Sri lanka tour
ENG vs SL, 1st Test: முதல் இன்னிங்ஸில் 236 ரன்களுக்கு ஆல் அவுட்டான இலங்கை; இங்கிலாந்து நிதானம்!
இலங்கை அணி இங்கிலாந்தில் சுற்றுப்பயணம் மேற்கொண்டு 3 போட்டிகள் கொண்ட டெஸ்ட் தொடரில் விளையாடவுள்ளது. இதில் இரு அணிகளுக்கும் இடையேயான முதலாவது டெஸ்ட் போட்டியான்னது இன்று மான்செஸ்டரில் உள்ள ஓல்ட் டிராஃபோர்ட் மைதானத்தில் நடைபெற்றது. இப்போட்டிக்கான இரு அணிகளின் பிளேயிங் லெவனும் நேற்றைய தினமே அறிவிக்கப்பட்டிருந்தது. இந்நிலையில் இப்போட்டியில் டாஸ் வென்ற இலங்கை அணி முதலில் பேட்டிங் செய்வதாக அறிவித்தது. இதனையடுத்து, களமிறங்கிய இலங்கை அணிக்கு எதிர்பார்த்த தொடக்கம் கிடைக்கவில்லை.
அணியின் தொடக்க வீரர்கள் திமுத் கருணரத்னே 2 ரன்களிலும், நிஷன் மதுஷ்கா 4 ரன்களிலும் என விக்கெட்டை இழக்க, அடுத்து களமிறங்கிய ஏஞ்சலோ மேத்யூஸும் ரன்கள் ஏதுமின்றி விக்கெட்டை இழந்தார். அவர்களைத்தொடர்ந்து 24 ரன்களில் குசால் மெண்டிஸும் , 17 ரன்களில் தினேஷ் சண்டிமாலும், 12 ரன்களில் குசால் மெண்டிஸும், 10 ரன்களில் பிரபாத் ஜெயசூர்யாவும் என அடுத்தடுத்து விக்கெட்டுகளை இழந்து பெவிலியனுக்கு நடையைக் கட்டினர். இதனால் இலங்கை அணியானது 113 ரன்களுக்கு 7 விக்கெட்டுகளை இழந்து தடுமாறியது.
Related Cricket News on Sri lanka tour
-
இங்கிலாந்து vs இலங்கை, முதல் டெஸ்ட் - போட்டிக்கு முன் இரு அணி கேப்டன்களும் கூறியது என்ன?
இங்கிலாந்து - இலங்கை அணிகளுக்கு இடையேயான முதல் டெஸ்ட் போட்டியானது இன்று நடைபெறவுள்ள நிலையில் இரு அணி கேப்டன்களும் செய்தியாளர்களைச் சந்தித்து தங்கள் அணி குறித்த கருத்துகளை தெரிவித்துள்ளனர். ...
-
ENG vs SL, 1st Test: இலங்கை அணியின் பிளேயிங் லெவன் அறிவிப்பு!
இங்கிலாந்து அணிக்கு எதிரான முதல் டெஸ்ட் போட்டியில் விளையாடும் இலங்கை அணியின் பிளேயிங் லெவனை அந்நாட்டு கிரிக்கெட் வாரியம் இன்று அறிவித்துள்ளடு. ...
-
இலங்கை டெஸ்ட் தொடரில் சில சாதனைகளை தகர்க்க காத்திருக்கும் ஜோ ரூட்!
இலங்கை அணிக்கு எதிரான டெஸ்ட் தொடரில் விளையாடுவதன் மூலம் இங்கிலாந்து அணியின் நட்சத்திர வீரர் ஜோ ரூட் சில சாதனைகளை முறியடிக்கும் வாய்ப்பினை பெற்றுள்ளார். ...
-
இங்கு ரன்களை எடுப்பது சவாலானது - சனத் ஜெயசூர்யா!
எங்களுக்கு தேவையான பணியாளர்கள் எங்களிடம் உள்ளனர், ஆனாலும் இத்தொடரை வெற்றிபெற நாங்கள் கடுமையாக போராட வேண்டும் என்று இலங்கை பயிற்சியாளர் சனத் ஜெயசூர்யா தெரிவித்துள்ளார். ...
-
ENG vs SL, 1st Test: இங்கிலாந்து அணியின் பிளேயிங் லெவன் அறிவிப்பு; லாரன்ஸ், பாட்ஸுக்கு வாய்ப்பு!
இலங்கை அணிக்கு எதிரான முதல் டெஸ்ட் போட்டியில் விளையாடும் இங்கிலாந்து அணியின் பிளேயிங் லெவன் இன்று அறிவிக்கப்பட்டுள்ளது. ...
-
தி ஹண்ட்ரட் கிரிக்கெட் தொடரில் இருந்து விலகினார் கஸ் அட்கின்சன்!
தி ஹண்ட்ரட் கிரிக்கெட் தொடரின் இறுதிப்போட்டி நாளை நடைபெறவுள்ள நிலையில், ஓவல் இன்விசிபில் அணியில் இடம்பிடித்திருந்த இங்கிலாந்து வேகப்பந்து வீச்சாளர் கஸ் அட்கின்சன் தொடரில் இருந்து விலகியுள்ளார். ...
-
இலங்கை டெஸ்ட் தொடரில் இருந்து பென் ஸ்டோக்ஸ் விலகல்; கேப்டனாக ஒல்லி போப் நியமனம்!
இலங்கை அணிக்கு எதிரான டெஸ்ட் தொடரில் இருந்து காயம் காரணமாக இங்கிலாந்து அணி கேப்டன் பென் ஸ்டோக்ஸ் விலகுவதாக அறிவித்துள்ளார். ...
-
இலங்கை அணியின் பேட்டிங் பயிற்சியாளராக இயன் பெல் நியமனம்!
இங்கிலாந்து டெஸ்ட் தொடருக்கான இலங்கை அணியின் பேட்டிங் பயிற்சியாளராக இங்கிலாந்து முன்னாள் வீரர் இயன் பெல்லை இலங்கை கிரிக்கெட் வாரியம் நியமித்துள்ளது. ...
-
ENG vs SL, Test: இங்கிலாந்து அணிக்கு தொடரும் பின்னடைவு; மேலும் ஒரு ஆல் ரவுண்டருக்கு காயம்!
இங்கிலாந்து அணியின் வேகப்பந்து வீச்சு ஆல் ரவுண்டர் கிறிஸ் வோக்ஸ் காயம் காரணமாக தி ஹண்ட்ரட் கிரிக்கெட் தொடரில் இருந்து விலகியுள்ளார். ...
-
பாகிஸ்தானுக்கு எதிராக வாய்ப்பு கிடைக்காதது உண்மையில் ஏமாற்றம் அளித்தது- ஜோர்டன் காக்ஸ்!
இலங்கை அணிக்கு எதிரான டெஸ்ட் தொடருக்கான இங்கிலாந்து அணியில் வாய்ப்பு கிடைத்தது குறித்து அந்த அணியின் அறிமுக வீரர் ஜோர்டன் காக்ஸ் தனது கருத்தை தெரிவித்துள்ளார். ...
-
இலங்கை தொடருக்கு முன் பின்னடைவை சந்தித்த இங்கிலாந்து; தொடரில் இருந்து விலகுகிறாரா பென் ஸ்டோக்ஸ்?
தி ஹண்ட்ரட் கிரிக்கெட் தொடரில் காயமடைந்த இங்கிலாந்து டெஸ்ட் அணி கேப்டன் பென் ஸ்டோக்ஸ், இலங்கைக்கு எதிரான டெஸ்ட் தொடரில் இருந்து விலக வாய்ப்புள்ளதாக தகவல்கள் வெளியாகியுள்ளன. ...
-
ENG vs SL: பாதுகாப்பு அச்சுறுத்தலுக்கு மத்தியில் இங்கிலாந்து சென்றடைந்த இலங்கை அணி!
இங்கிலாந்து அணிக்கு எதிரான மூன்று போட்டிகள் கொண்ட டெஸ்ட் தொடரில் விளையாடும் இலங்கை அணி இன்று இங்கிலாந்து சென்றடைந்தது. ...
-
ENG vs SL: பாதுகாப்பு குறித்து கவலை தெரிவித்த இலங்கை அணி வீரர்கள்!
இங்கிலாந்து செல்லவுள்ள இலங்கை அணியானது தற்சமயம் அங்கு நடைபெற்றுவரும் நாடு தழுவிய புலம்பெயர்ந்தோருக்கு எதிரான போராட்டங்கள் மற்றும் கலவரங்களால் தங்கள் பாதுகாப்பு குறித்து கவலையை வெளிப்படுத்தியுள்ளனர். ...
-
ENG vs SL: இலங்கை டெஸ்ட் அணி அறிவிப்பும்; ஜெஃப்ரி வண்டர்சேவுக்கு இடம்!
இங்கிலாந்துக்கு எதிரான மூன்று போட்டிகள் கொண்ட டெஸ்ட் தொடரில் விளையாடும் இலங்கை அணியை அந்நாட்டு கிரிக்கெட் வாரியம் இன்று அறிவித்துள்ளது. ...
Cricket Special Today
-
- 18 Mar 2024 07:47
-
- 16 Mar 2024 07:24