செய்த கிளென் மேக்ஸ்வெல்லின் காணொளி இணையத்தில் வைரலாகி வருகிறது. ...
-
ஆர்சிபி அணியின் கோ க்ரீன் ஜெர்சி அறிமுகம் செய்த விராட் கோலி!
சுற்றுசுழல் பாதுகாப்பு விழிப்புணர்வை ஏற்படுத்தும் விதமாக ராயல் சேலஞ்சர்ஸ் பெங்களூரு அணி பச்சை நிற ஜெர்சியை இன்று அறிமுகம் செய்துள்ளது. ...
-
கிங் என அழைக்கும்போது மிகவும் சங்கடமாக இருக்கிறது - விராட் கோலி!
நீங்கள் என்னை ‘கிங்’ என்று அழைக்காதீர்கள். நீங்கள் அப்படி அழைக்கும்போது எனக்கு மிகவும் சங்கடமாக இருக்கிறது என நட்சத்திர வீரர் விராட் கோலி தெரிவித்துள்ளார். ...
-
ஐபிஎல் 2024: புதிய ஜெர்சியை அறிமுகப்படுத்தியது ராயல் சேலஞ்சர்ஸ் பெங்களூரு!
ஐபிஎல் தொடரின் 17ஆவது சீசன் இன்னும் சில தினங்களில் நடைபெறவுள்ள நிலையில் ஆர்சிபி அணி தங்களது புதிய ஜெர்சியை இன்று அறிமுகம் செய்துள்ளது. ...
-
இந்த வெற்றி எனக்கு மிகவும் சிறப்பு வாய்ந்த ஒன்று - ஸ்மிருதி மந்தனா!
ஆர்சிபி ரசிகர்களிடமிருந்து 'ஈ சாலா கப் நம்தே' என்ற ஒரு கருத்து எப்போதும் வந்து கொண்டிருக்கும். இனிமேல் அது 'ஈ சாலா கப் நம்து' என மாறும் என ஆர்சிபி மகளிர் அணி கேப்டன் ஸ்மிருதி மந்தனா தெரிவித்துள்ளார். ...
-
கோப்பையை வென்று சாதித்த ஆர்சிபி மகளிர் அணி; வாழ்த்து கூறிய விராட் கோலி!
டபிள்யூபிஎல் தொடரில் கோப்பையை வென்று சாதனை படைத்த ஆர்சிபி மகளிர் அணிக்கு விராட் கோலி வாழ்த்து தெரிவித்த காணொளி இணையத்தில் வைரலாகி வருகிறது. ...
Cricket Special Today
-
- 18 Mar 2024 07:47
-
- 16 Mar 2024 07:24