That test
WI vs SA, 1st Test: சதத்தை தவறவிட்ட பவுமா, ஸோர்ஸி; வலிமையான நிலையில் தென் ஆப்பிரிக்க அணி!
வெஸ்ட் இண்டீஸில் சுற்றுப்பயணம் மேற்கொண்டு வரும் தென் ஆப்பிரிக்க அணி 2 போட்டிகள் கொண்ட டெஸ்ட் தொடரில் விளையாடவுள்ளது. அதன்படி இவ்விரு அணிகளுக்கும் இடையேயான முதலாவது டெஸ்ட் போட்டியானது ஆகஸ்ட் 07ஆம் தேதி டிரினிடாட்டில் உள்ள குயின்ஸ் பார்க் ஓவல் மைதானத்தில் தொடங்கியது. இப்போட்டியில் டாஸ் வென்ற தென் ஆப்பிரிக்க அணியானது முதலில் பேட்டிங் செய்வதாக அறிவித்தது. அதன்படி களமிறங்கிய தென் ஆப்பிரிக்க அணி முதல் நாளில் 45 ரன்கள் எடுத்திருந்த நிலையில் மழை குறுக்கிட்டதன் காரணமாக முதல் நாள் ஆட்டமானது கைவிடப்பட்டது.
இதனையடுத்து நேற்று தொடங்கிய இரண்டாம் நாள் ஆட்டத்தில் அணியின் தொடக்க வீரர் டோனி டி ஸோர்ஸி ஒருப்பக்கம் சிறப்பான ஆட்டத்தை வெளிப்படுத்த, மறுமுனையில் விளையாடிய டிரிஸ்டன் ஸ்டப்ஸ் 20 ரன்களுடன் விக்கெட்டை இழந்தார். அதன்பின் இணைந்த கேப்டன் டெம்பா பவுமா பொறுப்பான ஆட்டத்தை வெளிப்படுத்தியதுடன் அணியின் ஸ்கோரையும் மளமளவென உயர்த்தினார். மறுமுனையில் சிறப்பாக விளையாடி அரைசதம் கடந்திருந்த டோனி டி ஸோர்ஸி சதமடிப்பார் என எதிர்பார்க்கப்பட்ட நிலையில் 7 பவுண்டரி, 2 சிக்ஸர்கள் என 78 ரன்களைச் சேர்த்த நிலையில் ஆட்டமிழந்தார்.
Related Cricket News on That test
-
WI vs SA, 1st Test: அதிரடி காட்டிய ஸோர்ஸி; மழையால் போட்டி தொடர்வதில் தாமதம்!
வெஸ்ட் இண்டீஸ் - தென் ஆப்பிரிக்க அணிகளுக்கு இடையேயான முதல் டெஸ்ட் போட்டி நடபெற்றுவரும் நிலையில் மழை காரணமாக இப்போட்டியானது தாமதமாகியுள்ளது. ...
-
WI vs SA, 1st Test: வெஸ்ட் இண்டீஸ் பிளேயிங் லெவன் அறிவிப்பு; அறிமுக வீரருக்கு லெவனில் இடம்!
தென் ஆப்பிரிக்க அணிக்கு எதிரான முதல் டெஸ்ட் போட்டியில் விளையாடும் வெஸ்ட் இண்டீஸ் அணியின் பிளேயிங் லெவன் இன்று அறிவிக்கப்பட்டுள்ள நிலையில், இந்த அணியில் அறிமுக வீரர் கேசி கார்டிக்கு வாய்ப்பு வழங்கப்பட்டுள்ளது. ...
-
மைக்கேல் ஹோல்டிங் சாதனையை முறியடிக்க காத்திருக்கும் ஜேசன் ஹோல்டர்!
தென் ஆப்பிரிக்க அணிக்கு எதிரான முதல் டெஸ்ட் போட்டியில் வெஸ்ட் இண்டீஸ் வீரர் ஜேசன் ஹோல்டர் 7 விக்கெட்டுகளை கைப்பற்றும் பட்சத்தில் அந்த அணியின் முன்னாள் வீரர் மைக்கேல் ஹோல்டிங்கின் வாழ்நாள் சாதனையை முறியடிக்கும் வாய்ப்பு கிடைத்துள்ளது. ...
-
வெஸ்ட் இண்டீஸ் vs தென் ஆப்பிரிக்கா, முதல் டெஸ்ட் போட்டி - உத்தேச லெவன் & ஃபேண்டஸி லெவன் டிப்ஸ்!
வெஸ்ட் இண்டீஸ் - தென் ஆப்பிரிக்க அணிகளுக்கு இடையேயான முதலாவது டெஸ்ட் போட்டி நாளை டிரினிடாட்டில் நடைபெறவுள்ளது. ...
-
நடத்தை விதிகளை மீறியதாக ஹாரி டெக்டருக்கு அபராதம் விதித்த ஐசிசி!
ஜிம்பாப்வே அணிக்கு எதிரான டெஸ்ட் போட்டியின் போது நடத்தை விதிகளை மீறியதாக அயர்லாந்து வீரர் ஹாரி டெக்டருக்கு போட்டி கட்டணத்தில் இருந்து 15 சதவீதம் அபராதம் விதிக்கப்பட்டுள்ளது. ...
-
ENG vs WI: உலக டெஸ்ட் சாம்பியன்ஷிப் தொடருக்கான புதுப்பிக்கப்பட்ட புள்ளிப்பட்டியல்!
இங்கிலாந்து - வெஸ்ட் இண்டீஸ் அணிகளுக்கு இடையேயான மூன்று போட்டிகள் கொண்ட டெஸ்ட் தொடர் முடிவடைந்துள்ள நிலையில் புதுபிக்கப்பட்ட உலக டெஸ்ட் சாம்பியஷிப் புள்ளிப்பட்டியலை ஐசிசி வெளியிட்டுள்ளது. ...
-
ரோஹித் தலைமையில் சாம்பியன்ஸ் கோப்பை, உலக டெஸ்ட் சாம்பியன்ஷிப்பை வெல்வோம் - ஜெய் ஷா!
ரோஹித் சர்மா தலைமையில் அடுத்து வரவுள்ள சாம்பியன்ஸ் கோப்பை மற்றும் உலக டெஸ்ட் சாம்பியன்ஷிப் தொடர்களிலும் இந்திய அணி கோப்பையை வெல்லும் என பிசிசிஐ செயலாளர் ஜெய் ஷா தெரிவித்துள்ளார். ...
-
INDW vs SAW, Test: தென் ஆப்பிரிக்க அணியை வீழ்த்தி அபார வெற்றியைப் பெற்றது இந்தியா!
தென் ஆப்பிரிக்க மகளிர் அணிக்கு எதிரான டெஸ்ட் போட்டியில் இந்திய மகளிர் அணி 10 விக்கெட் வித்தியாசத்தில் அபார வெற்றியைப் பதிவுசெய்து அசத்தியுள்ளது. ...
-
சர்வதேச மகளிர் கிரிக்கெட்டில் வரலாற்று சாதனை நிகழ்த்திய லாரா வோல்வார்ட்!
சர்வதேச மகளிர் கிரிக்கெட் வரலாற்றில் ஒரே ஆண்டில் மூன்று வடிவிலான கிரிக்கெட் போட்டிகளிலும் சதமடித்த முதல் வீராக்கனை எனும் சாதனையை தென் ஆப்பிரிக்க அணி கேப்டன் லாரா வோல்வார்ட் படைத்துள்ளார். ...
-
INDW vs SAW, Test: ஃபாலோ ஆனில் தோல்வியைத் தவிர்க்க போராடும் தென் ஆப்பிரிக்க மகளிர் அணி!
இந்திய மகளிர் அணிக்கு எதிரான டெஸ்ட் போட்டியில் தென் ஆப்பிரிக்க அணி ஃபாலோ ஆனில் 2 விக்கெட் இழப்பிற்கு 232 ரன்களைச் சேர்த்துள்ளது. ...
-
INDW vs SAW, Test: விக்கெட்டுகளை இழந்து தடுமாறும் தென் ஆப்பிரிக்க; வலிமையான நிலையில் இந்தியா!
இந்திய மகளிர் அணிக்கு எதிரான டெஸ்ட் போட்டியின் இரண்டாம் நாள் ஆட்டநேர முடிவில் தென் ஆப்பிரிக்க மகளிர் அணி 4 விக்கெட் இழப்பிற்கு 236 ரன்களைச் சேர்த்துள்ளது. ...
-
INDW vs SAW, Test: ஷஃபாலி இரட்டை சதம்; ஸ்மிருதி சதம் - வரலாறு படைத்த இந்திய அணி!
தென் ஆப்பிரிக்க மகளிர் அணிக்கு எதிரான டெஸ்ட் போட்டியின் முதல்நாள் ஆட்டநேர முடிவில் இந்திய மகளிர் அணி 4 விக்கெட் இழப்பிற்கு 525 ரன்களைச் சேர்த்து சாதனை படைத்துள்ளது. ...
-
சர்வதேச மகளிர் கிரிக்கெட்டில் புதிய வரலாறு படைத்த ஸ்மிருதி மந்தனா! பார்ட்னர்ஷிப்பிலும் தொடக்க ஜோடி சாதனை!
சர்வதேச மகளிர் கிரிக்கெட் வரலாற்றில் உள்ளூர் மற்றும் வெளிநாடுகளில் இரு வகையிலான கிரிக்கெட் போட்டிகளிலும் (டெஸ்ட் & ஒருநாள்)சதமடித்த முதல் இந்திய வீராங்கனை எனும் சாதனை ஸ்மிருதி மந்தனா படைத்துள்ளார். ...
-
இந்திய மகளிர் vs தென் ஆப்பிரிக்க மகளிர், டெஸ்ட் - உத்தேச லெவன் & ஃபேண்டஸி லெவன்!
இந்தியா - தென் ஆப்பிரிக்க மகளிர் அணிகளுக்கு இடையேயான டெஸ்ட் போட்டியானது நாளை சென்னையில் உள்ள சேப்பாக்கம் கிரிக்கெட் மைதானத்தில் நடைபெறவுள்ளது. ...
Cricket Special Today
-
- 12 Jun 2025 01:27
-
- 18 Mar 2024 07:47